திருவோத்தூர்:

<– தொண்டை நாடு

(குறிப்பு: திருஞானசம்பந்தரால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)

சம்பந்தர் தேவாரம்:

(1)
பூத்தேர்ந்தாயன கொண்டு நின் பொன்னடி
ஏத்தாதார் இல்லை எண்ணுங்கால்
ஓத்தூர் மேய ஒளிமழு வாள்அங்கைக்
கூத்தீர் உம்ம குணங்களே
(2)
இடையீர் போகா இளமுலையாளை ஓர்
புடையீரே, புள்ளி மானுரி
உடையீரே, உம்மை ஏத்துதும் ஓத்தூர்ச்
சடையீரே உம தாளே
(3)
உள்வேர் போல நொடிமையினார் திறம்
கொள்வீர், அல்குலோர் கோவணம்
ஒள் வாழைக்கனி தேன்சொரி ஓத்தூர்க்
கள்வீரே உம காதலே
(4)
தோட்டீரே, துத்தி ஐந்தலை நாகத்தை
ஆட்டீரே, அடியார் வினை
ஓட்டீரே, உம்மை ஏத்துதும் ஓத்தூர்
நாட்டீரே அருள் நல்குமே
(5)
குழையார் காதீர் கொடுமழு வாட்படை
உழையாள்வீர் திருவோத்தூர்
பிழையா வண்ணங்கள் பாடி நின்றாடுவார்
அழையாமே அருள் நல்குமே
(6)
மிக்கார் வந்து விரும்பிப் பலியிடத்
தக்கார் தம்மக்களீர் என்று
உள்காதார் உளரோ திருவோத்தூர்
நக்கீரே அருள் நல்குமே
(7)
தாதார் கொன்றை தயங்கு முடியுடை
நாதாவென்று நலம்புகழ்ந்து
ஓதாதார் உளரோ திருவோத்தூர்
ஆதீரே அருள் நல்குமே
(8)
என்றான் இம்மலை என்ற அரக்கனை
வென்றார் போலும் விரலினால்
ஒன்றார் மும்மதில் எய்தவன் ஓத்தூர்
என்றார் மேல்வினை ஏகுமே
(9)
நன்றா நான்மறையானொடு மாலுமாய்ச்
சென்றார் போலும் திசையெலாம்
ஒன்றா ஒள்ளெரியாய் மிக ஓத்தூர்
நின்றீரே உமை நேடியே
(10)
காரமண் கலிங்கத் துவராடையர்
தேரர் சொல்லவை தேறல்மின்
ஓரம்பால் எயிலெய்தவன் ஓத்தூர்ச்
சீரவன் கழல் சேர்மினே
(11)
குரும்பை ஆண்பனை ஈன்குலை ஓத்தூர்
அரும்பு கொன்றை அடிகளைப்
பெரும்புகலியுண் ஞானசம்பந்தன் சொல்
விரும்புவார் வினை வீடே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page