திருவிற்கோலம்:

<– தொண்டை நாடு

(குறிப்பு: திருஞானசம்பந்தரால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)

சம்பந்தர் தேவாரம்:

(1)
உருவினார், உமையொடும் ஒன்றி நின்றதோர்
திருவினான், வளர்சடைத் திங்கள் கங்கையான்
வெருவி வானவர் தொழ வெகுண்டு நோக்கிய
செருவினான் உறைவிடம் திருவிற்கோலமே
(2)
சிற்றிடை உமையொரு பங்கன், அங்கையில்
உற்றதோர் எரியினன், ஒரு சரத்தினால்
வெற்றிகொள் அவுணர்கள் புரங்கள் வெந்தறச்
செற்றவன் உறைவிடம் திருவிற்கோலமே
(3)
ஐயன், நல்அதிசயன், அயன் விண்ணோர் தொழும்
மையணி கண்டனார், வண்ண வண்ணம் வான்
பையரவல்குலாள் பாகம் ஆகவும்
செய்யவன் உறைவிடம் திருவிற்கோலமே
(4)
விதைத்தவன் முனிவருக்கற முன், காலனை
உதைத்தவன், உயிரிழந்துருண்டு வீழ்தரப்
புதைத்தவன், நெடுநகர்ப் புரங்கள் மூன்றையும்
சிதைத்தவன் உறைவிடம் திருவிற்கோலமே
(5)
முந்தினான் மூவருள் முதல்வன் ஆயினான்
கொந்துலா மலர்ப்பொழில் கூக மேவினான்
அந்திவான் பிறையினான், அடியர் மேல்வினை
சிந்துவான் உறைவிடம் திருவிற்கோலமே.
(6)
தொகுத்தவன் அருமறை அங்கம் ஆகமம்
வகுத்தவன் வளர்பொழில் கூக மேவினான்
மிகுத்தவன் மிகுத்தவர் புரங்கள் வெந்தறச்
செகுத்தவன் உறைவிடம் திருவிற்கோலமே
(7)
விரித்தவன் அருமறை, விரிசடை வெள்ளம்
தரித்தவன், தரியலர் புரங்கள் ஆசற
எரித்தவன், இலங்கையர் கோன் இடர்படச்
சிரித்தவன் உறைவிடம் திருவிற்கோலமே
(8)
(9)
திரிதரு புரம்எரி செய்த சேவகன்
வரிஅரவொடு மதி சடையில் வைத்தவன்
அரியொடு பிரமனதாற்றலால் உருத்
தெரியலன் உறைவிடம் திருவிற்கோலமே
(10)
சீர்மையில் சமணொடு சீவரக்கையர்
நீர்மைஇல் உரைகள் கொள்ளாத நேசர்க்குப்
பார்மலி பெருஞ்செல்வம் பரிந்து நல்கிடும்
சீர்மையினான் இடம் திருவிற்கோலமே
(11)
கோடல் வெண்பிறையனைக் கூக மேவிய
சேடன செழுமதில் திருவிற்கோலத்தை
நாடவல்ல தமிழ்ஞான சம்பந்தன
பாடல் வல்லார்களுக்கில்லை பாவமே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page