வடகுரங்காடுதுறை:

<– சோழ நாடு (காவிரி வடகரை)

(குறிப்பு: திருஞானசம்பந்தரால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)

(சம்பந்தர் தேவாரம்):

(1)
கோங்கமே குரவமே கொழுமலர்ப் புன்னையே கொகுடிமுல்லை
வேங்கையே ஞாழலே விம்மு பாதிரிகளே விரவியெங்கும்
ஓங்குமா காவிரி வடகரையடை குரங்காடுதுறை
வீங்குநீர்ச் சடைமுடி அடிகளார் இடமென விரும்பினாரே
(2)
மந்தமாய் இழிமதக் களிற்றிள மருப்பொடு பொருப்பின், நல்ல
சந்தமார் அகிலொடு சாதியின் பலங்களும் தகையமோதி
உந்துமா காவிரி வடகரையடை குரங்காடுதுறை
எந்தையார் இணையடி இமையவர் தொழுதெழும் இயல்பினாரே
(3)
முத்துமா மணியொடு முழைவளர் ஆரமும் உகந்து நுந்தி
எத்துமா காவிரி வடகரையடை குரங்காடுதுறை
மத்தமா மலரொடு மதிபொதி சடைமுடி அடிகள் தம்மேல்
சித்தமாம் அடியவர் சிவகதி பெறுவது திண்ணமன்றே
(4)
கறியுமா மிளகொடு கதலியின் பலங்களும் கலந்து நுந்தி
எறியுமா காவிரி வடகரையடை குரங்காடுதுறை
மறியுலாம் கையினர், மலரடி தொழுதெழ மருவும்உள்ளக்
குறியினார் அவர்மிகக் கூடுவார் நீடுவான் உலகினூடே
(5)
கோடிடைச் சொரிந்த தேன்அதனொடும் கொண்டல்வாய் விண்ட முன்நீர்
காடுடைப் பீலியும் கடறுடைப் பண்டமும் கலந்து நுந்தி
ஓடுடைக் காவிரி வடகரையடை குரங்காடுதுறை
பீடுடைச் சடைமுடி அடிகளார் இடமெனப் பேணினாரே
(6)
கோலமா மலரொடு தூபமும் சாந்தமும் கொண்டு போற்றி
வாலியார் வழிபடப் பொருந்தினார், திருந்து மாங்கனிகள் உந்தி
ஆலுமா காவிரி வடகரையடை குரங்காடுதுறை
நீலமா மணிமிடற்றடிகளை நினைய வல்வினைகள் வீடே
(7)
….
(8)
நீலமா மணிநிறத்தரக்கனை இருபது கரத்தொடு ஒல்க
வாலினால் கட்டிய வாலியார் வழிபட மன்னுகோயில்
ஏலமோடு இலை இலவங்கமே இஞ்சியே மஞ்சள்உந்தி
ஆலியா வருபுனல் வடகரையடை குரங்காடுதுறையே
(9)
பொருந்திறல் பெருங்கைமா உரித்து, உமைஅஞ்சவே ஒருங்குநோக்கிப்
பெருந்திறத்தநங்கனை அநங்கமா விழித்ததும் பெருமைபோலும்
வருந்திறல் காவிரி வடகரையடை குரங்காடுதுறை
அருந்திறத்திருவரை அல்லல் கண்டோங்கிய அடிகளாரே
(10)
கட்டமண் தேரரும், கடுக்கடின் கழுக்களும், கசிவொன்றில்லாப்
பிட்டர்தம் அறவுரை கொள்ளலும், பெருவரைப் பண்டமுந்தி
எட்டுமா காவிரி வடகரையடை குரங்காடுதுறைச்
சிட்டனார் அடிதொழச் சிவகதி பெறுவது திண்ணமாமே
(11)
தாழிளம் காவிரி வடகரையடை குரங்காடுதுறைப்
போழிள மதிபொதி புரிதரு சடைமுடிப் புண்ணியனைக்
காழியான் அருமறை ஞானசம்பந்தன கருதுபாடல்
கோழையா அழைப்பினும் கூடுவார் நீடுவான் உலகினூடே

