புள்ளிருக்கு வேளூர் (வைத்தீஸ்வரன் கோயில்) – அப்பர் தேவாரம் (2):

<– புள்ளிருக்கு வேளூர் (வைத்தீஸ்வரன் கோயில்)

(1)
ஆண்டானை அடியேனை ஆளாக் கொண்டு
அடியோடுமுடி அயன்மால் அறியா வண்ணம்
நீண்டானை, நெடுங்கள மாநகரான் தன்னை
நேமிவான் படையால் நீளுரவோன் ஆகம்
கீண்டானைக், கேதாரம் மேவினானைக்
கேடிலியைக், கிளர்பொறி வாளரவோடென்பு
பூண்டானைப், புள்ளிருக்கு வேளூரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கினேனே
(2)
சீர்த்தானைச் சிறந்தடியேன் சிந்தையுள்ளே
திகழ்ந்தானைச், சிவன் தன்னைத், தேவதேவைக்
கூர்த்தானைக், கொடுநெடுவேல் கூற்றம் தன்னைக்
குரைகழலால் குமைத்து முனி கொண்ட அச்சம்
பேர்த்தானைப், பிறப்பிலியை, இறப்பொன்றில்லாப்
பெம்மானைக், கைம்மாவின் உரிவை பேணிப்
போர்த்தானைப், புள்ளிருக்கு வேளூரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கினேனே
(3)
பத்திமையால் பணிந்தடியேன் தன்னைப் பன்னாள்
பாமாலை பாடப் பயில்வித்தானை
எத்தேவும் ஏத்தும் இறைவன் தன்னை
எம்மானை என்உள்ளத்துள்ளே ஊறும்
அத்தேனை, அமுதத்தை, ஆவின் பாலை
அண்ணிக்கும் தீங்கரும்பை, அரனை, ஆதிப்
புத்தேளைப், புள்ளிருக்கு வேளூரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கினேனே
(4)
இருளாய உள்ளத்தின் இருளை நீக்கி
இடர்பாவம் கெடுத்தேழையேனை உய்யத்
தெருளாத சிந்தைதனைத் தெருட்டித் தன்போல்
சிவலோக நெறியறியச் சிந்தை தந்த
அருளானை, ஆதிமா தவத்துளானை
ஆறங்க நால் வேதத்தப்பால் நின்ற
பொருளானைப், புள்ளிருக்கு வேளூரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கினேனே
(5)
மின்னுருவை, விண்ணகத்தில் ஒன்றாய், மிக்கு
வீசுங்கால் தன்னகத்தில் இரண்டாய்ச், செந்தீத்
தன்னுருவின் மூன்றாய்த், தாழ்புனலின் நான்காய்த்
தரணிதலத்தஞ்சாகி எஞ்சாத் தஞ்ச
மன்னுருவை, வான்பவளக் கொழுந்தை, முத்தை
வளரொளியை வயிரத்தை மாசொன்றில்லாப்
பொன்னுருவைப், புள்ளிருக்கு வேளூரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கினேனே
(6)
அறையார்பொற் கழலார்ப்ப அணியார் தில்லை
அம்பலத்துள் நடமாடும் அழகன் தன்னைக்
கறையார் மூவிலை நெடுவேல் கடவுள் தன்னைக்
கடல்நாகைக் காரோணம் கருதினானை
இறையானை, என்உள்ளத்துள்ளே விள்ளாது
இருந்தானை, ஏழ்பொழிலும் தாங்கி நின்ற
பொறையானைப், புள்ளிருக்கு வேளூரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கினேனே
(7)
நெருப்பனைய திருமேனி வெண்ணீற்றானை
நீங்காதென் உள்ளத்தினுள்ளே நின்ற
விருப்பவனை, வேதியனை, வேத வித்தை
வெண்காடும் வியன்துருத்தி நகரும் மேவி
இருப்பவனை, இடைமருதோடு ஈங்கோய் நீங்கா
இறையவனை, எனையாளும் கயிலை என்னும்
பொருப்பவனைப், புள்ளிருக்கு வேளூரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கினேனே
(8)
பேராயிரம் பரவி வானோர் ஏத்தும்
பெம்மானைப், பிரிவிலா அடியார்க்கென்றும்
வாராத செல்வம் வருவிப்பானை
மந்திரமும் தந்திரமும் மருந்துமாகித்
தீராநோய் தீர்த்தருள வல்லான் தன்னைத்
திரிபுரங்கள் தீயெழத் திண்சிலை கைக் கொண்ட
போரானைப், புள்ளிருக்கு வேளூரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கினேனே
(9)
பண்ணியனைப் பைங்கொடியாள் பாகன் தன்னைப்
படர்சடைமேல் புனல்கரந்த படிறன் தன்னை
நண்ணியனை என்னாக்கித் தன்னானானை
நான்மறையின் நற்பொருளை, நளிர்வெண் திங்கள்
கண்ணியனைக், கடியநடை விடையொன்றேறும்
காரணனை, நாரணனைக், கமலத்தோங்கும்
புண்ணியனைப், புள்ளிருக்கு வேளூரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கினேனே
(10)
இறுத்தானை இலங்கையர்கோன் சிரங்கள் பத்தும்
எழுநரம்பின் இன்னிசை கேட்டின்புற்றானை
அறுத்தானை அடியார்தம் அருநோய் பாவம்
அலைகடலில் ஆலாலமுண்டு கண்டம்
கறுத்தானைக், கண்ணழலால் காமன் ஆகம்
காய்ந்தானைக், கனல்மழுவும் கலையும் அங்கை
பொறுத்தானைப், புள்ளிருக்கு வேளூரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கினேனே

