திருக்கள்ளில்:

<– தொண்டை நாடு

(குறிப்பு: திருஞானசம்பந்தரால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)

சம்பந்தர் தேவாரம்:

(1)
முள்ளின்மேல் முதுகூகை முரலும் சோலை
வெள்ளின்மேல் விடுகூறைக் கொடி விளைந்த
கள்ளில் மேய அண்ணல் கழல்கள் நாளும்
உள்ளுமேல் உயர்வெய்தல் ஒரு தலையே
(2)
ஆடலான், பாடலான், அரவங்கள் பூண்டான்
ஓடலால் கலனில்லான், உறை பதியால்
காடலால் கருதாத கள்ளில் மேயான்
பாடெலாம் பெரியார்கள் பரசுவாரே
(3)
எண்ணார் மும்மதிலெய்த இமையா முக்கண்
பண்ணார் நான்மறை பாடும் பரமயோகி
கண்ணார் நீறணி மார்பன், கள்ளில் மேயான்
பெண்ஆணாம் பெருமான்எம் பிஞ்ஞகனே
(4)
பிறைபெற்ற சடையண்ணல் பெடை வண்டாலும்
நறைபெற்ற விரிகொன்றைத் தார் நயந்த
கறைபெற்ற மிடற்றண்ணல் கள்ளில் மேயான்
நிறைபெற்ற அடியார்கள் நெஞ்சுளானே
(5)
விரையாலும் மலராலும் விழுமை குன்றா
உரையாலும் எதிர்கொள்ள ஊரார் அம்மாக்
கரையார்பொன் புனல்வேலிக் கள்ளில் மேயான்
அரையார் வெண் கோவணத்த அண்ணல் தானே
(6)
நலனாய பலிகொள்கை நம்பான் நல்ல
வலனாய மழுவாளும் வேலும் வல்லான்
கலனாய தலைஓட்டான், கள்ளில் மேயான்
மலனாய தீர்த்தெய்து மாதவத்தோர்க்கே
(7)
பொடியார் மெய்பூசினும் புறவின் அறவம்
குடியா ஊர் திரியினும் கூப்பிடினும்
கடியார்பூம் பொழில் சோலைக் கள்ளில் மேயான்
அடியார் பண்பிகழ்வார்கள் ஆதர்களே
(8)
திருநீல மலரொண் கண் தேவிபாகம்
புரிநூலும் திருநீறும் புல்கு மார்பில்
கருநீல மலர்விம்மு கள்ளில் என்றும்
பெருநீல மிடற்றண்ணல் பேணுவதே
(9)
வரியாய மலரானும், வையந்தன்னை
உரிதாய அளந்தானும் உள்ளுதற்கங்கு
அரியானும், அரிதாய கள்ளில் மேயான்
பெரியார் என்றறிவார்கள் பேசுவாரே
(10)
ஆச்சியப் பேய்களோடு அமணர் குண்டர்
பேச்சிவை நெறியல்ல பேணுமின்கள்
மாச்செய்த வளவயல் மல்கு கள்ளில்
தீச்செய்த சடைஅண்ணல் திருந்தடியே
(11)
திகைநான்கும் புகழ்காழிச் செல்வ மல்கு
பகல்போலும் பேரொளியான் பந்தன்நல்ல
முகைமேவு முதிர்சடையன் கள்ளில் ஏத்தப்
புகழோடும் பேரின்பம் புகுதுமன்றே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page