சீகாழி – சம்பந்தர் தேவாரம் (64)

<– சீகாழி

(1)
வண்டார்குழல் அரிவையொடு பிரியாவகை பாகம்
பெண்தான்மிக ஆனான், பிறைச்சென்னிப் பெருமான்ஊர்
தண்தாமரை மலராள்உறை தவளந்நெடுமாடம்
விண்தாங்குவ போலும்மிகு வேணுபுரம் அதுவே
(2)
படைப்புந்நிலை இறுதிப்பயன் பருமையொடு நேர்மை
கிடைப் பல்கணம் உடையான், கிறி பூதப்படையான் ஊர்
புடைப்பாளையின் கமுகின்னொடு புன்னைமலர் நாற்றம்
விடைத்தே வரு தென்றல்மிகு வேணுபுரம் அதுவே
(3)
கடந்தாங்கிய கரியை அவர்வெருவ உரிபோர்த்துப்
படந்தாங்கிய அரவக்குழைப் பரமேட்டிதன் பழவூர்
நடந்தாங்கிய நடையார் நல பவளத்துவர் வாய்மேல்
விடந்தாங்கிய கண்ணார்பயில் வேணுபுரம் அதுவே
(4)
தக்கன்தன் சிரமொன்றினை அரிவித்தவன் தனக்கு
மிக்கவ் வரமருள் செய்தஎம் விண்ணோர் பெருமான்ஊர்
பக்கம்பல மயிலாடிட மேகம் முழவதிர
மிக்கம் மது வண்டார்பொழில் வேணுபுரம் அதுவே
(5)
நானாவித உருவான், நமையாள்வான், அணுகாதார்
வானார் திரிபுர மூன்றெரி உண்ணச் சிலைதொட்டான்
தேனார்ந்தெழு கதலிக்கனி உண்பான் திகழ் மந்தி
மேல்நோக்கி நின்றிரங்கும் பொழில் வேணுபுரம் அதுவே
(6)
மண்ணோர்களும் விண்ணோர்களும் வெருவிம் மிக அஞ்சக்
கண்ணார் சலமூடிக் கடலோங்க உயர்ந்தான்ஊர்
தண்ணார் நறுங்கமலம் மலர் சாய இளவாளை
விண்ணார் குதிகொள்ளும் வியன் வேணுபுரம் அதுவே
(7)
(8)
மலையான் மகள் அஞ்ச வரையெடுத்த வலிஅரக்கன்
தலைதோள்அவை நெரியச்சரண் உகிர் வைத்தவன் தன்னூர்
கலைஆறொடு சுருதித்தொகை கற்றோர்மிகு கூட்டம்
விலையாயின சொல் தேர்தரு வேணுபுரம் அதுவே
(9)
வயமுண் தவமாலும் அடி காணாதலமாக்கும்
பயனாகிய பிரமன் படுதலையேந்திய பரனூர்
கயமேவிய சங்கம்தரு கழிவிட்டுயர் செந்நெல்
வியன்மேவி வந்துறங்கும் பொழில் வேணுபுரம் அதுவே
(10)
மாசேறிய உடலார்அமண் குழுக்கள்ளொடு தேரர்
தேசேறிய பாதம் வணங்காமைத் தெரியான்ஊர்
தூசேறிய அல்குல் துடியிடையார் துணைமுலையார்
வீசேறிய புருவத்தவர் வேணுபுரம் அதுவே
(11)
வேதத்தொலியாலும் மிகு வேணுபுரம் தன்னைப்
பாதத்தினில் மனம் வைத்தெழு பந்தன்தன் பாடல்
ஏதத்தினை இல்லா இவைபத்தும் இசை வல்லார்
கேதத்தினை இல்லார், சிவ கெதியைப் பெறுவாரே

 

கீழைத்திருக்காட்டுப்பள்ளி:

<– சோழ நாடு (காவிரி வடகரை)

(குறிப்பு: திருஞானசம்பந்தரால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)

(சம்பந்தர் தேவாரம்):