சீகாழி – சம்பந்தர் தேவாரம் (1)

<– சீகாழி

(1)
தோடுடைய செவியன் விடையேறிஓர் தூவெண் மதிசூடிக்
காடுடைய சுடலைப்பொடி பூசியென் உள்ளங்கவர் கள்வன்
ஏடுடைய மலரால் முனைநாள் பணிந்தேத்த அருள்செய்த
பீடுடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவனன்றே
(2)
முற்றல்ஆமை இளநாகமோடேன முளைக் கொம்பவை பூண்டு
வற்றலோடு கலனாப் பலி தேர்ந்தெனதுள்ளம் கவர் கள்வன்
கற்றல் கேட்டல் உடையார் பெரியார் கழல் கையால் தொழுதேத்தப்
பெற்றம் ஊர்ந்த பிரமாபுரம் மேவிய பெம்மான் இவனன்றே
(3)
நீர்பரந்த நிமிர்புன்சடை மேலோர் நிலாவெண் மதிசூடி
ஏர்பரந்த இன வெள்வளைசோர என்உள்ளம் கவர் கள்வன்
ஊர்பரந்த உலகின் முதலாகிய ஓரூர் இதுஎன்னப்
பேர்பரந்த பிரமாபுரம் மேவிய பெம்மான் இவனன்றே
(4)
விண்மகிழ்ந்த மதில் எய்ததும்அன்றி, விளங்கு தலையோட்டில்
உண்மகிழ்ந்து பலிதேரிய வந்தெனதுள்ளம் கவர் கள்வன்
மண்மகிழ்ந்த அரவம் மலர்க்கொன்றை மலிந்த வரைமார்பில்
பெண்மகிழ்ந்த பிரமாபுரம் மேவிய பெம்மான் இவனன்றே
(5)
ஒருமை பெண்மை உடையன், சடையன், விடையூரும் இவனென்ன
அருமையாக உரை செய்ய அமர்ந்தெனதுள்ளம் கவர் கள்வன்
கருமைபெற்ற கடல்கொள்ள மிதந்ததொர் காலம் இதுஎன்னப்
பெருமைபெற்ற பிரமாபுரம் மேவிய பெம்மான் இவனன்றே
(6)
மறைகலந்த ஒலி பாடலோடு ஆடலராகி, மழுவேந்தி
இறைகலந்த இன வெள்வளை சோர என் உள்ளங்கவர் கள்வன்
கறைகலந்த கடியார் பொழில் நீடுயர் சோலைக் கதிர்சிந்தப்
பிறைகலந்த பிரமாபுரம் மேவிய பெம்மான் இவனன்றே
(7)
சடைமுயங்கு புனலன், அனலன், எரிவீசிச் சதிர்வெய்த
உடைமுயங்கும் அரவோடுழி தந்தெனதுள்ளம் கவர் கள்வன்
கடல்முயங்கு கழிசூழ் குளிர்கானலம் பொன்னஞ் சிறகன்னம்
பெடைமுயங்கு பிரமாபுரம் மேவிய பெம்மான் இவனன்ற
(8)
வியர்இலங்கு வரைஉந்திய தோள்களை, வீரம் விளைவித்த
உயர்இலங்கை அரையன் வலி செற்றெனதுள்ளம் கவர் கள்வன்
துயரிலங்கும் உலகில் பலஊழிகள் தோன்றும் பொழுதெல்லாம்
பெயரிலங்கு பிரமாபுரம் மேவிய பெம்மான் இவனன்றே
(9)
தாணுதல் செய்து இறை காணிய மாலொடு, தண் தாமரையானும்
நீணுதல் செய்து ஒழிய நிமிர்ந்தான் எனதுள்ளம் கவர் கள்வன்
வாணுதல் செய் மகளீர் முதலாகிய வையத்தவர் ஏத்தப்
பேணுதல் செய் பிரமாபுரம் மேவிய பெம்மான் இவனன்றே
(10)
புத்தரோடு பொறியில் சமணும் புறம்கூற நெறிநில்லா
ஒத்தசொல்ல உலகம் பலி தேர்ந்தெனதுள்ளம் கவர் கள்வன்
மத்தயானை மறுக அவ்வுரி போர்த்ததோர் மாயம் இதுஎன்னப்
பித்தர் போலும் பிரமாபுரம் மேவிய பெம்மான் இவனன்றே
(11)
அருநெறிய மறைவல்ல முனியகன் பொய்கை அலர்மேய
பெருநெறிய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் தன்னை
ஒருநெறிய மனம் வைத்துணர் ஞானசம்பந்தன் உரைசெய்த
திருநெறிய தமிழ்வல்லவர் தொல்வினை தீர்தல் எளிதாமே

