பாண்டிய நாடு:

மதுரை மாவட்டம்:  

சிவகங்கை மாவட்டம்: 

கொடுங்குன்றம்
திருப்புத்தூர்

திருப்பூவணம்

புதுக்கோட்டை மாவட்டம்:

திருப்புனவாயில்

இராமநாதபுரம் மாவட்டம்:

திருஇராமேச்சுரம் (இராமேஸ்வரம்):

விருதுநகர் மாவட்டம்:

திருச்சுழியல்

தென்காசி மாவட்டம்:

குற்றாலம் (குறும்பலா)

திருநெல்வேலி மாவட்டம்:

திருநெல்வேலி

கானாட்டுமுள்ளூர்

<– சோழ நாடு – காவிரி வடகரை

(குறிப்பு: சுந்தரரால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)

(சுந்தரர் தேவாரம்):

(1)
வள்வாய மதிமிளிரும் வளர் சடையினானை
    மறையவனை, வாய்மொழியை, வானவர் தங்கோனைப்
புள்வாயைக் கீண்டுலகம் விழுங்கி உமிழ்ந்தானைப்
    பொன்னிறத்தின் முப்புரிநூல் நான்முகத்தினானை
முள்வாய மடல்தழுவி முடத்தாழை ஈன்று
    மொட்டலர்ந்து விரைநாறு முருகுவிரி பொழில்சூழ்
கள்வாய கருங்குவளை கண்வளரும் கழனிக்
    கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே
(2)
ஒருமேக முகிலாகி ஒத்துலகம் தானாய்
    ஊர்வனவும் நிற்பனவும் ஊழிகளும் தானாய்ப்
பொருமேவு கடலாகிப் பூதங்கள் ஐந்தாய்ப்
    புனைந்தவனைப் புண்ணியனைப் புரிசடையினானைத்
திருமேவு செல்வத்தார் தீமூன்றும் வளர்த்த
    திருத்தக்க அந்தணர்கள் ஓதுநகர் எங்கும்
கருமேதி செந்தாமரை மேயும் கழனிக்
    கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே.
(3)
இரும்புயர்ந்த மூவிலைய சூலத்தினானை
    இறையவனை மறையவனை எண் குணத்தினானைச்
சுரும்புயர்ந்த கொன்றையொடு தூமதியம் சூடும்
    சடையானை, விடையானைச், சோதியெனும் சுடரை
அரும்புயர்ந்த அரவிந்தத்தணி மலர்களேறி
    அன்னங்கள் விளையாடும் அகல் துறையினருகே
கரும்புயர்ந்து பெருஞ்செந்நெல் நெருங்கிவிளை கழனிக்
    கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே
(4)
பூளைபுனை கொன்றையொடு புரிசடையினானைப்
    புனலாகி அனலாகிப் பூதங்கள் ஐந்தாய்
நாளைஇன்று நெருநலாய் ஆகாயமாகி
    ஞாயிறாய் மதியமாய் நின்றஎம் பரனைப்
பாளைபடு பைங்கமுகின் சூழல் இளந்தெங்கின்
    படுமதம்செய் கொழுந்தேறல் வாய்மடுத்துப் பருகிக்
காளைவண்டு பாட, மயில்ஆலும் வளர்சோலைக்
    கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே
(5)
செருக்குவாய்ப் பைங்கண் வெள்ளரவு அரையினானைத்
    தேவர்கள் சூளாமணியைச் செங்கண் விடையானை
முருக்குவாய் மலரொக்கும் திருமேனியானை
    முன்னிலையாய் முழுதுலகமாய பெருமானை
இருக்குவாய் அந்தணர்கள் எழுபிறப்புள் எங்கும்
    வேள்வியிருந்து இருநிதியம் வழங்கு நகரெங்கும்
கருக்குவாய்ப் பெண்ணையொடு தெங்குமலி சோலைக்
    கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே
(6)
விடையரவக் கொடியேந்தும் விண்ணவர் தங்கோனை
    வெள்ளத்து மாலவனும் வேத முதலானும்
அடியிணையுன் திருமுடியும் காண அரிதாய
    சங்கரனைத், தத்துவனைத், தையல் மடவார்கள்
உடையவிழக் குழலவிழக் கோதை குடைந்தாடக்
    குங்குமங்கள் உந்திவரு கொள்ளிடத்தின் கரைமேல்
கடைகள்விடு வார்குவளை களைவாரும் கழனிக்
    கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே
(7)
அருமணியை முத்தினை, ஆனஞ்சும்ஆடும்
    அமரர்கள்தம் பெருமானை, அருமறையின் பொருளைத்
திருமணியைத் தீங்கரும்பின் ஊறலிரும் தேனைத்
    தெரிவரிய மாமணியைத், திகழ்தரு செம்பொன்னைக்
குருமணிகள் கொழித்திழிந்து சுழித்திழியும் திரைவாய்க்
    கோல்வளையார் குடைந்தாடும் கொள்ளிடத்தின் கரைமேல்
கருமணிகள் போல்நீலம் மலர்கின்ற கழனிக்
    கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே
(8)
இழைதழுவு வெண்ணூலும் மேவுதிரு மார்பின்
    ஈசன்தன் எண்தோள்கள் வீசி எரியாடக்
குழைதழுவு திருக்காதில் கோளரவம் அசைத்துக்
    கோவணம்கொள் குழகனைக் குளிர் சடையினானைத்
தழைதழுவு தண்ணிறத்த செந்நெல் அதன்அயலே
    தடந்தரள மென்கரும்பின் தாழ்கிடங்கின் அருகே
கழைதழுவித் தேன்தொடுக்கும் கழனிசூழ் பழனக்
    கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே
(9)
குனியினிய கதிர்மதியம் சூடு சடையானைக்
    குண்டலஞ்சேர் காதவனை, வண்டினங்கள் பாடப்
பனிஉதிரும் சடையானைப், பால் வெண்ணீற்றானைப்
    பலஉருவும் தன்னுருவேஆய பெருமானைத்
துனியினிய தூயமொழித் தொண்டைவாய் நல்லார்
    தூநீலம் கண்வளரும் சூழ்கிடங்கின் அருகே
கனியினிய கதலிவனம் தழுவுபொழில் சோலைக்
    கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே
(10)
தேவிஅம்பொன் மலைக்கோமான்தன் பாவையாகத்
    தனதுருவம் ஒருபாகம் சேர்த்துவித்த பெருமான்
மேவிய வெந்நரகத்தில்அழுந்தாமை நமக்கு
    மெய்ந்நெறியைத் தான்காட்டும் வேத முதலானைத்
தூவியவாய் நாரையொடு குருகுபாய்ந்தார்ப்பத்
    துறைக்கெண்டை மிளிர்ந்து கயல் துள்ளி விளையாடக்
காவிவாய் வண்டுபல பண்செய்யும் கழனிக்
    கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே
(11)
திரையினார் கடல்சூழ்ந்த தென்னிலங்கைக் கோனைச்
    செற்றவனைச், செஞ்சடைமேல் வெண் மதியினானைக்
கரையினார் புனல்தழுவு கொள்ளிடத்தின் கரைமேல்
    கானாட்டுமுள்ளூரில் கண்டுகழல் தொழுது
உரையினார் மதயானை நாவல்ஆரூரன்
    உரிமையால் உரைசெய்த ஒண்தமிழ்கள் வல்லார்
வரையினார் வகைஞாலம் ஆண்டவர்க்கும் தாம்போய்
    வானவர்க்கும் தலைவராய் நிற்பர்அவர் தாமே

 

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page