திருவல்லம்:

<– தொண்டை நாடு

(குறிப்பு: திருஞானசம்பந்தரால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)

சம்பந்தர் தேவாரம்:

(1)
எரித்தவன் முப்புரம் எரியின் மூழ்கத்
தரித்தவன் கங்கையைத் தாழ்சடைமேல்
விரித்தவன் வேதங்கள் வேறுவேறு
தெரித்தவன் உறைவிடம் திருவல்லமே
(2)
தாயவன், உலகுக்குத் தன்னொப்பிலாத்
தூயவன், தூமதி சூடி எல்லாம்
ஆயவன், அமரர்க்கும் முனிவர்கட்கும்
சேயவன் உறைவிடம் திருவல்லமே
(3)
பார்த்தவன் காமனைப் பண்பழியப்
போர்த்தவன் போதகத்தின் உரிவை
ஆர்த்தவன் நான்முகன் தலையைஅன்று
சேர்த்தவன் உறைவிடம் திருவல்லமே
(4)
கொய்தவம் மலரடி கூடுவார்தம்
மைதவழ் திருமகள் வணங்க வைத்துப்
பெய்தவன் பெருமழை உலகமுய்யச்
செய்தவன் உறைவிடம் திருவல்லமே
(5)
சார்ந்தவர்க்கின்பங்கள் தழைக்கும் வண்ணம்
நேர்ந்தவன் நேரிழையோடும் கூடித்
தேர்ந்தவர் தேடுவார் தேடச் செய்தே
சேர்ந்தவன் உறைவிடம் திருவல்லமே
(6)
பதைத்தெழு காலனைப் பாதமொன்றால்
உதைத்தெழு மாமுனிக்குண்மை நின்று
விதிர்த்தெழு தக்கன்தன் வேள்வியன்று
சிதைத்தவன் உறைவிடம் திருவல்லமே
(7)
(8)
இகழ்ந்தரு வரையினை எடுக்கலுற்றாங்கு
அகழ்ந்த வல்லரக்கனை அடர்த்த பாதம்
நிகழ்ந்தவர் நேடுவார் நேடச்செய்தே
திகழ்ந்தவன் உறைவிடம் திருவல்லமே
(9)
பெரியவன் சிறியவர் சிந்தைசெய்ய
அரியவன் அருமறை அங்கமானான்
கரியவன் நான்முகன் காணவொண்ணாத்
தெரியவன் வளநகர் திருவல்லமே
(10)
அன்றிய அமணர்கள் சாக்கியர்கள்
குன்றிய அறவுரை கூறாவண்ணம்
வென்றவன் புலனைந்தும் விளங்கஎங்கும்
சென்றவன் உறைவிடம் திருவல்லமே
(11)
கற்றவர் திருவல்லம் கண்டுசென்று
நற்றமிழ் ஞானசம்பந்தன் சொன்ன
குற்றமில் செந்தமிழ் கூறவல்லார்
பற்றுவர் ஈசன் பொற்பாதங்களே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page