சீகாழி – சம்பந்தர் தேவாரம் (2)

<– சீகாழி

(1)
நறவநிறை வண்டறை தார்க்கொன்றை நயந்து, நயனத்தால்
சுறவம்செறி வண்கொடியோன் உடலம் பொடியா விழிசெய்தான்
புறவமுறை வண்பதியா மதியார் புரமூன்று எரிசெய்த
இறைவன், அறவன், இமையோர் ஏத்த உமையோடிருந்தானே
(2)
உரவன், புலியின் உரிதோலாடை உடைமேல் படநாகம்
விரவிவிரி பூங்கச்சா அசைத்த விகிர்தன், உகிர் தன்னால்
பொரு வெங்களிறு பிளிற உரித்துப் புறவம் பதியாக
இரவும்பகலும் இமையோர்ஏத்த உமையோடிருந்தானே
(3)
பந்தமுடைய பூதம்பாடப் பாதம் சிலம்பார்க்கக்
கந்தமல்கு குழலிகாணக் கரிகாட்டு எரியாடி
அந்தண்கடல் சூழ்ந்து, அழகார் புறவம் பதியா அமர்வெய்தி
எந்தம்பெருமான்  இமையோர்ஏத்த உமையோடிருந்தானே
(4)
நினைவார் நினைய இனியான், பனியார் மலர்தூய் நித்தலும்
கனையார் விடையொன்றுடையான், கங்கை திங்கள் கமழ்கொன்றை
புனை வார்சடையின் முடியான், கடல்சூழ் புறவம் பதியாக
எனைஆளுடையான், இமையோர்ஏத்த உமையோடிருந்தானே
(5)
செங்கண்அரவு நகுவெண்தலையும், முகிழ்வெண்திங்களும்
தங்கு சடையன், விடையன், உடையன் சரிகோவண ஆடை
பொங்கு திரை வண்கடல் சூழ்ந்தழகார் புறவம் பதியாக
எங்கும்பரவி இமையோர்ஏத்த உமையோடிருந்தானே
(6)
பின்னுசடைகள் தாழக் கேழல்எயிறு பிறழப்போய்
அன்னநடையார் மனைகள்தோறும் அழகார் பலிதேர்ந்து
புன்னைமடலின் பொழில் சூழ்ந்தழகார் புறவம் பதியாக
என்னைஉடையான், இமையோர்ஏத்த உமையோடிருந்தானே
(7)
உண்ணற்கரிய நஞ்சைஉண்டு, ஒருதோழம் தேவர்
விண்ணிற்பொலிய அமுதமளித்த விடைசேர் கொடியண்ணல்
பண்ணில் சிறை வண்டறை பூஞ்சோலைப் புறவம் பதியாக
எண்ணில் சிறந்த இமையோர்ஏத்த உமையோடிருந்தானே
(8)
விண்தான்அதிர வியனார்கயிலை வேரோடு எடுத்தான்தன்
திண்தோள்உடலும் முடியும் நெரியச் சிறிதே ஊன்றிய
புண்தான்ஒழிய அருள்செய் பெருமான், புறவம் பதியாக
எண்தோள் உடையான், இமையோர்ஏத்த உமையோடிருந்தானே
(9)
நெடியான், நீள்தாமரை மேல் அயனும் நேடிக் காண்கில்லாப்
படியா மேனி உடையான், பவள வரைபோல் திருமார்பில்
பொடியார் கோலம் உடையான், கடல்சூழ் புறவம் பதியாக
இடியார் முழவார் இமையோர்ஏத்த உமையோடிருந்தானே
(10)
ஆலும் மயிலின் பீலி அமணர், அறிவில் சிறுதேரர்
கோலும் மொழிகள் ஒழியக் குழுவும் தழலும் எழில்வானும்
போலும் வடிவும் உடையான், கடல்சூழ் புறவம் பதியாக
ஏலும் வகையால் இமையோர்ஏத்த உமையோடிருந்தானே
(11)
பொன்னார் மாட நீடும்செல்வப் புறவம் பதியாக
மின்னார் இடையாள் உமையாளோடும் இருந்த விமலனைத்
தன்னார்வம்செய் தமிழின் விரகன் உரைத்த தமிழ்மாலை
பன்னாள் பாடியாடப் பிரியார் பரலோகம்தானே