(1)
செய்யருகே புனல்பாய ஓங்கிச் செங்கயல் பாயச் சில மலர்த்தேன்
கையருகே கனி வாழையீன்று கானலெல்லாம் கமழ் காட்டுப்பள்ளிப்
பையருகே அழல்வாய ஐவாய்ப் பாம்பணையான் பணைத்தோளி பாகம்
மெய்யருகே உடையானை, உள்கி விண்டவர் ஏறுவர் மேலுலகே
(2)
(3)
திரைகள் எல்லாம் அலரும் சுமந்து செழுமணி முத்தொடு பொன்வரன்றிக்
கரைகள் எல்லாம் அணி சேர்ந்து உரிஞ்சிக் காவிரி கால்பொரு காட்டுப்பள்ளி
உரைகள் எல்லாம் உணர்வெய்தி நல்ல உத்தமராய் உயர்ந்தார் உலகில்
அரவமெல்லாம் அரையார்த்த செல்வர்க்கு ஆட்செய அல்லல் அறுக்கலாமே
(4)
தோலுடையான்; வண்ணப் போர்வையினான்; சுண்ண வெண்ணீறு துதைந்திலங்கு
நூலுடையான்; இமையோர் பெருமான்; நுண்ணறிவால் வழிபாடு செய்யும்
காலுடையான்; கரிதாய கண்டன்; காதலிக்கப்படும் காட்டுப்பள்ளி
மேலுடையான்; இமையாத முக்கண் மின்னிடையாளொடும் வேண்டினானே
(5)
சலசல சந்தகிலோடு முந்திச் சந்தனமே கரை சார்த்தியெங்கும்
பலபல வாய்த்தலை ஆர்த்துமண்டிப் பாய்ந்திழி காவிரிப் பாங்கரின் வாய்க்
கலகல நின்ற திருங்கழலான் காதலிக்கப்படும் காட்டுப்பள்ளிச்
சொலவல தொண்டர்கள் ஏத்தநின்ற சூலம் வல்லான் கழல் சொல்லுவோமே
(6)
தளையவிழ் தண்ணிற நீலநெய்தல் தாமரை செங்கழு நீருமெல்லாம்
களைஅவிழும் குழலார் கடியக் காதலிக்கப்படும் காட்டுப்பள்ளித்
துளை பயிலும் குழலியாழ் முரலத் துன்னிய இன்னிசையால் துதைந்த
அளைபயில் பாம்பரை ஆர்த்த செல்வர்க்கு ஆட்செய அல்லல் அறுக்கலாமே
(7)
முடி கையினால் தொடு மோட்டுழவர் முன்கைத் தருக்கைக் கரும்பின்கட்டி
கடிகையினால் எறி காட்டுப்பள்ளி காதல் செய்தான், கரிதாய கண்டன்
பொடியணி மேனியினானை உள்கிப் போதொடு நீர்சுமந்தேத்தி முன்னின்று
அடி கையினால் தொழவல்ல தொண்டர் அருவினையைத் துரந்து ஆட்செய்வாரே
(8)
பிறையுடையான்; பெரியோர்கள் பெம்மான்; பெய்கழல் நாள்தொறும் பேணியேத்த
மறையுடையான்; மழு வாளுடையான்; வார்தரு மால்கடல் நஞ்சமுண்ட
கறையுடையான்; கனலாடு கண்ணால் காமனைக் காய்ந்தவன்; காட்டுப்பள்ளிக்
குறையுடையான்; குறள் பூதச்செல்வன் குரைகழலே கைகள் கூப்பினோமே
(9)
செற்றவர் தம்அரணம் அவற்றைச் செவ்வழல்வாய் எரியூட்டி நின்றும்
கற்றவர் தாம் தொழுதேத்த நின்றான் காதலிக்கப்படும் காட்டுப்பள்ளி
உற்றவர் தாம் உணர்வெய்தி நல்ல உம்பருள்ளார் தொழுதேத்த நின்ற
பெற்றமரும் பெருமானை அல்லால் பேசுவதும் மற்றொர் பேச்சிலோமே
(10)
ஒண்துவரார் துகிலாடை மெய் போர்த்து, உச்சி கொளாமை உண்டே உரைக்கும்
குண்டர்களோடு அரைக் கூறையில்லார் கூறுவதாம் குணமல்ல கண்டீர்
அண்ட மறையவன் மாலும் காணா ஆதியினான்உறை காட்டுப்பள்ளி
வண்டமரும் மலர்க் கொன்றைமாலை வார்சடையான் கழல் வாழ்த்துவோமே
(11)
பொன்னியல் தாமரை நீலநெய்தல் போதுகளால் பொலிவெய்து பொய்கைக்
கன்னியர் தாங்குடை காட்டுப்பள்ளிக் காதலனைக் கடற்காழியர்கோன்
துன்னிய இன்னிசையால் துதைந்து சொல்லிய ஞானசம்பந்தன் நல்ல
தன்னிசையால் சொன்ன மாலை பத்தும் தாங்க வல்லார் புகழ் தாங்குவாரே

