(குறிப்பு: அப்பர் சுவாமிகளால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)
(ஞானசம்பந்தர் தேவாரம்):
(1)
தொண்டெலா மலர் தூவியேத்த, நஞ்சு
உண்டலார், உயிராய தன்மையர்
கண்டனார், கருவூருள் ஆனிலை
அண்டனார் அருளீயும் அன்பரே
(2)
நீதியார், நினைந்தாய நான்மறை
ஓதியாரொடும் கூடலார், குழைக்
காதினார், கருவூருள் ஆனிலை
ஆதியார் அடியார் தமது அன்பரே
(3)
விண்ணுலா மதி சூடி, வேதமே
பண்ணுளார், பரமாய பண்பினர்
கண்ணுளார், கருவூருள் ஆனிலை
அண்ணலார் அடியார்க்கு நல்லரே
(4)
முடியர் மும்மத யானை ஈருரி
பொடியர், பூங்கணை வேளைச் செற்றவர்
கடியுளார், கருவூருள் ஆனிலை
அடிகள் யாவையுமாய ஈசரே
(5)
பங்கய மலர்ப் பாதர், பாதியோர்
மங்கையர், மணி நீலகண்டர், வான்
கங்கையார், கருவூருள் ஆனிலை
அங்கையார் ஆடரவத்தெம் அண்ணலே
(6)
தேவர், திங்களும் பாம்பும் சென்னியின்
மேவர், மும்மதில் எய்த வில்லியர்
காவலர், கருவூருள் ஆனிலை
மூவராகிய மொய்ம்பர் அல்லரே
(7)
பண்ணினார், படியேற்றர், நீற்றர், மெய்ப்
பெண்ணினார், பிறை தாங்கு நெற்றியர்
கண்ணினார், கருவூருள் ஆனிலை
நண்ணினார் நமை ஆளும் நாதரே
(8)
கடுத்த வாளரக்கன் கயிலையை
எடுத்தவன் தலை தோளும் தாளினால்
அடர்த்தவன், கருவூருள் ஆனிலை
கொடுத்தவன் அருள் கூத்தன் அல்லனே
(9)
உழுது மாநிலத்தேனமாகி மால்
தொழுது மாமலரோனும் காண்கிலார்
கழுதினான், கருவூருள் ஆனிலை
முழுதுமாகிய மூர்த்தி பாதமே
(10)
புத்தர் புன் சமணாதர் பொய்யுரைப்
பித்தர் பேசிய பேச்சை விட்டு, மெய்ப்
பத்தர் சேர் கருவூருள் ஆனிலை
அத்தர் பாதம் அடைந்து வாழ்மினே
(11)
கந்தமார் பொழில் காழி ஞானசம்
பந்தன் சேர் கருவூருள் ஆனிலை
எந்தையைச் சொன்ன பத்தும் வல்லவர்
சிந்தையில் துயராய தீர்வரே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...