சீகாழி – சம்பந்தர் தேவாரம் (3)

<– சீகாழி

(1)
பூவார் கொன்றைப் புரிபுன் சடை ஈசா
காவா என நின்றேத்தும் காழியார்
மேவார் புரமூன்று அட்டார் அவர்போலாம்
பாவார் இன்சொல் பயிலும் பரமரே
(2)
எந்தை என்றங்கிமையோர் புகுந்தீண்டிக்
கந்த மாலை கொடுசேர் காழியார்
வெந்த நீற்றர் விமலர் அவர்போலாம்
அந்தி நட்டம் ஆடும் அடிகளே
(3)
தேனை வென்ற மொழியாள் ஒருபாகம்
கானமான் கைக்கொண்ட காழியார்
வானம் ஓங்கு கோயில் அவர்போலாம்
ஆன இன்பம் ஆடும் அடிகளே
(4)
மாணா வென்றிக் காலன் மடியவே
காணா மாணிக்களித்த காழியார்
நாணார் வாளி தொட்டார் அவர்போலாம்
பேணார் புரங்கள் அட்ட பெருமானே
(5)
மாடே ஓதமெறிய வயல் செந்நெல்
காடேறிச் சங்கீனும் காழியார்
வாடா மலராள் பங்கர் அவர்போலாம்
ஏடார் புரமூன்று எரித்த இறைவரே
(6)
கொங்கு செருந்தி கொன்றை மலர்கூடக்
கங்கை புனைந்த சடையார் காழியார்
அங்கண் அரவம் ஆட்டும் அவர்போலாம்
செங்கண் அரக்கர் புரத்தை எரித்தாரே
(7)
கொல்லை விடைமுன் பூதம் குனித்தாடும்
கல்ல வடத்தை உகப்பார் காழியார்
அல்ல விடத்து நடந்தார் அவர்போலாம்
பல்ல இடத்தும் பயிலும் பரமரே
(8)
எடுத்த அரக்கன் நெரிய விரலூன்றிக்
கடுத்து முரிய அடர்த்தார் காழியார்
எடுத்த பாடற்கிரங்கும் அவர்போலாம்
பொடிக்கொள் நீறு பூசும் புனிதரே
(9)
ஆற்றலுடைய அரியும் பிரமனும்
தோற்றம் காணா வென்றிக் காழியார்
ஏற்றம் ஏறங்கேறும் அவர்போலாம்
கூற்றம் மறுகக் குமைத்த குழகரே
(10)
பெருக்கப் பிதற்றும் சமணர் சாக்கியர்
கரக்கும் உரையை விட்டார் காழியார்
இருக்கின் மலிந்த இறைவர் அவர்போலாம்
அருப்பின் முலையாள் பங்கத்தையரே
(11)
காரார் வயல்சூழ் காழிக்கோன் தனைச்
சீரார் ஞானசம்பந்தன் சொன்ன
பாரார் புகழப் பரவ வல்லவர்
ஏரார் வானத்தினிதா இருப்பரே

