திருஆப்பனூர்:

<– பாண்டிய நாடு

(குறிப்பு: திருஞானசம்பந்தரால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)

(சம்பந்தர் தேவாரம்):

(1)
முற்றும் சடைமுடிமேல் முதிரா இளம்பிறையன்
ஒற்றைப் படஅரவமது கொண்டு அரைக்கணிந்தான்
செற்றமில் சீரானைத் திருஆப்பனூரானைப்
பற்று மனமுடையார் வினை பற்றறுப்பாரே
(2)
குரவங்கமழ்குழலாள் குடிகொண்டு நின்று, விண்ணோர்
விரவும் திருமேனி, விளங்கும் வளைஎயிற்றின்
அரவம் அணிந்தானை, அணிஆப்பனூரானைப்
பரவும் மனமுடையார் வினை பற்றறுப்பாரே
(3)
முருகு விரிகுழலார் மனங்கொள் அநங்கனைமுன்
பெரிது முனிந்துகந்தான், பெருமான், பெருங்காட்டின்
அரவம் அணிந்தானை, அணிஆப்பனூரானைப்
பரவு மனமுடையார் வினை பற்றறுப்பாரே
(4)
பிணியும் பிறப்பறுப்பான், பெருமான், பெருங்காட்டில்
துணியின் உடைதாழச் சுடரேந்தி ஆடுவான்
அணியும் புனலானை, அணிஆப்பனூரானைப்
பணியும் மனமுடையார் வினை பற்றறுப்பாரே
(5)
தகர மணிஅருவித் தடமால் வரைசிலையா
நகரமொரு மூன்று நலங்குன்ற வென்றுகந்தான்
அகர முதலானை அணிஆப்பனூரானைப்
பகரும் மனமுடையார் வினை பற்றறுப்பாரே
(6)
ஓடும் திரிபுரங்களுடனே உலந்தவியக்
காடது இடமாகக் கனல்கொண்டு நின்றிரவில்
ஆடும் தொழிலானை, அணிஆப்பனூரானைப்
பாடு மனமுடையார் வினை பற்றறுப்பாரே
(7)
இயலும் விடையேறி எரிகொள் மழுவீசிக்
கயலின்இணைக் கண்ணாள் ஒருபால் கலந்தாட
இயலும் இசையானை, எழில்ஆப்பனூரானைப்
பயிலு மனமுடையார் வினை பற்றறுப்பாரே
(8)
கருக்கு மணிமிடறன், கதநாகக் கச்சையினான்
உருக்கும் அடியவரை ஒளிவெண் பிறைசூடி
அரக்கன் திறலழித்தான் அணி ஆப்பனூரானைப்
பருக்கு மனமுடையார் வினை பற்றறுப்பாரே
(9)
கண்ணன், கடிக்கமல மலர்மேல் இனிதுறையும்
அண்ணற்களப்பரிதாய் நின்றங்கடியார் மேல்
எண்ணில் வினை களைவான், எழில்ஆப்பனூரானைப்
பண்ணின் இசைபகர்வார் வினை பற்றறுப்பாரே
(10)
செய்ய கலிங்கத்தார், சிறு தட்டுடையார்கள்
பொய்யர் புறங்கூறப் புரிந்த அடியாரை
ஐயம் அகற்றுவான் அணிஆப்பனூரானைப்
பைய நினைந்தெழுவார் வினை பற்றறுப்பாரே
(11)
அந்தண் புனல்வைகை அணிஆப்பனூர் மேய
சந்த மலர்க்கொன்றை சடைமேல் உடையானை
நந்தி அடிபரவு நலஞான சம்பந்தன்
சந்தம் இவை வல்லார் தடுமாற்றறுப்பாரே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page