(குறிப்பு: திருஞானசம்பந்தரால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)
(சம்பந்தர் தேவாரம்):
(1)
திடமலி மதிலணி சிறுகுடி மேவிய
படமலி அரவுடையீரே
படமலி அரவுடையீர் உமைப் பணிபவர்
அடைவதும் அமருலகதுவே
(2)
சிற்றிடையுடன் மகிழ் சிறுகுடி மேவிய
சுற்றிய சடைமுடியீரே
சுற்றிய சடைமுடியீர் உமதொழு கழல்
உற்றவர் உறுபிணி இலரே
(3)
தெள்ளிய புனலணி சிறுகுடி மேவிய
துள்ளிய மானுடையீரே
துள்ளிய மானுடையீர் உம தொழுகழல்
உள்ளுதல் செய நலமுறுமே
(4)
செந்நெல வயலணி சிறுகுடி மேவிய
ஒன்னலர் புரமெரித்தீரே
ஒன்னலர் புரமெரித்தீர் உமை உள்குவார்
சொல்நலம் உடையவர் தொண்டே
(5)
செற்றினில் மலிபுனல் சிறுகுடி மேவிய
பெற்றிகொள் பிறைமுடியீரே
பெற்றிகொள் பிறைமுடியீர் உமைப் பேணிநஞ்சு
அற்றவர் அருவினை இலரே
(6)
செங்கயல் புனலணி சிறுகுடி மேவிய
மங்கையை இடமுடையீரே
மங்கையை இடமுடையீர் உமை வாழ்த்துவார்
சங்கையதிலர் நலர் தவமே
(7)
செறிபொழில் தழுவிய சிறுகுடி மேவிய
வெறிகமழ் சடைமுடியீரே
வெறிகமழ் சடைமுடியீர் உமைவிரும்பி மெய்
நெறியுணர்வோர் உயர்ந்தோரே
(8)
திசையவர் தொழுதெழு சிறுகுடி மேவிய
தசமுகன் உர நெரித்தீரே
தசமுகன் உர நெரித்தீர் உமைச் சார்பவர்
வசையறும் அது வழிபாடே
(9)
செருவரை வயலமர் சிறுகுடி மேவிய
இருவரை அசைவு செய்தீரே
இருவரை அசைவுசெய்தீர் உமை ஏத்துவார்
அருவினையொடு துயரிலரே
(10)
செய்த்தலை புனலணி சிறுகுடி மேவிய
புத்தரோடமண் புறத்தீரே
புத்தரொடமண் புறத்தீர் உமைப் போற்றுதல்
பத்தர்கள் தம்முடைப் பரிசே
(11)
தேனமர் பொழிலணி சிறுகுடி மேவிய
மானமர் கரமுடையீரே
மானமர் கரமுடையீர் உமை வாழ்த்திய
ஞானசம்பந்தன தமிழே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...