(குறிப்பு: திருஞானசம்பந்தரால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)
(சம்பந்தர் தேவாரம்):
(1)
பாலுந்துறு திரளாயின பரமன், பிரமன்தான்
போலும் திறலவர் வாழ்தரு பொழில்சூழ் புளமங்கைக்
காலன்திறலறச் சாடிய கடவுள்இடம் கருதில்
ஆலந்துறை தொழுவார்தமை அடையாவினை தானே
(2)
மலையான்மகள் கணவன்மலி கடல்சூழ்தரு தண்மைப்
புலையாயின களைவான் இடம் பொழில்சூழ் புளமங்கைக்
கலையான்மலி மறையோரவர் கருதித் தொழுதேத்த
அலையார்புனல் வருகாவிரி ஆலந்துறை அதுவே
(3)
கறையார் மிடறுடையான், கமழ் கொன்றைச் சடைமுடிமேல்
பொறையார்தரு கங்கைப்புனல் உடையான், புள மங்கைச்
சிறையார்தரு களிவண்டறை பொழில்சூழ் !திருஆலந்
துறையானவன் அறையார்கழல் தொழுமின் துதிசெய்தே
(4)
தணியார்மதி அரவின்னொடு வைத்தான் இட மொய்த்தெம்
பணியாய் அவனடியார் தொழுதேத்தும் புளமங்கை
மணியார்தரு கனகம்அவை வயிரத் திரளோடும்
அணியார்மணல் அணைகாவிரி ஆலந்துறை அதுவே
(5)
மெய்த் தன்னுறும் வினைதீர் வகை தொழுமின், செழுமலரின்
கொத்தின்னொடு சந்தாரகில் கொணர்காவிரிக் கரைமேல்
பொத்தின்இடை ஆந்தைபல பாடும் புளமங்கை
அத்தன்நமை ஆள்வான்இடம் ஆலந்துறை அதுவே
(6)
மன்னானவன், உலகிற்கொரு மழையானவன், பிழையில்
பொன்னானவன், முதலானவன், பொழில்சூழ் புளமங்கை
என்னானவன், இசையானவன், இளஞாயிறின் சோதி
அன்னானவன், உறையும்இடம் ஆலந்துறை அதுவே
(7)
முடியார்தரு சடைமேல்முளை இளவெண்மதி சூடிப்
பொடியாடிய திருமேனியர், பொழில்சூழ் புளமங்கைக்
கடியார்மலர் புனல்கொண்டுதன் கழலே தொழுதேத்தும்
அடியார் தமக்கினியான் இடம் ஆலந்துறை அதுவே
(8)
இலங்கை மனன் முடிதோளிற எழிலார்திரு விரலால்
விலங்கல்இடை ஆடர்த்தான் இடம், வேதம் பயின்றேத்திப்
புலன்கள்தமை வென்றார் புகழ் அவர்வாழ் புளமங்கை
அலங்கல்மலி சடையான்இடம் ஆலந்துறை அதுவே
(9)
செறியார்தரு வெள்ளைத் திருநீற்றின் திருமுண்டப்
பொறியார்தரு புரிநூல்வரை மார்பன், புள மங்கை
வெறியார்தரு கமலத்தயன் மாலும்தனை நாடி
அறியாவகை நின்றான்இடம் ஆலந்துறை அதுவே
(10)
நீதியறி ஆதாரமண் கையரொடு மண்டைப்
போதியவர் ஓதும்உரை கொள்ளார், புளமங்கை
ஆதியவர் கோயில்திரு ஆலந்துறை தொழுமின்
சாதிம்மிகு வானோர்தொழு தன்மை பெறலாமே
(11)
பொந்தின்இடைத் தேனூறிய பொழில்சூழ் புளமங்கை
அந்தண்புனல் வருகாவிரி ஆலந்துறையானைக்
கந்தம்மலி கமழ்காழியுள் கலைஞான சம்பந்தன்
சந்தம்மலி பாடல்சொலி ஆடத் தவமாமே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...