கொள்ளம்பூதூர்:

<– சோழ நாடு (காவிரி தென்கரை)

(குறிப்பு: திருஞானசம்பந்தரால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)

(சம்பந்தர் தேவாரம்):

(1)
கொட்டமே கமழும் கொள்ளம்பூதூர்
நட்டம் ஆடிய நம்பனை உள்கச்
செல்ல உந்துக சிந்தையார் தொழ
நல்குமாறருள் நம்பனே
(2)
கோட்டகக் கழனிக் கொள்ளம் பூதூர்
நாட்டகத்துறை நம்பனை உள்கச்
செல்ல உந்துக சிந்தையார் தொழ
நல்குமாறருள் நம்பனே
(3)
குலையினார் தெங்குசூழ் கொள்ளம்பூதூர்
விலையில் ஆட்கொண்ட விகிர்தனை உள்கச்
செல்ல உந்துக சிந்தையார் தொழ
நல்குமாறருள் நம்பனே
(4)
குவளை கண்மலரும் கொள்ளம்பூதூர்த்
தவள நீறணி தலைவனை உள்கச்
செல்ல உந்துக சிந்தையார் தொழ
நல்குமாறருள் நம்பனே
(5)
கொன்றை பொன் சொரியும் கொள்ளம்பூதூர்
நின்ற புன்சடை நிமலனை உள்கச்
செல்ல உந்துக சிந்தையார் தொழ
நல்குமாறருள் நம்பனே
(6)
ஓடம் வந்தணையும் கொள்ளம்பூதூர்
ஆடல் பேணிய அடிகளை உள்கச்
செல்ல உந்துக சிந்தையார் தொழ
நல்குமாறருள் நம்பனே
(7)
ஆறு வந்தணையும் கொள்ளம்பூதூர்
ஏறு தாங்கிய இறைவனை உள்கச்
செல்ல உந்துக சிந்தையார் தொழ
நல்குமாறருள் நம்பனே
(8)
குரக்கினம் பயிலும் கொள்ளம்பூதூர்
அரக்கனைச்செற்ற ஆதியை உள்கச்
செல்ல உந்துக சிந்தையார் தொழ
நல்குமாறருள் நம்பனே
(9)
பருவரால் உகளும் கொள்ளம்பூதூர்
இருவர் காண்பரியான் கழல்உள்கச்
செல்ல உந்துக சிந்தையார் தொழ
நல்குமாறருள் நம்பனே
(10)
நீரகக் கழனிக் கொள்ளம்பூதூர்த்
தேரமண் செற்ற செல்வனை உள்கச்
செல்ல உந்துக சிந்தையார் தொழ
நல்குமாறருள் நம்பனே
(11)
கொன்றை சேர் சடையான் கொள்ளம்பூதூர்
நன்று காழியுள் ஞானசம்பந்தன்
இன்று சொல்மாலை கொண்டேத்த வல்லார்போய்
என்றும் வானவரோடிருப்பாரே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page