 

திருக்கழிப்பாலை:

<-- சோழ நாடு (காவிரி வடகரை)

சம்பந்தர் தேவாரம்:
புனலாடிய புன்
வெந்த குங்கிலிய
அப்பர் தேவாரம்:
வனபவள வாய்திறந்து
நங்கையைப் பாகம்
வண்ணமும் வடிவும்
ஊனுடுத்தி
நெய்தல் குருகுதன்
சுந்தரர் தேவாரம்:
ஒழிப்பாய் என் வினையை

 

தில்லை

<– சோழ நாடு (காவிரி வடகரை)

சம்பந்தர் தேவாரம்:
1. கற்றாங்(கு) எரியோம்பி
2. ஆடினாய் நறு நெய்யொடு
அப்பர் தேவாரம்:
1. கருநட்ட கண்டனை
2. பத்தனாய்ப் பாட
3. அன்னம் பாலிக்கும்
4. பனைக்கை மும்மத
அரியானை
6. செஞ்சடைக் கற்றை
7. பாளையுடை
8. மங்குல் மதிதவழும்
சுந்தரர் தேவாரம்:
மடித்தாடும் அடிமை

பழமண்ணிப் படிக்கரை

<– சோழ நாடு (காவிரி வடகரை)

(குறிப்பு: சுந்தரரால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)

(சுந்தரர் தேவாரம்):

(1)
முன்னவன் எங்கள்பிரான், முதல் காண்பரிதாய பிரான்
சென்னியில் எங்கள்பிரான், திருநீல மிடற்றெம்பிரான்
மன்னிய எங்கள்பிரான், மறை நான்கும் கல்லால் நிழற்கீழ்ப்
பன்னிய எங்கள்பிரான், பழமண்ணிப் படிக்கரையே
(2)
அண்ட கபாலம் சென்னி அடிமேல் அலர் இட்டுநல்ல
தொண்டங்கடி பரவித் தொழுதேத்தி நின்றாடுமிடம்
வெண்திங்கள் வெண்மழுவன் விரையார் கதிர் மூவிலைய
பண்டங்கன் மேயஇடம் பழமண்ணிப் படிக்கரையே
(3)
ஆடுமின் அன்புடையீர், அடிக்காட்பட்ட தூளிகொண்டு
சூடுமின் தொண்டருள்ளீர், உமரோடெமர் சூழவந்து
வாடும் இவ்வாழ்க்கை தன்னை வருந்தாமல் திருந்தச்சென்று
பாடுமின் பத்தருள்ளீர் பழமண்ணிப் படிக்கரையே
(4)
அடுதலையே புரிந்தான் அவை அந்தர மூவெயிலும்
கெடுதலையே புரிந்தான், கிளருஞ்சிலை நாணியிற்கோல்
நடுதலையே புரிந்தான், நரி கான்றிட்ட எச்சில் வெள்ளைப்
படுதலையே புரிந்தான் பழமண்ணிப் படிக்கரையே
(5)
உங்கைகளால் கூப்பி உகந்தேத்தித் தொழுமின் தொண்டீர்
மங்கையொர் கூறுடையான், வானோர் முதலாய பிரான்
அங்கையில் வெண்மழுவன், அலையார் கதிர் மூவிலைய
பங்கய பாதன்இடம் பழமண்ணிப் படிக்கரையே
(6)
செடிபடத் தீவிளைத்தான் சிலையார் மதில், செம்புனஞ்சேர்
கொடிபடு மூரிவெள்ளை எருதேற்றையும் ஏறக்கொண்டான்
கடியவன் காலன் தன்னைக் கறுத்தான், கழல் செம்பவளப்
படியவன் பாசுபதன் பழமண்ணிப் படிக்கரையே
(7)
கடுத்தவன் தேர்கொண்டோடிக் கயிலாயநன் மாமலையை
எடுத்தவன் ஈரைந்துவாய் அரக்கன்முடி பத்தலற
விடுத்தவன் கைநரம்பால் வேத கீதங்கள் பாடலுறப்
படுத்தவன் பால்வெண்ணீற்றன் பழமண்ணிப் படிக்கரையே
(8)
திரிவன மும்மதிலும் எரித்தான், இமையோர் பெருமான்
அரியவன அட்டபுட்பம் அவை கொண்டடி போற்றிநல்ல
கரியவன் நான்முகனும் அடியும்முடி காண்பரிய
பரியவன் பாசுபதன் பழமண்ணிப் படிக்கரையே
(9)
வெற்றரைக் கற்றமணும், விரையாது விண்டாலம் உண்ணும்
துற்றரைத் துற்றறுப்பான், துன்னஆடைத் தொழிலுடையீர்
பெற்றரைப் பித்தரென்று கருதேன்மின், படிக்கரையுள்
பற்றரைப் பற்றிநின்று பழிபாவங்கள் தீர்மின்களே
(10)
பல்லுயிர் வாழும் தெண்ணீர்ப் பழமண்ணிப் படிக்கரையை
அல்லியந்தாமரைத்தார் ஆரூரன் உரைத்ததமிழ்
சொல்லுதல் கேட்டல் வல்லார் அவர்க்கும் தமர்க்கும் கிளைக்கும்
எல்லியும் நன்பகலும் இடர் கூருதல் இல்லையன்றே