சீகாழி – சம்பந்தர் தேவாரம் (4)

(1)
துஞ்சலும் துஞ்சல்இலாத போழ்தினும்
நெஞ்சகம் நைந்து நினைமின் நாள்தொறும்
வஞ்சகம் அற்றடி வாழ்த்த, வந்தகூற்று
அஞ்ச உதைத்தன அஞ்செழுத்துமே
(2)
மந்திரம் நான்மறையாகி, வானவர்
சிந்தையுள் நின்று அவர் தம்மையாள்வன
செந்தழல் ஓம்பிய செம்மை வேதியர்க்கு
அந்தியுள் மந்திரம் அஞ்செழுத்துமே
(3)
ஊனில் உயிர்ப்பை ஒடுக்கி, ஒண்சுடர்
ஞான விளக்கினை ஏற்றி, நன்புலத்து
ஏனை வழிதிறந்தேத்துவார்க்கு, இடர்
ஆன கெடுப்பன அஞ்செழுத்துமே
(4)
நல்லவர் தீயர் எனாது, நச்சினர்
செல்லல் கெடச் சிவமுத்தி காட்டுவ
கொல்ல நமன்தமர் கொண்டு போமிடத்து
அல்லல் கெடுப்பன அஞ்செழுத்துமே
(5)
கொங்கலர் வன்மதன் வாளி ஐந்து, அகத்து
அங்குள பூதமும் அஞ்சு, ஐம்பொழில்
தங்கரவின் படம் அஞ்சும், தம்முடை
அங்கையில் ஐவிரல் அஞ்செழுத்துமே
(6)
தும்மல் இருமல் தொடர்ந்த போழ்தினும்
வெம்மை நரகம் விளைந்த போழ்தினும்
இம்மை வினை அடர்த்து எய்தும் போழ்தினும்
அம்மையினும் துணை அஞ்செழுத்துமே
(7)
வீடு பிறப்பை அறுத்து மெச்சினர்
பீடை கெடுப்பன பின்னை நாள்தொறும்
மாடு கொடுப்பன மன்னு மாநடம்
ஆடி உகப்பன அஞ்செழுத்துமே
(8)
வண்டமரோதி மடந்தை பேணின
பண்டை இராவணன் பாடி உய்ந்தன
தொண்டர்கள் கொண்டு துதித்த பின்அவர்க்கு
அண்டம் அளிப்பன அஞ்செழுத்துமே
(9)
கார்வணன் நான்முகன் காணுதற்குஒணாச்
சீர்வணச் சேவடி செவ்வி நாள்தொறும்
பேர்வணம் பேசிப் பிதற்றும் பித்தர்கட்கு
ஆர்வணம் ஆவன அஞ்செழுத்துமே
(10)
புத்தர் சமண் கழுக்கையர் பொய்கொளாச்
சித்தத்தவர்கள் தெளிந்து தேறின
வித்தக நீறணிவார் வினைப்பகைக்கு
அத்திரம் ஆவன அஞ்செழுத்துமே
(11)
நற்றமிழ் ஞானசம்பந்தன், நான்மறை
கற்றவன், காழியர் மன்னன் உன்னிய
அற்றமில் மாலை ஈரைந்தும் அஞ்செழுத்து
உற்றன வல்லவர் உம்பர்ஆவரே

சீகாழி – சம்பந்தர் தேவாரம் (5):

