திருக்கானூர் – அப்பர் தேவாரம்:

<-- திருக்கானூர்

(1)
திருவின் நாதனும், செம்மலர் மேலுறை
உருவனாய்; உலகத்தின் உயிர்க்கெலாம்
கருவனாகி முளைத்தவன்; கானூரில்
பரமனாய பரஞ்சுடர் காண்மினே
(2)
பெண்டிர் மக்கள் பெருந்துணை நன்னிதி
உண்டின்றே என்று உகவன்மின் ஏழைகாள்
கண்டு கொள்மின்நீர் கானூர் முளையினைப்
புண்டரீகப் பொதும்பில் ஒதுங்கியே
(3)
தாயத்தார் தமர் நல்நிதி என்னும்இம்
மாயத்தே கிடந்திட்டு மயங்கிடேல்
காயத்தே உளன் கானூர் முளையினை
வாயத்தால் வணங்கீர் வினை மாயவே
(4)
குறியில் நின்றுண்டு கூறையிலாச் சமண்
நெறியை விட்டு நிறைகழல் பற்றினேன்
அறியல் உற்றிரேல் கானூர் முளையவன்
செறிவு செய்திட்டு இருப்பதென் சிந்தையே
(5)
பொத்தல் மண்சுவர்ப் பொல்லாக் குரம்பையை
மெய்த்தன் என்று வியந்திடல் ஏழைகாள்
சித்தர் பத்தர்கள் சேர் திருக்கானூரில்
அத்தன் பாதம் அடைதல் கருமமே
(6)
கல்வி ஞானக் கலைப் பொருளாயவன்
செல்வம் மல்கு திருக்கானூர் ஈசனை
எல்லியும் பகலும் இசைவானவா
சொல்லிடீர் நும் துயரங்கள் தீரவே
(7)
நீரும் பாரும் நெருப்பும் அருக்கனும்
காரும் மாருதம் கானூர் முளைத்தவன்
சேர்வும் ஒன்றறியாது திசைதிசை
ஓர்வும் ஒன்றிலரோடித் திரிவரே
(8)
ஓமத்தோடு அயன் மாலறியா வணம்
வீமப் பேரொளியாய விழுப்பொருள்
காமற் காய்ந்தவன் கானூர் முளைத்தவன்
சேமத்தால் இருப்பாவது என் சிந்தையே
(9)
(10)
வன்னி கொன்றை எருக்கணிந்தான் மலை
உன்னியே சென்றெடுத்தவன் ஒண்திறல்
தன்னை வீழத் தனிவிரல் வைத்தவன்
கன்னி மாமதில் கானூர்க் கருத்தனே

 

திருக்கானூர் – சம்பந்தர் தேவாரம்:

