(குறிப்பு: திருஞானசம்பந்தரால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)
சம்பந்தர் தேவாரம்:
(1)
சுடுகூர் எரிமாலை அணிவர், சுடர்வேலர்
கொடுகூர் மழுவாள் ஒன்றுடையார், விடையூர்வர்
கடுகூர் பசிகாமம் கவலை பிணியில்லார்
வடுகூர் புனல்சூழ்ந்த வடுகூர் அடிகளே
(2)
பாலும் நறுநெய்யும் தயிரும் பயின்றாடி
ஏலும் சுடுநீறும் என்பும் ஒளிமல்கக்
கோலம் பொழிற்சோலைக் கூடி மடஅன்னம்
ஆலும் வடுகூரில் ஆடும் அடிகளே
(3)
சூடும் இளந்திங்கள் சுடர்பொன் சடை தன்மேல்
ஓடும் களியானை உரிபோர்த்துமை அஞ்ச
ஏடு மலர் மோந்தங்கு எழிலார் வரிவண்டு
பாடும் வடுகூரில் ஆடும் அடிகளே
(4)
துவரும் புரிசையும் துதைந்த மணிமாடம்
கவர எரியோட்டிக் கடிய மதிலெய்தார்
கவரு மணி கொல்லைக் கடிய முலைநல்லார்
பவரும் வடுகூரில் ஆடும் அடிகளே
(5)
துணியார் உடையாடை துன்னி அரைதன்மேல்
தணியா அழல்நாகம் தரியா வகை வைத்தார்
பணியார் அடியார்கள் பலரும் பயின்றேத்த
அணியார் வடுகூரில் ஆடும் அடிகளே
(6)
தளரும் கொடியன்னாள் தன்னோடுடனாகிக்
கிளரும் அரவார்த்துக், கிளரும் முடிமேலோர்
வளரும் பிறைசூடி வரிவண்டிசை பாட
ஒளிரும் வடுகூரில் ஆடும் அடிகளே
(7)
நெடியர், சிறிதாய நிரம்பா மதிசூடும்
முடியர், விடையூர்வர், கொடியர் மொழிகொள்ளார்
கடிய தொழிற்காலன் மடிய உதைகொண்ட
அடியர் வடுகூரில் ஆடும் அடிகளே
(8)
பிறையும் நெடுநீரும் பிரியா முடியினார்
மறையும் பலபாடி மயானத்துறைவாரும்
பறையும் அதிர்குழலும் போலப் பலவண்டாங்கு
கறையும் வடுகூரில் ஆடும் அடிகளே
(9)
சந்தம் மலர் வேய்ந்த சடையின் இடைவிம்மு
கந்தம் மிகு திங்கள் சிந்து கதிர்மாலை
வந்து நயந்தெம்மை நன்று அருள்செய்வார்
அந்தண் வடுகூரில் ஆடும் அடிகளே
(10)
திருமால் அடிவீழத், திசை நான்முகனாய
பெருமான் உணர்கில்லாப் பெருமான் நெடுமுடிசேர்
செருமால் விடையூரும் செம்மான் திசை வில்லா
அருமா வடுகூரில் ஆடும் அடிகளே
(11)
படிநோன்பவை யாவர் பழியில் புகழான
கடிநாண் இகழ் சோலை கமழும் வடுகூரைப்
படியான சிந்தை மொழியார் சம்பந்தன்
அடிஞானம் வல்லார் அடிசேர்வார்களே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...