திருவுசாத்தானம்:

<– சோழ நாடு (காவிரி தென்கரை)

(குறிப்பு: திருஞானசம்பந்தரால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)

(சம்பந்தர் தேவாரம்):

(1)
நீரிடைத் துயின்றவன் தம்பி, நீள் சாம்புவான்
போருடைச் சுக்கிரீவன் அநுமான் தொழக்
காருடை நஞ்சுண்டு காத்தருள் செய்தஎம்
சீருடைச் சேடர்வாழ் திருவுசாத்தானமே
(2)
கொல்லை ஏறுடையவன், கோவண ஆடையன்
பல்லையார் படுதலைப் பலிகொளும் பரமனார்
முல்லையார் புறவணி முதுபதி நறைகமழ்
தில்லையான் உறைவிடம் திருவுசாத்தானமே
(3)
தாம்அலார் போலவே தக்கனார் வேள்வியை
ஊமனார்தம் கனா ஆக்கினான், ஒருநொடிக்
காமனார் உடல்கெடக் காய்ந்த வெங்கண்ணுதல்
சேமமா உறைவிடம் திருவுசாத்தானமே
(4)
மறிதரு கரத்தினான், மால்விடை ஏறியான்
குறிதரு கோலநல் குணத்தினார் அடிதொழ
நெறிதரு வேதியர் நித்தலும் நியமஞ்செய்
செறிதரு பொழிலணி திருவுசாத்தானமே
(5)
(6)
(7)
பண்டிரைத்தயனும் மாலும் பல பத்தர்கள்
தொண்டிரைத்தும் மலர் தூவித் தோத்திரம் சொலக்
கொண்டிரைக் கொடியொடும் குருகினில் நல்லினம்
தெண்திரைக் கழனிசூழ் திருவுசாத்தானமே
(8)
மடவரல் பங்கினன் மலைதனை மதியாது
சடசட எடுத்தவன் தலைபத்து நெரிதர
அடர்தர ஊன்றியங்கே அவற்கருள் செய்தான்
திடமென உறைவிடம் திருவுசாத்தானமே
(9)
ஆணலார் பெண்ணலார், அயனொடு மாலுக்கும்
காணொணா வண்ணத்தான், கருதுவார் மனத்துளான்
பேணுவார் பிணியொடும் பிறப்பறுப்பான் இடம்
சேணுலா மாளிகைத் திருவுசாத்தானமே
(10)
கானமார் வாழ்க்கையான், காரமண் தேரர்சொல்
ஊனமாக் கொண்டு நீர் உரைமின், உய்யவெனில்
வானமார் மதிலணி மாளிகை வளர்பொழில்
தேனமா மதியம்தோய் திருவுசாத்தானமே
(11)
வரைதிரிந்து இழியுநீர் வளவயல் புகலிமன்
திரைதிரிந்தெறிகடல் திருவுசாத்தானரை
உரை தெரிந்துணரும் சம்பந்தன் ஒண்தமிழ் வல்லார்
நரைதிரை இன்றியே நன்னெறி சேர்வரே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page