திருமாற்பேறு – அப்பர் தேவாரம் (1):

<– திருமாற்பேறு

(1)
மாணிக்கு உயிர்பெறக் கூற்றை உதைத்தன, மாவலிபால்
காணிக்கிரந்தவன் காண்டற்கரியன, கண்ட தொண்டர்
பேணிக் கிடந்து பரவப் படுவன, பேர்த்தும் அஃதே
மாணிக்கமாவன மாற்பேறுடையான் மலரடியே
(2)
கருடத் தனிப்பாகன் காண்டற்கரியன, காதல் செய்யில்
குருடர்க்கு முன்னே குடிகொண்டிருப்பன, கோலமல்கு
செருடக் கடிமலர்ச் செல்வி தன் செங்கமலக் கரத்தால்
வருடச் சிவப்பன, மாற்பேறுடையான் மலரடியே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page