 

திருப்பல்லவனீச்சரம்:

<-- சோழ நாடு (காவிரி வடகரை)

(குறிப்பு: திருஞானசம்பந்தரால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)
 
சம்பந்தர் தேவாரம்:

 

திருப்பனந்தாள்:

<– சோழ நாடு (காவிரி வடகரை)

(குறிப்பு: திருஞானசம்பந்தரால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)

(சம்பந்தர் தேவாரம்):

(1)
கண்பொலி நெற்றியினான், திகழ் கையிலொர் வெண்மழுவான்
பெண்புணர் கூறுடையான், மிகு பீடுடை மால்விடையான்
விண்பொலி மாமதி சேர்தரு செஞ்சடை வேதியனூர்
தண்பொழில்சூழ் பனந்தாள் திருத்தாடகை ஈச்சரமே
(2)
விரித்தவன் நான்மறையை, மிக்க விண்ணவர் வந்திறைஞ்ச
எரித்தவன் முப்புரங்கள், இயலேழுலகில் உயிரும்
பிரித்தவன், செஞ்சடைமேல் நிறை பேரொலி வெள்ளம் தன்னைத்
தரித்தவன் ஊர் பனந்தாள் திருத்தாடகை ஈச்சரமே
(3)
உடுத்தவன் மானுரிதோல், கழலுள்க வல்லார் வினைகள்
கெடுத்தருள் செய்ய வல்லான், கிளர் கீதமொர் நான்மறையான்
மடுத்தவன் நஞ்சமுதா, மிக்க மாதவர் வேள்வியைமுன்
தடுத்தவன் ஊர் பனந்தாள் திருத்தாடகை ஈச்சரமே
(4)
சூழ்தரு வல்வினையும், உடல் தோன்றிய பல்பிணியும்
பாழ்பட வேண்டுதிரேல் மிக ஏத்துமின், பாய்புனலும்
போழிள வெண்மதியும் மனல் பொங்கரவும் புனைந்த
தாழ்சடையான் ஊர் பனந்தாள் திருத்தாடகை ஈச்சரமே
(5)
விடம்படு கண்டத்தினான், இருள் வெள்வளை மங்கையொடும்
நடம்புரி கொள்கையினான், அவனெம் இறை, சேருமிடம்
படம்புரி நாகமொடு திரை பன்மணியும் கொணரும்
தடம்புனல் சூழ் பனந்தாள் திருத்தாடகை ஈச்சரமே
(6)
விடையுயர் வெல்கொடியான், அடி விண்ணொடு மண்ணுமெல்லாம்
புடைபட ஆடவல்லான், மிகு பூதமார் பல்படையான்
தொடைநவில் கொன்றையொடு வன்னி துன்னெருக்கும் அணிந்த
சடையவன் ஊர் பனந்தாள் திருத்தாடகை ஈச்சரமே
(7)
மலையவன் முன்பயந்த மட மாதையொர் கூறுடையான்
சிலைமலி வெங்கணையால் புரமூன்றவை செற்றுகந்தான்
அலைமலி தண்புனலும் மதிஆடரவும் அணிந்த
தலையவன் ஊர் பனந்தாள் திருத்தாடகை ஈச்சரமே
(8)
செற்றரக்கன் வலியைத் திருமெல் விரலால் அடர்த்து
முற்றும் வெண்ணீறணிந்த திருமேனியன், மும்மையினான்
புற்றரவம் புலியின் உரிதோலொடு கோவணமும்
தற்றவன் ஊர் பனந்தாள் திருத்தாடகை ஈச்சரமே
(9)
வில்மலை நாணரவம், மிகு வெங்கனல் அம்பதனால்
புன்மை செய் தானவர்தம் புரம் பொன்றுவித்தான், புனிதன்
நன்மலர் மேலயனும் நண்ணு நாரணனும் அறியாத்
தன்மையன் ஊர் பனந்தாள் திருத்தாடகை ஈச்சரமே
(10)
ஆதர் சமணரொடும், மடைஐந்துகில் போர்த்துழலும்
நீதர் உரைக்கும் மொழியவை கொள்ளன்மின், நின்மலனூர்
போதவிழ் பொய்கைதனுள் திகழ் புள்ளிரியப் பொழில்வாய்த்
தாதவிழும் பனந்தாள் திருத்தாடகை ஈச்சரமே
(11)
தண்வயல் சூழ்பனந்தாள் திருத்தாடகை ஈச்சரத்துக்
கண்ணயலே பிறையானவன் தன்னைமுன் காழியர்கோன்
நண்ணிய செந்தமிழால் மிகு ஞானசம்பந்தன் நல்ல
பண்ணியல் பாடல்வல்லார் அவர் தம்வினை பற்றறுமே