<– திருக்கானூர்

(1)
வானார்சோதி மன்னுசென்னி வன்னி புனம் கொன்றைத்
தேனார்போது தானார்கங்கை திங்களொடுசூடி
மானேர்நோக்கி கண்டங்குவப்ப மாலையாடுவார்
கானூர்மேய கண்ணார் நெற்றியான் ஊர் செல்வரே
(2)
நீந்தலாகா வெள்ளமூழ்கு நீள்சடை தன்மேலோர்
ஏய்ந்தகோணல் பிறையோடரவு கொன்றை எழிலாரப்
போந்த மென்சொல் இன்பம் பயந்த மைந்தர்அவர் போலாம்
காந்தள்விம்மு கானூர்மேய சாந்த நீற்றாரே
(3)
சிறையார்வண்டும் தேனும்விம்மு செய்ய மலர்க்கொன்றை
மறையார்பாடல் ஆடலோடு மால்விடை மேல்வருவார்
இறையார்வந்தென் இல்புகுந்தென் எழில்நலமும் கொண்டார்
கறையார்சோலைக் கானூர்மேய பிறையார் சடையாரே
(4)
விண்ணார் திங்கள் கண்ணிவெள்ளை மாலை அதுசூடித்
தண்ணார்அக்கோடு ஆமைபூண்டு தழைபுன் சடைதாழ
எண்ணா வந்தென் இல்புகுந்தங்கு எவ்வ நோய்செய்தான்
கண்ணார் சோலைக் கானூர்மேய விண்ணோர் பெருமானே
(5)
தார்கொள் கொன்றைக் கண்ணியோடும் தண் மதியஞ்சூடி
சீர்கொள்பாடல் ஆடலோடு சேடராய் வந்து
ஊர்கள் தோறும் ஐயமேற்று என்னுள் வெந்நோய் செய்தார்
கார்கொள் சோலைக் கானூர்மேய கறைக் கண்டத்தாரே
(6)
முளிவெள் எலும்பு நீறுநூலு மூழ்கு மார்பராய்
எளிவந்தார் போல் ஐயம்என்றென் இல்லே புகுந்து உள்ளத்
தெளிவுநாணும் கொண்ட கள்வர் தேறலார் பூவில்
களிவண்டு யாழ்செய் கானூர்மேய ஒளிவெண் பிறையாரே
(7)
மூவா வண்ணர், முளைவெண் பிறையர், முறுவல் செய்திங்கே
பூவார்கொன்றை புனைந்து வந்தார், பொக்கம் பலபேசிப்
போவார் போல மால் செய்துள்ளம் புக்க புரிநூலர்
தேவார்சோலைக் கானூர்மேய தேவ தேவரே
(8)
தமிழின் நீர்மை பேசித் தாளம் வீணை பண்ணிநல்ல
முழவமொந்தை மல்குபாடல் செய்கை இடமோவார்
குமிழின்மேனி தந்துகோல நீர்மை அதுகொண்டார்
கமழும் சோலைக் கானூர்மேய பவள வண்ணரே
(9)
அந்தம்ஆதி அயனுமாலும் ஆர்க்கும் அறிவரியான்
சிந்தையுள்ளு நாவின்மேலும் சென்னியும் மன்னினான்
வந்தென் உள்ளம் புகுந்துமாலை காலை ஆடுவான்
கந்தமல்கு கானூர்மேய எந்தை பெம்மானே
(10)
ஆமை அரவோடு ஏன வெண்கொம்பு அக்கு மாலைபூண்டு
ஆமோர் கள்வர் வெள்ளர்போல உள் வெந்நோய் செய்தார்
ஓமவேத நான்முகனும் கோண் நாகணையானும்
சேமமாய செல்வர் கானூர் மேய சேடரே
(11)
கழுது துஞ்சும் கங்குலாடும் கானூர் மேயானைப்
பழுதின்ஞான சம்பந்தன்சொல் பத்தும் பாடியே
தொழுதுபொழுது தோத்திரங்கள் சொல்லித் துதித்துநின்று
அழுதுநக்கும் அன்புசெய்வார் அல்லல் அறுப்பாரே

 

திருநின்றியூர்:

<-- சோழ நாடு (காவிரி வடகரை)

சம்பந்தர் தேவாரம்:
சூலம்படை சுண்ணப்
அப்பர் தேவாரம்:
கொடுங்கண் வெண்தலை
சுந்தரர் தேவாரம்:
1. திருவும் வண்மையும்
2. அற்றவனார் அடியார்

 

திருநெய்த்தானம் – சம்பந்தர் தேவாரம்:

<– திருநெய்த்தானம்

(1)
மையாடிய கண்டன், மலைமகள் பாகமதுடையான்
கையாடிய கேடில் கரியுரி மூடிய ஒருவன்
செய்யாடிய குவளைம் மலர் நயனத்தவளோடும்
நெய்யாடிய பெருமான் இடம் நெய்த்தானம் எனீரே
(2)
பறையும் பழிபாவம், படு துயரம் பலதீரும்
பிறையும் புனலரவும் படுசடை எம்பெருமான் ஊர்
அறையும்புனல் வருகாவிரி அலைசேர் வடகரை மேல்
நிறையும்புனை மடவார்பயில் நெய்த்தானம் எனீரே
(3)
பேயாயின பாடப்பெரு நடமாடிய பெருமான்
வேயாயின தோளிக்கொரு பாகம்மிக உடையான்
தாயாகிய உலகங்களை நிலைபேறுசெய் தலைவன்
நேயாடிய பெருமான்இடம் நெய்த்தானம் எனீரே
(4)
சுடுநீறணி அண்ணல்சுடர் சூலம் அனலேந்தி
நடுநள்ளிருள் நடமாடிய நம்பனுறை இடமாம்
கடுவாளிள அரவாடுமிழ் கடல் நஞ்சமதுண்டான்
நெடுவாளைகள் குதிகொள்உயர் நெய்த்தானம் எனீரே
(5)
நுகர் ஆரமொடேலம் மணி செம்பொன் உரைஉந்திப்
பகராவரு புனல்காவிரி பரவிப் பணிந்தேத்தும்
நிகரான் மணலிடு தண்கரை நிகழ்வாய நெய்த்தான
நகரான் அடியேத்த நமைநடலை அடையாவே
(6)
விடையார் கொடியுடைய அணல், வீந்தார் வெளை எலும்பும்
உடையார், நறுமாலை சடையுடையார், அவர் மேய
புடையேபுனல் பாயும்வயல் பொழில்சூழ்ந்த நெய்த்தானம்
அடையாதவர் என்றும் அமருலகம் அடையாரே
(7)
நிழலார்வயல் கமழ்சோலைகள் நிறைகின்ற நெய்த்தானத்து
அழலானவன் அனல்அங்கையில் ஏந்திஅழகாய
கழலான் அடி நாளும் கழலாதே விடலின்றித்
தொழலாரவர் நாளும் துயரின்றித் தொழுவாரே
(8)
அறையார்கடல் இலங்கைக்கிறை அணிசேர் கயிலாயம்
இறையாரமுன் எடுத்தான்இருபது தோளிற ஊன்றி
நிறையார்புனல் நெய்த்தானன்நல் நிகழ்சேவடி பரவக்
கறையார்கதிர் வாள்ஈந்தவர் கழல்ஏத்துதல் கதியே
(9)
கோலம்முடி நெடுமாலொடு, கொய் தாமரையானும்
சீலம் அறிவரிதாய் ஒளி திகழ்வாய நெய்த்தானம்
காலம்பெற மலர்நீரவை தூவித் தொழுதேத்தும்
ஞாலம்புகழ் அடியாருடல் உறுநோய் நலியாவே
(10)
மத்தம்மலி சித்தத்திறை மதியில்அவர் சமணர்
புத்தர்அவர் சொன்னம்மொழி பொருளா நினையேன்மின்
நித்தம்பயில் நிமலன்உறை நெய்த்தானமதேத்தும்
சித்தம்உடை அடியார்உடல் செறுநோய் அடையாவே
(11)
தலமல்கிய புனற்காழியுள் தமிழ்ஞான சம்பந்தன்
நிலமல்கிய புகழான்மிகு நெய்த்தானனை நிகரில்
பலமல்கிய பாடல்இவை பத்தும் மிக வல்லார்
சிலமல்கிய செல்வன்அடி சேர்வர் சிவகதியே

 

திருநெய்த்தானம் – அப்பர் தேவாரம் (5):

