திருநின்றியூர் – சம்பந்தர் தேவாரம்:

<– திருநின்றியூர்

(1)
சூலம்படை, சுண்ணப் பொடி, சாந்தம் சுடுநீறு
பால்அம்மதி பவளச்சடை முடிமேலது, பண்டைக்
காலன்வலி காலின்னொடு போக்கிக், கடிகமழும்
நீலம்மலர்ப் பொய்கை நின்றியூரில் நிலையோர்க்கே
(2)
அச்சம்இலர் பாவம்இலர் கேடும்இலர், அடியார்
நிச்சம்உறு நோயும்இலர், தாமும் நின்றியூரில்
நச்சம் மிடறுடையார் நறுங்கொன்றை நயந்தாளும்
பச்சம்உடை அடிகள் திருப்பாதம் பணிவாரே
(3)
பறையின்ஒலி, சங்கின்ஒலி, பாங்காரவும்ஆர
அறையும்ஒலி எங்கும்அவை அறிவார்அவர் தன்மை
நிறையும்புனல் சடைமேலுடை அடிகள் நின்றியூரில்
உறையும்இறை அல்லது எனதுள்ளம் உணராதே
(4)
பூண்டவ்வரை மார்பில் புரிநூலன், விரி கொன்றை
ஈண்ட அதனோடும் ஒருபாலம்மதி அதனைத்
தீண்டும் பொழில் சூழ்ந்த திருநின்றியது தன்னில்
ஆண்டகழல் தொழல் அல்லது அறியாரவர் அறிவே
(5)
குழலின்இசை வண்டின்இசை கண்டுகுயில் கூவும்
நிழலின்எழில் தாழ்ந்த பொழில் சூழ்ந்த நின்றியூரில்
அழலின் வலன் அங்கையது ஏந்தி அனலாடும்
கழலின்ஒலி ஆடும்புரி கடவுள் களைகண்ணே
(6)
மூரல் முறுவல் வெண்ணகை உடையாளொரு பாகம்
சாரல் மதி அதனோடுடன் சலவஞ்சடை வைத்த
வீரன் மலி அழகார்பொழில் மிடையும் !திருநின்றி
யூரன் கழல் அல்லாதெனது உள்ளம் உணராதே
(7)
பற்றியொரு தலை கையினில் ஏந்திப்பலி தேரும்
பெற்றியது ஆகித்திரி தேவர் பெருமானார்
சுற்றியொரு வேங்கை அதளோடும் பிறை சூடும்
நெற்றியொரு கண்ணார் நின்றியூரில் நிலையாரே
(8)
(9)
நல்லம்மலர் மேலானொடு ஞாலம்அது உண்டான்
அல்லரென ஆவரென நின்றும் அறிவரிய
நெல்லின்பொழில் சூழ்ந்த நின்றியூரில் நிலையார்எம்
செல்வர்அடி அல்லாதென சிந்தை உணராதே
(10)
நெறியில்வரு பேராவகை நினையா நினைவொன்றை
அறிவில் சமண் ஆதர்உரை கேட்டும் அயராதே
நெறியில் அவர் குறிகள் நினையாதே நின்றியூரில்
மறியேந்திய கையான்அடி வாழ்த்தும்அது வாழ்த்தே
(11)
குன்றம்அது எடுத்தான்உடல் தோளும் நெரிவாக
நின்றங்கொரு விரலால்உற வைத்தான் நின்றியூரை
நன்றார்தரு புகலித்தமிழ் ஞானம்மிகு பந்தன்
குன்றாத் தமிழ் சொல்லக் குறைவின்றி நிறை புகழே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page