 

சேய்ஞலூர்:

<– சோழ நாடு (காவிரி வடகரை)

(குறிப்பு: திருஞானசம்பந்தரால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)

(சம்பந்தர் தேவாரம்):

(1)
நூலடைந்த கொள்கையாலே நுன்னடி கூடுதற்கு
மாலடைந்த நால்வர்கேட்க நல்கிய நல்லறத்தை
ஆலடைந்த நீழல்மேவி அருமறை சொன்னதென்னே
சேலடைந்த தண்கழனிச் சேய்ஞலூர் மேயவனே
(2)
நீறடைந்த மேனியின்கண் நேரிழையாள் ஒருபால்
கூறடைந்த கொள்கையன்றிக் கோல வளர்சடைமேல்
ஆறடைந்த திங்கள்சூடி அரவம் அணிந்ததென்னே
சேறடைந்த தண்கழனிச் சேய்ஞலூர் மேயவனே
(3)
ஊனடைந்த வெண்தலையினோடு பலிதிரிந்து
கானடைந்த பேய்களோடு பூதம் கலந்துடனே
மானடைந்த நோக்கிகாண மகிழ்ந்தெரி ஆடலென்னே
தேனடைந்த சோலைமல்கு சேய்ஞலூர் மேயவனே
(4)
வீணடைந்த மும்மதிலும் வில்மலையா, அரவின்
நாணடைந்த வெஞ்சரத்தால் நல்லெரி ஊட்டலென்னே
பாணடைந்த வண்டுபாடும் பைம்பொழில் சூழ்ந்தழகார்
சேணடைந்த மாடமல்கு சேய்ஞலூர் மேயவனே
(5)
பேயடைந்த காடிடமாப் பேணுவதன்றியும் போய்
வேயடைந்த தோளியஞ்ச வேழம் உரித்ததென்னே
வாயடைந்த நான்மறை ஆறங்கமோடு ஐவேள்வித்
தீயடைந்த செங்கையாளர் சேய்ஞலூர் மேயவனே
(6)
காடடைந்த ஏனமொன்றின் காரணமாகி வந்து
வேடடைந்த வேடனாகி விசயனொடு எய்ததென்னே
கோடடைந்த மால்களிற்றுக் கோச்செங்கணாற்கு அருள்செய்
சேடடைந்த செல்வர் வாழும் சேய்ஞலூர் மேயவனே
(7)
பீரடைந்த பாலதாட்டப் பேணாத வன்தாதை
வேரடைந்து பாய்ந்த தாளை வேர்த்தடிந்தான் தனக்குத்
தாரடைந்த மாலைசூட்டித் தலைமை வகுத்ததென்னே
சீரடைந்த கோயில்மல்கு சேய்ஞலூர் மேயவனே
(8)
மாவடைந்த தேரரக்கன் வலி தொலைவித்தவன் தன்
நாவடைந்த பாடல்கேட்டு நயந்தருள் செய்ததென்னே
பூவடைந்த நான்முகன்போல் பூசுரர் போற்றி செய்யும்
சேவடைந்த ஊர்தியானே சேய்ஞலூர் மேயவனே
(9)
காரடைந்த வண்ணனோடு, கனகம்அனையானும்
பாரடைந்தும் விண்பறந்தும் பாதமுடி காணார்
சீரடைந்து வந்துபோற்றச் சென்றருள் செய்ததென்னே
தேரடைந்த மாமறுகில் சேய்ஞலூர் மேயவனே
(10)
மாசடைந்த மேனியாரும், மனம்திரியாத கஞ்சி
நேசடைந்த ஊணினாரும் நேசமிலாததென்னே
வீசடைந்த தோகையாட, விரைகமழும் பொழில்வாய்த்
தேசடைந்த வண்டுபாடும் சேய்ஞலூர் மேயவனே
(11)
சேயடைந்த சேய்ஞலூரில் செல்வன் சீர்பரவித்
தோயடைந்த வண்வயல்சூழ் தோணிபுரத் தலைவன்
சாயடைந்த ஞானமல்கு சம்பந்தன் இன்னுரைகள்
வாயடைந்து பாடவல்லார் வானுலகு ஆள்பவரே