(1)
சுரர்உலகு நரர்கள்பயில் தரணிதல முரணழிய அரணமதில், முப்
புரமெரிய விரவுவகை சரவிசைகொள் கரமுடைய பரமன்இடமாம்
வரமருள வரன்முறையின் நிரைநிறைகொள் வருசுருதி சிரஉரையினால்
பிரமன்உயர் அரன்எழில்கொள் சரணஇணை பரவவளர் பிரமபுரமே
(2)
தாணுமிகு ஆணிசை கொடாணுவியர் பேணுமது காணுமளவில்
கோணுநுதல் நீள்நயனி கோணில்பிடி மாணிமது நாணும்வகையே
ஏணுகரி பூணழிய ஆணியல்கொள் மாணிபதி சேணமரர்கோன்
வேணுவினை ஏணிநகர் காணில்திவி காணநடு வேணுபுரமே
(3)
பகலொளிசெய் நகமணியை முகைமலரை நிகழ்சரண அகவுமுனிவர்க்கு
அகலமலி சகலகலை மிகஉரைசெய் முகமுடைய பகவன்இடமாம்
பகை களையும் வகையிலறு முகஇறையை மிகஅருள நிகரில்இமையோர்
புகஉலகு புகழஎழில் திகழநிகழ் அலர்பெருகு புகலிநகரே
(4)
அங்கண்மதி கங்கைநதி வெங்கண்அரவங்கள்எழில் தங்கும்இதழித்
துங்கமலர் தங்குசடை அங்கிநிகர் எங்கள்இறை தங்கும்இடமாம்
வெங்கதிர் விளங்குலகம் எங்குமெதிர் பொங்கெரி புலன்கள் களைவோர்
வெங்குரு விளங்கி உமைபங்கர் சரணங்கள்பணி வெங்குருஅதே
(5)
ஆணியல்பு காணவன வாணஇயல் பேணியெதிர் பாணமழைசேர்
தூணியற நாணியற வேணுசிலை பேணியற நாணிவிசயன்
பாணியமர் பூணஅருள் மாணு பிரமாணிஇடம், ஏணிமுறையில்
பாணி உலகாள மிக ஆணின்மலி தோணிநிகர் தோணிபுரமே
(6)
நிராமய பராபர புராதன பராவுசிவ, ராகஅருள்என்று
இராவும்எதிராயது பராநினை புராணனன் அமர்ஆதி பதியாம்
அராமிசை இராதஎழில் தராய, அர பராயண வராகஉரு !வா
தராயனை, விராயெரி பராய்மிகு தராய்மொழி விராய பதியே
(7)
அரணையுறு முரணர்பலர் மரணம்வர இரணமதில் அரமலிபடைக்
கரம்விசிறு விரகன்அமர் கரணன்உயர் பரன்நெறி கொள் கரனதிடமாம்
பரவமுது விரவவிடல் புரளமுறும் அரவைஅரி சிரம்அரிய,அச்
சிரம்அரன சரணமவை பரவஇரு கிரகம்அமர் சிரபுரம்அதே
(8)
அறமழிவு பெறஉலகு தெறுபுயவன் விறலழிய நிறுவிவிரல்,மா
மறையின்ஒலி முறைமுரல்செய் பிறைஎயிறன் உறஅருளும் இறைவன் இடமாம்
குறைவின்மிக நிறைதைஉழி மறைஅமரர் நிறைஅருள முறையொடுவரும்
புறவன்எதிர் நிறைநிலவு பொறையன்உடல் பெறஅருளும் புறவம்அதுவே
(9)
விண்பயில மண்பகிரி வண்பிரமன் எண்பெரிய பண்படைகொள் மால்
கண்பரியும் ஒண்பொழிய நுண்பொருள்கள் தண்புகழ்கொள் கண்டன்இடமாம்
மண்பரியும்  ஒண்பொழிய நுண்புசகர் புண்பயில விண்படர,அச்
சண்பைமொழி பண்பமுனி கண்பழிசெய் பண்பு களை சண்பைநகரே
(10)
பாழிஉறை வேழநிகர் பாழ்அமணர் சூழுமுடல் ஆளர்உணரா
ஏழினிசை யாழின்மொழி ஏழையவள் வாழும்இறை தாழும்இடமாம்
கீழிசைகொள் மேலுலகில் வாழரசு சூழரசு வாழஅரனுக்கு
ஆழியசில் காழிசெய ஏழுலகில் ஊழிவளர் காழிநகரே
(11)
நச்சரவு கச்சென அசைச்சு மதி உச்சியின் மிலைச்சொரு கையான்
மெய்ச்சிரம் அணைச்சுலகில் நிச்சமிடு பிச்சைஅமர் பிச்சன்இடமாம்
மச்சமதம் நச்சி மதமச்சிறுமியைச் செய்தவ அச்ச விரதக்
கொச்சைமுர அச்சர்பணி அச்சுரர்கள் நச்சிமிடை கொச்சை நகரே
(12)
ஒழுகலரிதழி கலியில் உழியுலகு பழிபெருகு வழியைநினையா
முழுதுடலில் எழுமயிர்கள் தழுவுமுனி குழுவினொடு கெழுவுசிவனைத்
தொழுதுலகில் இழுகுமலம் அழியும்வகை கழுவுமுரை கழுமலநகர்ப்
பழுதில்இறை எழுதுமொழி தமிழ்விரகன் வழிமொழிகள் மொழி தகையவே