திருமயேந்திரம் (மகேந்திரப்பள்ளி):

<– சோழ நாடு (காவிரி வடகரை)

(குறிப்பு: திருஞானசம்பந்தரால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)

 

(சம்பந்தர் தேவாரம்):

(1)

திரைதரு பவளமும் சீர்திகழ் வயிரமும்
கரைதரும் அகிலொடு கனவளை புகுதரும்
வரைவிலால் எயிலெய்த மயேந்திரப் பள்ளியுள்
அரவரை அழகனை அடியிணை பணிமினே

(2)
கொண்டல்சேர் கோபுரம் கோலமார் மாளிகை
கண்டலும் கைதையும் கமலமார் வாவியும்
வண்டுலாம் பொழிலணி மயேந்திரப் பள்ளியில்
செண்டுசேர் விடையினான் திருந்தடி பணிமினே

(3)
கோங்கிள வேங்கையும் கொழுமலர்ப் புன்னையும்
தாங்குதேன் கொன்றையும் தகுமலர்க் குரவமும்
மாங்கரும்பும் வயல் மயேந்திரப் பள்ளியுள்
ஆங்கிருந்தவன் கழலடியிணை பணிமினே

(4)
வங்கமார் சேணுயர் வருகுறியால் மிகு
சங்கமார் ஒலிஅகில் தருபுகை கமழ்தரு
மங்கையோர் பங்கினன் மயேந்திரப் பள்ளியுள்
எங்கள் நாயகன் தனது இணையடி பணிமினே

(5)
நித்திலத் தொகைபல நிரைதரு மலரெனச்
சித்திரப் புணரி சேர்த்திடத் திகழ்ந்திருந்தவன்
மைத்திகழ் கண்டனன் மயேந்திரப் பள்ளியுள்
கைத்தல மழுவனைக் கண்டடி பணிமினே

(6)
சந்திரன் கதிரவன் தகுபுகழ் அயனொடும்
இந்திரன் வழிபட இருந்தஎம் இறையவன்
மந்திர மறைவளர் மயேந்திரப் பள்ளியுள்
அந்தமில் அழகனை அடிபணிந்துய்ம்மினே

(7)
சடைமுடி முனிவர்கள் சமைவொடும் வழிபட
நடநவில் புரிவினன் அறவணி மலரொடு
படர்சடை மதியினன் மயேந்திரப் பள்ளியுள்
அடல்விடை உடையவன் அடிபணிந்துய்ம்மினே