 

திருந்துதேவன்குடி:

<– சோழ நாடு (காவிரி வடகரை)

(குறிப்பு: திருஞானசம்பந்தரால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)

(சம்பந்தர் தேவாரம்):

(1)
மருந்து வேண்டில்இவை, மந்திரங்கள்இவை
புரிந்து கேட்கப்படும் புண்ணியங்கள்இவை
திருந்துதேவன்குடித் தேவர் தேவெய்திய
அருந்தவத்தோர் தொழும் அடிகள் வேடங்களே
(2)
வீதி போக்காவன, வினையை வீட்டுவ்வன
ஓதியோர்க்கு அகப்படாப் பொருளை ஓர்விப்பன
தீதில் தேவன்குடித் தேவர் தேவெய்திய
ஆதி அந்தம்இலா அடிகள் வேடங்களே
(3)
மானம் ஆக்குவ்வன, மாசு நீக்குவ்வன
வானைஉள்கச் செலும் வழிகள் காட்டுவ்வன
தேனும் வண்டும் இசை பாடும் தேவன்குடி
ஆனஞ்சாடும் முடி அடிகள் வேடங்களே
(4)
செவிகள் ஆர்விப்பன, சிந்தையுள் சேர்வன
கவிகள் பாடுவ்வன, கண் குளிர்விப்பன
புவிகள் பொங்கப் புனல் பாயும் தேவன்குடி
அவிகள் உய்க்கப்படும் அடிகள் வேடங்களே
(5)
விண்ணுலாவும் நெறி, வீடு காட்டும் நெறி
மண்ணுலாவும் நெறி, மயக்கம் தீர்க்கும் நெறி
தெண்ணிலா வெண்மதி தீண்டு தேவன்குடி
அண்ணல் ஆனேறுடை அடிகள் வேடங்களே
(6)
பங்கமென்னப் படர் பழிகள் என்னப்படா
புங்கமென்னப் படர் புகழ்கள் என்னப்படும்
திங்கள் தோயும் பொழில் தீண்டு தேவன்குடி
அங்கம்ஆறும் சொன்ன அடிகள் வேடங்களே
(7)
கரைதல் ஒன்றும்இலை கருதவல்லார் தமக்கு
உரையில் ஊனம்இலை உலகினில் மன்னுவர்
திரைகள் பொங்கப் புனல்பாயும் தேவன்குடி
அரையில் வெண்கோவணத்தடிகள் வேடங்களே
(8)
உலகமுட்கும் திறல்உடை அரக்கன் வலி
விலகு பூதக்கணம் வெருட்டும் வேடத்தின
திலகமாரும் பொழில் சூழ்ந்த தேவன்குடி
அலர் தயங்கும்முடி அடிகள் வேடங்களே
(9)
துளக்கம் இல்லாதன, தூய தோற்றத்தன
விளக்கம் ஆக்குவ்வன, வெறி வண்டாரும் பொழில்
திளைக்கும் தேவன்குடித் திசைமுகனோடு மால்
அளக்க ஒண்ணா வண்ணத்தடிகள் வேடங்களே
(10)
செருமரு தண்துவர்த் தேரர் அமணாதர்கள்
உருமருவப் படாத் தொழும்பர்தம் உரைகொளேல்
திருமருவும் பொய்கை சூழ்ந்த தேவன்குடி
அருமருந்தாவன அடிகள் வேடங்களே
(11)
சேடர் தேவன்குடித் தேவர்தேவன் தனை
மாடம் ஓங்கும் பொழில்மல்கு தண் காழியான்
நாடவல்ல தமிழ் ஞானசம்பந்தன
பாடல் பத்தும் வல்லார்க்கில்லையாம் பாவமே