சீகாழி – சம்பந்தர் தேவாரம் (6):

(1)
பிரமபுரத்துறை பெம்மான் எம்மான்
பிரமபுரத்துறை பெம்மான் எம்மான்
பிரமபுரத்துறை பெம்மான் எம்மான்
பிரமபுரத்துறை பெம்மான் எம்மான்
(2)
விண்டலர் பொழிலணி வேணுபுரத்தரன்
விண்டலர் பொழிலணி வேணுபுரத்தரன்
விண்டலர் பொழிலணி வேணுபுரத்தரன்
விண்டலர் பொழிலணி வேணுபுரத்தரன்
(3)
புண்டரிகத்தவன் மேவிய புகலியே
புண்டரிகத்தவன் மேவிய புகலியே
புண்டரிகத்தவன் மேவிய புகலியே
புண்டரிகத்தவன் மேவிய புகலியே
(4)
விளங்கொளி திகழ்தரு வெங்குரு மேவினன்
விளங்கொளி திகழ்தரு வெங்குரு மேவினன்
விளங்கொளி திகழ்தரு வெங்குரு மேவினன்
விளங்கொளி திகழ்தரு வெங்குரு மேவினன்
(5)
சுடர்மணி மாளிகைத் தோணிபுரத்தவன்
சுடர்மணி மாளிகைத் தோணிபுரத்தவன்
சுடர்மணி மாளிகைத் தோணிபுரத்தவன்
சுடர்மணி மாளிகைத் தோணிபுரத்தவன்
(6)
பூசுரர் சேர் பூந்தராய் அவன் பொன்னடி
பூசுரர் சேர் பூந்தராய் அவன் பொன்னடி
பூசுரர் சேர் பூந்தராய் அவன் பொன்னடி
பூசுரர் சேர் பூந்தராய் அவன் பொன்னடி
(7)
செருக்குவாய்ப் புடையான் சிரபுரம் என்னில்
செருக்குவாய்ப் புடையான் சிரபுரம் என்னில்
செருக்குவாய்ப் புடையான் சிரபுரம் என்னில்
செருக்குவாய்ப் புடையான் சிரபுரம் என்னில்
(8)
பொன்னடி மாதர் சேர் புறவத்தவன்
பொன்னடி மாதர் சேர் புறவத்தவன்
பொன்னடி மாதர் சேர் புறவத்தவன்
பொன்னடி மாதர் சேர் புறவத்தவன்
(9)
தசமுகன் எரிதர ஊன்று சண்பையான்
தசமுகன் எரிதர ஊன்று சண்பையான்
தசமுகன் எரிதர ஊன்று சண்பையான்
தசமுகன் எரிதர ஊன்று சண்பையான்
(10)
காழியானயன் உள்ளவா காண்பரே
காழியானயன் உள்ளவா காண்பரே
காழியானயன் உள்ளவா காண்பரே
காழியானயன் உள்ளவா காண்பரே
(11)
கொச்சை அண்ணலைக் கூடகிலாருடன் மூடரே
கொச்சை அண்ணலைக் கூடகிலாருடன் மூடரே
கொச்சை அண்ணலைக் கூடகிலாருடன் மூடரே
கொச்சை அண்ணலைக் கூடகிலாருடன் மூடரே
(12)
கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை
கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை
கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை
கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை

 

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page