(8)
சிரம் ஒருபதுமுடைச் செருவலி அரக்கனைக்
கரம் இருபதுமிற கனவரை அடர்த்தவன்
மரவமர் பூம்பொழில் மயேந்திரப் பள்ளியுள்
அரவமர் சடையனை அடிபணிந்துய்ம்மினே

(9)
நாகணைத் துயில்பவன், நலமிகு மலரவன்
ஆகணைந்தவர் கழல் அணையவும் பெறுகிலர்
மாகணைந்தலர் பொழில் மயேந்திரப் பள்ளியுள்
யோகணைந்தவன் கழல் உணர்ந்திருந்துய்ம்மினே

(10)
உடை துறந்தவர்களும், உடைதுவர் உடையரும்
படுபழி உடையவர் பகர்வன விடுமினீர்
மடைவளர் வயலணி மயேந்திரப் பள்ளியுள்
இடமுடை ஈசனை இணையடி பணிமினே

(11)
வம்புலாம் பொழிலணி மயேந்திரப் பள்ளியுள்
நம்பனார் கழலடி ஞானசம்பந்தன் சொல்
நம்பரம் இதுவென நாவினால் நவில்பவர்
உம்பரார் எதிர்கொள உயர்பதி அணைவரே

திருநெல்வாயில்:

<– சோழ நாடு (காவிரி வடகரை)

(குறிப்பு: திருஞானசம்பந்தரால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)

(சம்பந்தர் தேவாரம்):

(1)
புடையினார் புள்ளி கால் பொருந்திய
மடையினார் மணி நீர் நெல்வாயிலார்
நடையினால் விரற் கோவணம் நயந்து
உடையினார் எமது உச்சியாரே
(2)
வாங்கினார் மதில்மேல் கணை, வெள்ளம்
தாங்கினார், தலையாய தன்மையர்
நீங்கு நீர் நெல்வாயிலார், தொழ
ஓங்கினார் எமது உச்சியாரே
(3)
நிச்சலேத்து நெல்வாயிலார் தொழ
இச்சையால் உறைவார் எம் ஈசனார்
கச்சையாவதோர் பாம்பினார், கவின்
இச்சையார் எமது உச்சியாரே
(4)
மறையினார், மழு வாளினார், மல்கு
பிறையினார், பிறையோடிலங்கிய
நிறையினார, நெல்வாயிலார், தொழும்
இறைவனார் எமது உச்சியாரே
(5)
விருத்தனாகி வெண்ணீறு பூசிய
கருத்தனார், கனலாட்டு உகந்தவர்
நிருத்தனார், நெல்வாயில் மேவிய
ஒருத்தனார் எமது உச்சியாரே
(6)
காரினார் கொன்றைக் கண்ணியார், மல்கு
பேரினார், பிறையோடிலங்கிய
நீரினார், நெல்வாயிலார், தொழும்
ஏரினார் எமது உச்சியாரே
(7)
ஆதியார் அந்தமாயினார், வினை
கோதியார் மதில் கூட்டழித்தவர்
நீதியார், நெல்வாயிலார், மறை
ஓதியார் எமது உச்சியாரே
(8)
பற்றினான் அரக்கன் கயிலையை
ஒற்றினார் ஒரு கால் விரலுற
நெற்றியார, நெல்வாயிலார், தொழும்
பெற்றியார் எமது உச்சியாரே
(9)
நாடினார் மணிவண்ணன் நான்முகன்
கூடினார் குறுகாத கொள்கையர்
நீடினார், நெல்வாயிலார், தலை
ஓடினார் எமது உச்சியாரே
(10)
குண்டமண் துவர்க்கூறை மூடர் சொல்
பண்டமாக வையாத பண்பினர்
விண்தயங்கு நெல்வாயிலார், நஞ்சை
உண்ட கண்டர் எம் உச்சியாரே
(11)
நெண்பயங்கு நெல்வாயில் ஈசனைச்
சண்பை ஞானசம்பந்தன் சொல்இவை
பண்பயன் கொளப் பாட வல்லவர்
விண்பயன் கொளும் வேட்கையாளரே

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page