 

திருக்கழிப்பாலை – சுந்தரர் தேவாரம்:

<– திருக்கழிப்பாலை

(1)
செடியேன் தீவினையில் தடுமாறக் கண்டாலும்
அடியான் ஆவஎனாது ஒழிதல் தகவாமே
முடிமேல் மாமதியும் அரவும் உடன் துயிலும்
வடிவே தாம் உடையார் மகிழும் கழிப்பாலையதே
(2)
எங்கேனும் இருந்துன் அடியேன் உனை நினைந்தால்
அங்கே வந்தென்னொடும் உடனாகி நின்றருளி
இங்கே என்வினையை அறுத்திட்டெனையாளும்
கங்கா நாயகனே கழிப்பாலை மேயானே
(3)
ஒறுத்தாய், நின்னருளில் அடியேன் பிழைத்தனகள்
பொறுத்தாய், எத்தனையும் நாயேனைப் பொருட்படுத்துச்
செறுத்தாய், வேலைவிடம் மறியாமல் உண்டு கண்டம்
கறுத்தாய், தண்கழனிக் கழிப்பாலை மேயானே
(4)
சுரும்பார் விண்ட மலரவை தூவித் தூங்கு கண்ணீர்
அரும்பா நிற்கும் மனத்தடியாரொடும் அன்பு செய்வன்
விரும்பேன் உன்னையல்லால் ஒரு தெய்வம் என்மனத்தால்
கரும்பாரும் கழனிக் கழிப்பாலை மேயானே
(5)
ஒழிப்பாய் என்வினையை, உகப்பாய் முனிந்தருளித்
தெழிப்பாய் மோதுவிப்பாய், விலைஆவணம் உடையாய்
சுழிப்பால் கண்டடங்கச் சுழியேந்து மாமறுகில்
கழிப்பாலை மருவும்  கனலேந்து கையானே
(6)
ஆர்த்தாய் ஆடரவை, அரைஆர் புலியதள் மேல்
போர்த்தாய் யானையின் தோல் உரிவை புலால்நாறக்
காத்தாய் தொண்டுசெய்வார் வினைகள் அவைபோகப்
பார்த்தாய், நுற்கிடமாம் பழியில் கழிப்பாலையதே
(7)
பருத்தாள் வன்பகட்டைப் படமாக முன்பற்றி அதள்
உரித்தாய் யானையின்தோல், உலகம் தொழும் உத்தமனே
எரித்தாய் முப்புரமும், இமையோர்கள் இடர் கடியும்
கருத்தா, தண்கழனிக் கழிப்பாலை மேயானே.
(8)
படைத்தாய் ஞாலமெலாம், படர் புன்சடை எம் பரமா
உடைத்தாய் வேள்வி தனை, உமையாளைஒர் கூறுடையாய்
அடர்த்தாய் வல்லரக்கன் தலை பத்தொடு தோள்நெரியக்
கடற்சாரும் கழனிக் கழிப்பாலை மேயானே
(9)
பொய்யா நாவதனால் புகழ்வார்கள் மனத்தினுள்ளே
மெய்யே நின்றெரியும் விளக்கேஒத்த தேவர்பிரான்
செய்யானும் கரிய நிறத்தானும் தெரிவரியான்
மையார் கண்ணியொடும் மகிழ்வான் கழிப்பாலையதே
(10)
பழிசேரில் புகழான் பரமன் பரமேட்டி
கழியார் செல்வ மல்கும் கழிப்பாலை மேயானைத்
தொழுவான் நாவலர்கோன் ஆரூரன் உரைத்ததமிழ்
வழுவா மாலை வல்லார் வானோர் உலகாள்பவரே

 

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page