(1)
நீள நினைந்தடியேன் உனை நித்தலும் கைதொழுவேன்
வாளன கண்மடவாள் அவள் வாடி வருந்தாமே
கோளிலி எம்பெருமான் குண்டையூர்ச் சில நெல்லுப் பெற்றேன்
ஆளிலை எம்பெருமான் அவை அட்டித் தரப்பணியே
(2)
வண்டமரும் குழலாள் உமைநங்கை ஓர் பங்குடையாய்
விண்டவர்தம் புரமூன்று எரிசெய்த எம் வேதியனே
தெண்திரை நீர்வயல்சூழ் திருக்கோளிலி எம்பெருமான்
அண்டமதாயவனே அவை அட்டித் தரப்பணியே
(3)
பாதிஓர் பெண்ணை வைத்தாய், படரும் சடைக் கங்கை வைத்தாய்
மாதர் நல்லார் வருத்தம் அது நீயும் அறிதியன்றே
கோதில் பொழில் புடைசூழ் குண்டையூர்ச் சில நெல்லுப் பெற்றேன்
ஆதியே அற்புதனே அவை அட்டித் தரப்பணியே
(4)
சொல்லுவதென் உனைநான் தொண்டைவாய் உமைநங்கையை நீ
புல்கி இடத்தில் வைத்தாய்க்கு ஒரு பூசல் செய்தார் உளரோ
கொல்லை வளம்புறவில் குண்டையூர்ச் சில நெல்லுப் பெற்றேன்
அல்லல் களைந்தடியேற்கு அவை அட்டித் தரப்பணியே
(5)
முல்லை முறுவல்உமை ஒரு பங்குடை முக்கணனே
பல்லயர் வெண்தலையில் பலிகொண்டுழல் பாசுபதா
கொல்லை வளம்புறவில் திருக்கோளிலி எம்பெருமான்
அல்லல் களைந்தடியேற்கு அவை அட்டித் தரப்பணியே
(6)
குரவமரும் குழலாள் உமைநங்கை ஓர் பங்குடையாய்
பரவை பசி வருத்தம் அது நீயும் அறிதியன்றே
குரவமரும் பொழில்சூழ் குண்டையூர்ச்சில நெல்லுப் பெற்றேன்
அரவம் அசைத்தவனே அவை அட்டித் தரப்பணியே
(7)
எம்பெருமான் உனையே நினைந்தேத்துவன் எப்பொழுதும்
வம்பமரும் குழலாள் ஒரு பாகம் அமர்ந்தவனே
செம்பொனின் மாளிகைசூழ் திருக்கோளிலி எம்பெருமான்
அன்பது வாய் அடியேற்கவை அட்டித் தரப்பணியே
(8)
அரக்கன் முடிகரங்கள் அடர்த்திட்ட எம் ஆதிப்பிரான்
பரக்கும் அரவல்குலாள் பரவைஅவள் வாடுகின்றாள்
குரக்கினங்கள் குதிகொள் குண்டையூர்ச்சில நெல்லுப் பெற்றேன்
இரக்கமதாய் அடியேற்கவை அட்டித் தரப்பணியே
(9)
பண்டைய மால்பிரமன் பறந்தும் இடந்தும் அயர்ந்தும்
கண்டிலராய் அவர்கள் கழல் காண்பரிதாய பிரான்
தெண்திரை நீர்வயல்சூழ் திருக்கோளிலி எம்பெருமான்
அண்டமதாயவனே அவை அட்டித் தரப்பணியே
(10)
கொல்லை வளம்புறவில் திருக்கோளிலி மேயவனை
நல்லவர் தாம்பரவும் திருநாவலவூரன் அவன்
நெல்லிட ஆட்கள்வேண்டி நினைந்தேத்திய பத்தும் வல்லார்
அல்லல் களைந்து உலகில் அண்டர் வானுலகு ஆள்பவரே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...