சம்பந்தர் தேவாரம்: வானமர் திங்களும் |
அப்பர் தேவாரம்: 1. தளரும் கோளரவத்தொடு 2. ஒருவராய்இரு மூவருமாயவன் |
திருக்கடம்பூர் (மேலக் கடம்பூர்):
Thursday, November 30, 2023
புள்ளிருக்கு வேளூர் (வைத்தீஸ்வரன் கோயில்):
சம்பந்தர் தேவாரம்: கள்ளார்ந்த பூங்கொன்றை |
அப்பர் தேவாரம்: 1. வெள்ளெருக்(கு) அரவம் 2. ஆண்டானை; அடியேனை |
Thursday, November 30, 2023
சீகாழி
Thursday, November 30, 2023
திருமழபாடி – சம்பந்தர் தேவாரம் (2):
(1)
காலையார் வண்டினம் கிண்டிய காருறும்
சோலையார் பைங்கிளி சொற்பொருள் பயிலவே
வேலையார் விடமணி வேதியன் விரும்பிடம்
மாலையார் மதிதவழ் மாமழபாடியே
(2)
கறையணி மிடறுடைக் கண்ணுதல் நண்ணிய
பிறையணி செஞ்சடைப் பிஞ்ஞகன் பேணுமூர்
துறையணி குருகினம் தூமலர் துதையவே
மறையணி நாவினான் மாமழபாடியே
(3)
அந்தணர் வேள்வியும், அருமறைத் துழனியும்
செந்தமிழ்க் கீதமும் சீரினால் வளர்தரப்
பந்தணை மெல் விரலாளொடு பயில்விடம்
மந்தம் வந்துலவு சீர் மாமழபாடியே
(4)
அத்தியின் உரிதனை அழகுறப் போர்த்தவன்
முத்தியாய் மூவரின் முதல்வனாய் நின்றவன்
பத்தியால் பாடிடப் பரிந்தவர்க்கருள்செயும்
அத்தனார் உறைவிடம் அணி மழபாடியே
(5)
கங்கையார் சடையிடைக் கதிர்மதி அணிந்தவன்
வெங்கண்வாள் அரவுடை வேதியன், தீதிலாச்
செங்கயல் கண்ணுமையாளொடும் சேர்விடம்
மங்கைமார் நடம்பயில் மாமழபாடியே
(6)
பாலனார் ஆருயிர் பாங்கினால் உணவரும்
காலனார் உயிர்செகக் காலினால் சாடினான்
சேலினார் கண்ணினாள் தன்னொடும் சேர்விடம்
மாலினார் வழிபடும் மாமழபாடியே
(7)
விண்ணிலார் இமையவர் மெய்ம் மகிழ்ந்தேத்தவே
எண்ணிலார் முப்புரம் எரியுண நகைசெய்தார்
கண்ணினால் காமனைக் கனலெழக் காய்ந்தஎம்
அண்ணலார் உறைவிடம் அணி மழபாடியே
(8)
கரத்தினால் கயிலையை எடுத்த காரரக்கன்
சிரத்தினை ஊன்றலும் சிவனடி சரண்எனா
இரத்தினால் கைந்நரம்பெடுத்திசை பாடலும்
வரத்தினான் மருவிடம் மாமழபாடியே
(9)
ஏடுலா மலர்மிசை அயன், எழில் மாலுமாய்
நாடினார்க்கரிய சீர் நாதனார் உறைவிடம்
பாடெலாம் பெண்ணையின் பழம்விழப் பைம்பொழில்
மாடெலாம் மல்குசீர் மாமழபாடியே
(10)
உறிபிடித்து ஊத்தைவாய்ச் சமணொடு சாக்கியர்
நெறி பிடித்தறிவிலா நீசர்சொல் கொள்ளன்மின்
பொறி பிடித்தரவினம் பூணெனக் கொண்டு ,மான்
மறி பிடித்தான்இடம் மாமழபாடியே
(11)
ஞாலத்தார் ஆதிரை நாளினான், நாள்தொறும்
சீலத்தான் மேவிய திருமழபாடியை