<– திருநெய்த்தானம்

(1)
மெய்த்தானத்தகம்படியுள் ஐவர் நின்று
    வேண்டிற்றுக் குறைமுடித்து வினைக்குக் கூடாம்
இத்தானத்திருந்திங்ஙன் உய்வான் எண்ணும்
    இதனையொழி இயம்பக்கேள் ஏழை நெஞ்சே
மைத்தான நீள்நயனி பங்கன், வங்கம்
    வருதிரைநீர் நஞ்சுண்ட கண்டன் மேய
நெய்த்தான நன்னகர் என்றேத்தி நின்று
    நினையுமா நினைந்தக்கால் உய்யலாமே
(2)
ஈண்டா இரும்பிறவித் துறவா ஆக்கை
    இதுநீங்கலாம் விதியுண்டு என்று சொல்ல
வேண்டாவே நெஞ்சமே விளம்பக் கேள்நீ
    விண்ணவர்தம் பெருமானார், மண்ணிலென்னை
ஆண்டான், அன்று அருவரையால் புரமூன்றெய்த
    அம்மானை, அரி அயனும் காணா வண்ணம்
நீண்டான்உறை துறைநெய்த்தானம் என்று
    நினையுமா நினைந்தக்கால் உய்யலாமே
(3)
பரவிப் பலபலவும் தேடியோடிப்
    பாழாம் குரம்பையிடைக் கிடந்து வாளா
குரவிக் குடிவாழ்க்கை வாழ எண்ணிக்
    குலைகை தவிர்நெஞ்சே கூறக்கேள்நீ
இரவிக் குலமுதலா வானோர் கூடி
    எண்ணிறந்த கோடி அமரர்ஆயம்
நிரவிக்கரியவன் நெய்த்தானம் என்று
    நினையுமா நினைந்தக்கால் உய்யலாமே
(4)
அலையார் வினைத்திறஞ்சேர் ஆக்கையுள்ளே
    அகப்பட்டுள் ஆசையெனும் பாசம் தன்னுள்
தலையாய்க் கடையாகும் வாழ்வில் ஆழ்ந்து
    தளர்ந்துமிக நெஞ்சமே அஞ்ச வேண்டா
இலையார் புனக்கொன்றை எறிநீர்த் திங்கள்
    இருஞ்சடைமேல் வைத்துகந்தான் இமையோர் ஏத்தும்
நிலையான் உறைநிறை நெய்த்தானம் என்று
    நினையுமா நினைந்தக்கால் உய்யலாமே
(5)
தினைத்தனையோர் பொறையிலா உயிர்போம் கூட்டைப்
    பொருளென்று மிகஉன்னி மதியால்இந்த
அனைத்துலகும் ஆளலாம் என்று பேசும்
    ஆங்காரம் தவிர்நெஞ்சே, அமரர்க்காக
முனைத்துவரு மதில்மூன்றும் பொன்றஅன்று
    முடுகிய வெஞ்சிலை வளைத்துச் செந்தீ மூழ்க
நினைத்த பெருங்கருணையன் நெய்த்தானம் என்று
    நினையுமா நினைந்தக்கால் உய்யலாமே
(6)
மிறைபடும் இவ்வுடல் வாழ்வை மெய்யென்றெண்ணி
    வினையிலே கிடந்தழுந்தி வியவேல் நெஞ்சே
குறைவுடையார் மனத்துளான் குமரன் தாதை
    கூத்தாடும் குணமுடையான், கொலைவேல் கையான்
அறைகழலும் திருவடிமேல் சிலம்பும் ஆர்ப்ப
    அவனிதலம் பெயரவரு நட்டம் நின்ற
நிறைவுடையான் இடமாம் நெய்த்தானம் என்று
    நினையுமா நினைந்தக்கால் உய்யலாமே
(7)
பேசப் பொருளலாப் பிறவி தன்னைப்
    பெரிதென்றுன் சிறுமனத்தால் வேண்டி ஈண்டு
வாசக் குழல்மடவார் போகமென்னும்
    வலைப்பட்டு வீழாதே, வருக நெஞ்சே
தூசக் கரியுரித்தான் தூநீறாடித்
    துதைந்திலங்கு நூல்மார்பன், தொடரகில்லா
நீசர்க்குரியவன் நெய்த்தானம் என்று
    நினையுமா நினைந்தக்கால் உய்யலாமே
(8)
அஞ்சப் புலன் இவற்றால்ஆட்ட ஆட்டுண்டு
    அருநோய்க்கிடமாய உடலின் தன்மை
தஞ்சம் எனக்கருதித் தாழேல் நெஞ்சே
    தாழக் கருதுதியே தன்னைச் சேரா
வஞ்ச மனத்தவர்கள் காணவொண்ணா
    மணிகண்டன் வானவர்தம் பிரான் என்றேத்தும்
நெஞ்சர்க்கினியவன் நெய்த்தானம் என்று
    நினையுமா நினைந்தக்கால் உய்யலாமே
(9)
பொருந்தாத உடலகத்தில் புக்க ஆவி
    போமாறறிந்தறிந்தே புலைவாழ் உன்னி
இருந்தாங்கிடர்ப்பட நீ வேண்டா நெஞ்சே
    இமையவர்தம் பெருமான் என்றுமையாள் அஞ்சக்
கருந்தாள் மதகரியை வெருவச் சீறும்
    கண்ணுதல் கண்டமராடிக் கருதார் வேள்வி
நிரந்தரமா இனிதுறை நெய்த்தானம் என்று
    நினையுமா நினைந்தக்கால் உ ய்யலாமே
(10)
உரித்தன்று உனக்கிவ்வுடலின் தன்மை
    உண்மை உரைத்தேன் விரதமெல்லாம்
தரிந்தும் தவமுயன்றும் வாழா நெஞ்சே
    தம்மிடையில் இல்லார்க்கு ஒன்றல்லார்க்கு அன்னன்
எரித்தான் அனலுடையான் எண்தோளானே
    எம்பெருமான் என்றேத்தா இலங்கைக் கோனை
நெரித்தானை, நெய்த்தானம் மேவினானை
    நினையுமா நினைந்தக்கால் உய்யலாமே

 

திருநெய்த்தானம் – அப்பர் தேவாரம் (4):

