(குறிப்பு: அப்பர் சுவாமிகளால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)
(அப்பர் தேவாரம்):
(1)
தோற்றும் கோயிலும் தோன்றிய கோயிலும்
வேற்றுக் கோயில் பலஉள, மீயச்சூர்க்
கூற்றம் பாய்ந்த குளிர்புன் சடைஅரற்கு
ஏற்றம் கோயில் கண்டீர் இளங்கோயிலே
(2)
வந்தனை அடைக்கும் அடித்தொண்டர்கள்
பந்தனை செய்து பாவிக்க நின்றவன்
சிந்தனை திருத்தும் திருமீயச்சூர்
எந்தமை உடையார் இளங்கோயிலே
(3)
பஞ்ச மந்திரம் ஓதும் பரமனார்
அஞ்ச ஆனையுரித்தனலாடுவார்
நெஞ்சம் வாழி நினைந்திரு மீயச்சூர்
எந்தமை உடையார் இளங்கோயிலே
(4)
நாறு மல்லிகை கூவிளம் செண்பகம்
வேறு வேறு விரித்த சடையிடை
ஆறுகொண்டுகந்தான் திருமீயச்சூர்
ஏறு கொண்டுகந்தார் இளங்கோயிலே
(5)
வெவ்வ வண்ணத்து நாகம் வெருவவே
கவ்வ வண்ணக் கனல் விரித்தாடுவர்
செவ்வ வண்ணம் திகழ்திரு மீயச்சூர்
எவ்வ வண்ணம் பிரான் இளங்கோயிலே
(6)
பொன்னங்கொன்றையும் பூவணி மாலையும்
பின்னும் செஞ்சடை மேற்பிறை சூடிற்று
மின்னு மேகலையாளொடு மீயச்சூர்
இன்ன நாள் அகலார் இளங்கோயிலே
(7)
படைகொள் பூதத்தன், பைங்கொன்றைத் தாரினன்
சடைகொள் வெள்ளத்தன், சாந்த வெண் நீற்றினன்
விடைகொள் ஊர்தியினான், திருமீயச்சூர்
இடைகொண்டேத்த நின்றார் இளங்கோயிலே
(8)
ஆறு கொண்ட சடையினர் தாமுமோர்
வேறு கொண்டதொர் வேடத்தராகிலும்
கூறு கொண்டு உகந்தாளொடு மீயச்சூர்
ஏறு கொண்டுகந்தார் இளங்கோயிலே
(9)
வேதத்தான் என்பர், வேள்வியுளான் என்பர்
பூதத்தான் என்பர், புண்ணியன் தன்னையே
கீதத்தான் கிளரும் திருமீயச்சூர்
ஏதம் தீர்க்க நின்றார் இளங்கோயிலே
(10)
கடுக் கண்டன், கயிலாய மலைதனை
எடுக்கலுற்ற இராவணன் ஈடற
விடுக்கணின்றி வெகுண்டவன், மீயச்சூர்
இடுக்கண் தீர்க்க நின்றார் இளங்கோயிலே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...