ஞாலத்தான் மிக்கசீர் ஞானசம்பந்தன் சொல்
கோலத்தால் பாடுவார் குற்றமற்றார்களே
Thursday, November 30, 2023
திருவேட்களம்
Thursday, November 30, 2023
திருமழபாடி – சம்பந்தர் தேவாரம் (3):
(1)
அங்கையார் அழலன், அழகார் சடைக்
கங்கையான், கடவுள், இட மேவிய
மங்கையான் உறையும் மழபாடியைத்
தங்கையால் தொழுவார் தகவாளரே
(2)
விதியுமாம் விளைவாம், ஒளிஆர்ந்ததோர்
கதியுமாம் கசிவாம், வசியாற்றமா
மதியுமாம், வலியா மழபாடியுள்
நதியந்தோய் சடை நாதன் நற்பாதமே
(3)
முழவினான், முதுகாடுறை பேய்க்கணக்
குழுவினான், குலவும் கையிலேந்திய
மழுவினான் உறையும் மழபாடியைத்
தொழுமின் உம் துயரானவை தீரவே
(4)
கலையினான், மறையான், கதியாகிய
மலையினான், மருவார் புர மூன்றெய்த
சிலையினான் சேர் திருமழபாடியைத்
தலையினால் வணங்கத் தவமாகுமே
(5)
நல்வினைப் பயன், நான்மறையின் பொருள்
கல்வியாய கருத்தன், உருத்திரன்
செல்வன் மேய திருமழபாடியைப்
புல்கியேத்தும் அது புகழாகுமே
(6)
நீடினார் உலகுக்குயிராய் நின்றான்
ஆடினான் எரி கானிடை மாநடம்
பாடினார் இசை மாமழபாடியை
நாடினார்க்கில்லை நல்குரவானவே
(7)
மின்னினார் இடையாளொரு பாகமாய்
மன்னினான் உறை மாமழபாடியைப்
பன்னினார் இசையால் வழிபாடுசெய்
துன்னினார் வினையாயின ஓயுமே
(8)
தென்இலங்கையர் மன்னன் செழுவரை
தன்னிலங்க அடர்த்தருள் செய்தவன்
மன்னிலங்கிய மாமழபாடியை
உன்னிலங்க உறுபிணி இல்லையே
(9)
திருவின் நாயகனும், செழுந்தாமரை
மருவினானும் தொழத் தழல் மாண்பமர்
உருவினான் உறையும் மழபாடியைப்
பரவினார் வினைப் பற்றறுப்பார்களே
(10)
நலியும் நன்றறியாச் சமண் சாக்கியர்
வலிய சொல்லினும் மாமழபாடியுள்
ஒலிசெய் வார்கழலான் திறம்உள்கவே
மெலியும் நம்முடன் மேல் வினையானவே
(11)
மந்த முந்து பொழில் மழபாடியுள்
எந்தை சந்தம் இனிதுகந்தேத்துவான்
கந்தமார் கடல் காழியுண் !ஞானசம்
பந்தன் மாலை வல்லார்க்கில்லை பாவமே
Thursday, November 30, 2023
திருமழபாடி – சம்பந்தர் தேவாரம் (1):
(1)
களையும் வல்வினை அஞ்சல் நெஞ்சே, கருதார்புரம்
உளையும் பூசல் செய்தான், உயர் மால்வரை நல்விலா
வளைய வெஞ்சரம் வாங்கி எய்தான், மதுத் தும்பிவண்டு
அளையும் கொன்றையந்தார் மழபாடியுள் அண்ணலே
(2)
காச்சிலாத பொன்நோக்கும் கன வயிரத்திரள்
ஆச்சிலாத பளிங்கினன், நஞ்சுமுன் ஆடினான்
பேச்சினால் உமக்காவதென் பேதைகாள் பேணுமின்
வாச்ச மாளிகைசூழ் மழபாடியை வாழ்த்துமே
(3)