<– திருநெய்த்தானம்

(1)
வகையெலாம் உடையாயும் நீயே என்றும்
    வான்கயிலை மேவினாய் நீயே என்றும்
மிகையெலாம் மிக்காயும் நீயே என்றும்
    வெண்காடு மேவினாய் நீயே என்றும்
பகையெலாம் தீர்த்தாண்டாய் நீயே என்றும்
    பாசூர் அமர்ந்தாயும் நீயே என்றும்
திகையெலாம் தொழச் செல்வாய் நீயே என்றும்
    நின்ற நெய்த்தானா என் நெஞ்சுளாயே
(2)
ஆர்த்த எனக்கன்பன் நீயே என்றும்
    ஆதிக் கயிலாயன் நீயே என்றும்
கூர்த்த நடமாடி நீயே என்றும்
    கோடிகா மேய குழகா என்றும்
பார்த்தற்கருள் செய்தாய் நீயே என்றும்
    பழையனூர் மேவிய பண்பா என்றும்
தீர்த்தன் சிவலோகன் நீயே என்றும்
    நின்ற நெய்த்தானா என் நெஞ்சுளாயே
(3)
அல்லாய்ப் பகலானாய் நீயே என்றும்
    ஆதிக் கயிலாயன் நீயே என்றும்
கல்லால் அமர்ந்தாயும் நீயே என்றும்
    காளத்திக் கற்பகமும் நீயே என்றும்
சொல்லாய்ப் பொருளானாய் நீயே என்றும்
    சோற்றுத்துறை உறைவாய் நீயே என்றும்
செல்வாய்த் திருவானாய் நீயே என்றும்
    நின்ற நெய்த்தானா என் நெஞ்சுளாயே
(4)
மின்னேர் இடைபங்கன் நீயே என்றும்
    வெண்கயிலை மேவினாய் நீயே என்றும்
பொன்னேர் சடைமுடியாய் நீயே என்றும்
    பூத கணநாதன் நீயே என்றும்
என்னா விரதத்தாய் நீயே என்றும்
    ஏகம்பத்தென் ஈசன் நீயே என்றும்
தென்னூர்ப் பதியுளாய் நீயே என்றும்
    நின்ற நெய்த்தானா என் நெஞ்சுளாயே
(5)
முந்தி இருந்தாயும் நீயே என்றும்
    முன்கயிலை மேவினாய் நீயே என்றும்
நந்திக்கருள் செய்தாய் நீயே என்றும்
    நடமாடி நள்ளாறன் நீயே என்றும்
பந்திப் பரியாயும் நீயே என்றும்
    பைஞ்ஞீலீ மேவினாய் நீயே என்றும்
சிந்திப்ப அரியாயும் நீயே என்றும்
    நின்ற நெய்த்தானா என் நெஞ்சுளாயே
(6)
தக்கார் அடியார்க்கு நீயே என்றும்
    தலையார் கயிலாயன் நீயே என்றும்
அக்காரம் பூண்டாயும் நீயே என்றும்
    ஆக்கூரில் தான்தோன்றி நீயே என்றும்
புக்காய ஏழுலகும் நீயே என்றும்
    புள்ளிருக்கு வேளூராய் நீயே என்றும்
தெக்காரு மாகோணத்தானே என்றும்
   நின்ற நெய்த்தானா என் நெஞ்சுளாயே
(7)
புகழும் பெருமையாய் நீயே என்றும்
    பூங்கயிலை மேவினாய் நீயே என்றும்
இகழும் தலையேந்தி நீயே என்றும்
    இராமேச்சுரத்தின்பன் நீயே என்றும்
அகழும் மதிலுடையாய் நீயே என்றும்
    ஆலவாய் மேவினாய் நீயே என்றும்
திகழும் மதிசூடி நீயே என்றும்
   நின்ற நெய்த்தானா என் நெஞ்சுளாயே
(8)
வானவர்க்கு மூத்திளையாய் நீயே என்றும்
    வானக் கயிலாயன் நீயே என்றும்
கான நடமாடி நீயே என்றும்
    கடவூரில் வீரட்டன் நீயே என்றும்
ஊனார் முடியறுத்தாய் நீயே என்றும்
    ஒற்றியூர் ஆரூராய் நீயே என்றும்
தேனாய் அமுதானாய் நீயே என்றும்
    நின்ற நெய்த்தானா என் நெஞ்சுளாயே
(9)
தந்தைதாய் இல்லாதாய் நீயே என்றும்
    தலையார் கயிலாயன் நீயே என்றும்
எந்தாய்எம் பிரான்ஆனாய் நீயே என்றும்
    ஏகம்பத்தென் ஈசன் நீயே என்றும்
முந்திய முக்கணாய் நீயே என்றும்
    மூவலூர் மேவினாய் நீயே என்றும்
சிந்தையாய்த் தேனூராய் நீயே என்றும்
    நின்ற நெய்த்தானா என் நெஞ்சுளாயே
(10)
மறித்தான் வலிசெற்றாய் நீயே என்றும்
    வான்கயிலை மேவினாய் நீயே என்றும்
வெறுத்தார் பிறப்பறுப்பாய் நீயே என்றும்
    வீழிமிழலையாய் நீயே என்றும்
அறத்தாய் அமுதீந்தாய் நீயே என்றும்
    யாவர்க்கும் தாங்கொணா நஞ்சமுண்டு
பொறுத்தாய் புலனைந்தும் நீயே என்றும்
    நின்ற நெய்த்தானா என் நெஞ்சுளாயே

 

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page