அவிநாசி:

<– கொங்கு நாடு

(குறிப்பு: சுந்தரரால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)
 

(சுந்தரர் தேவாரம்):

(1)
எற்றான் மறக்கேன் எழுமைக்கும் எம்பெருமானையே
உற்றாய் என்று உன்னையே உள்குகின்றேன் உணர்ந்துள்ளத்தால்
புற்றாடு அரவா புக்கொளியூர் அவினாசியே
பற்றாக வாழ்வேன் பசுபதியே பரமேட்டியே
(2)
வழிபோவார் தம்மோடும் வந்துடன் கூடிய மாணிநீ
ஒழிவதழகோ சொல்லாய் அருளோங்கு சடையானே
பொழிலாரும் சோலைப் புக்கொளியூரில் குளத்திடை
இழியாக் குளித்த மாணி என்னைக் கிறி செய்ததே
(3)
எங்கேனும் போகினும் எம்பெருமானை நினைந்தக்கால்
கொங்கே புகினும் கூறைகொண்டாறலைப்பார்இலை
பொங்காடு அரவா புக்கொளியூர் அவினாசியே
எங்கோனே உனை வேண்டிக்கொள்வேன் பிறவாமையே
(4)
உரைப்பார் உரை உகந்துள்க வல்லார் தங்கள் உச்சியாய்
அரைக்காடு அரவா ஆதியும் அந்தமும் ஆயினாய்
புரைக்காடு சோலைப் புக்கொளியூர் அவினாசியே
கரைக்கால் முதலையைப் பிள்ளை தரச்சொல்லு காலனையே
(5)
அரங்காவதெல்லாமாய் இடுகாடதன்றியும்
சரங்கோலை வாங்கி வரிசிலை நாணியில் சந்தித்துப்
புரங்கோட எய்தாய் புக்கொளியூர் அவினாசியே
குரங்காடு சோலைக் கோயில்கொண்ட குழைக்காதனே
(6)
நாத்தானும் உனைப் பாடலன்றி நவிலாதுஎனாச்
சோத்தென்று தேவர் தொழநின்ற சுந்தரச் சோதியாய்
பூத்தாழ் சடையாய் புக்கொளியூர் அவினாசியே
கூத்தா உனக்குநான் ஆட்பட்ட குற்றமும் குற்றமே
(7)
மந்தி கடுவனுக்குண் பழம் நாடி, மலைப்புறம்
சந்திகள் தோறும் சலம்புட்பம் இட்டு வழிபடப்
புந்தி உறைவாய் புக்கொளியூர் அவினாசியே
நந்தி உனை வேண்டிக் கொள்வேன் நரகம் புகாமையே
(8)
பேணாதொழிந்தேன் உன்னைஅல்லால் பிற தேவரைக்
காணாதொழிந்தேன் காட்டுதியேல் இன்னம் காண்பன்நான்
பூணாண் அரவா புக்கொளியூர் அவினாசியே
காணாத கண்கள் காட்டவல்ல கறைக் கண்டனே
(9)
நள்ளாறு தெள்ளாறு அரத்துறைவாய் எங்கள் நம்பனே
வெள்ளாடை வேண்டாய், வேங்கையின் தோலை விரும்பினாய்
புள்ளேறு சோலைப் புக்கொளியூரில் குளத்திடை
உள்ளாடப் புக்க மாணி என்னைக் கிறி செய்ததே
(10)
நீரேற ஏறு நிமிர்புன்சடை நின்மல மூர்த்தியைப்
போரேறதேறியைப் புக்கொளியூர் அவினாசியைக்
காரேறு கண்டனைத் தொண்டன் ஆரூரன் கருதிய
சீரேறு பாடல்கள் செப்ப வல்லார்க்கில்லை துன்பமே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page