உரங்கெடுப்பவன், உம்பர்கள்ஆயவர் தங்களைப்
பரங்கெடுப்பவன், நஞ்சை உண்டு, பகலோன் தனை
முரண் கெடுப்பவன், முப்புரம் தீயெழச் செற்றுமுன்
வரம் கொடுப்பவன் மாமழபாடியுள் வள்ளலே
(4)
பள்ளமார் சடையில் புடையே அடையப் புனல்
வெள்ளம் ஆதரித்தான், விடையேறிய வேதியன்
வள்ளல், மாமழபாடியுள் மேய மருந்தினை
உள்ளம் ஆதரிமின் வினையாயின ஓயவே
(5)
தேனுலாமலர் கொண்டு மெய்த்தேவர்கள் சித்தர்கள்
பால்நெய் அஞ்சுடன் ஆட்ட முன்ஆடிய பால்வணன்
வான நாடர்கள் கைதொழு மாமழபாடி எம்
கோனை நாள்தொறும் கும்பிடவே குறி கூடுமே
(6)
தெரிந்தவன் புர மூன்றுடன் மாட்டிய சேவகன்
பரிந்து கைதொழுவார்அவர் தம்மனம் பாவினான்
வரிந்த வெஞ்சிலை ஒன்றுடையான், மழபாடியைப்
புரிந்து கைதொழுமின் வினையாயின போகுமே
(7)
சந்தவார் குழலாள்உமை தன்னொரு கூறுடை
எந்தையான், இமையாத முக்கண்ணினன், எம்பிரான்
மைந்தன் வார்பொழில்சூழ் மழபாடி மருந்தினைச்
சிந்தியா எழுவார் வினையாயின தேயுமே
(8)
இரக்கமொன்றுமிலான் இறையான் திருமாமலை
உரக்கையால் எடுத்தான்தன் தொல்முடி பத்திற
விரல்தலை நிறுவி உமையாளொடு மேயவன்
வரத்தையே கொடுக்கும் மழபாடியுள் வள்ளலே
(9)
ஆலமுண்டமுதம் அமரர்க்கருள் அண்ணலார்
காலனார் உயிர் வீட்டிய மாமணி கண்டனார்
சால நல்லடியார் தவத்தார்களும் சார்விட
மாலயன் வணங்கும் மழபாடிஎம் மைந்தனே
(10)
கலியின் வல்லமணும், கருஞ்சாக்கியப் பேய்களும்
நலியுநாள் கெடுத்தாண்ட என்நாதனார் வாழ்பதி
பலியும் பாட்டொடு பண்முழவும் பல ஓசையும்
மலியு மாமழபாடியை வாழ்த்தி வணங்குமே
(11)
மலியு மாளிகை சூழ் மழபாடியுள் வள்ளலைக்
கலிசெய் மாமதில் சூழ் கடற்காழிக் கவுணியன்
***
Thursday, November 30, 2023
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...
சோழ நாடு (காவிரி – தென்கரை):
- திருச்சி மாவட்டம்: திரிசிராப்பள்ளி திருஎறும்பியூர் திருநெடுங்களம் கற்குடி மூக்கீச்சுரம் (மூக்கீச்சரம்) திருப்பராய்த்துறை தஞ்சாவூர் மாவட்ட...
சோழ நாடு (காவிரி – வடகரை):
- கடலூர் மாவட்டம்: கோயில் - தில்லை (சிதம்பரம்) திருவேட்களம் திருநெல்வாயில் திருக்கழிப்பாலை ஓமாம்புலியூர் கானாட்டுமுள்ளூர் திருநாரையூர் திரு...
தொண்டை நாடு:
- சென்னை மாவட்டம்: திருவொற்றியூர் திருவலிதாயம் திருமயிலை திருவான்மியூர் திருவள்ளூர் மாவட்டம்: திருவிற்கோலம் திருவாலங்காடு திருப்பாசூர் த...
You cannot copy content of this page