(குறிப்பு: அப்பர் சுவாமிகளால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)
(அப்பர் தேவாரம்):
(1)
பொருங்கை மதகரி உரிவைப் போர்வையானைப்
பூவணமும் வலஞ்சுழியும் பொருந்தினானைக்
கரும்புதரு கட்டியை, இன்னமிர்தைத் தேனைக்
காண்பரிய செழுஞ்சுடரைக், கனகக் குன்றை
இருங்கனக மதிர்ஆரூர் மூலட்டானத்து
எழுந்தருளி இருந்தானை, இமையோர் ஏத்தும்
அருந்தவனை, அரநெறியில் அப்பன் தன்னை
அடைந்தடியேன் அருவினைநோய் அறுத்தவாறே
(2)
கற்பகமும் இருசுடரும் ஆயினானைக்
காளத்தி கயிலாய மலையுளானை
விற்பயிலும் மதனழிய விழித்தான் தன்னை
விசயனுக்கு வேடுவனாய் நின்றான் தன்னைப்
பொற்பமரும் பொழிலாரூர் மூலட்டானம்
பொருந்தியஎம் பெருமானைப் பொருந்தார் சிந்தை
அற்புதனை அரநெறியில் அப்பன் தன்னை
அடைந்தடியேன் அருவினைநோய் அறுத்தவாறே
(3)
பாதியொரு பெண்முடிமேல் கங்கையானைப்
பாசூரும் பரங்குன்றும் மேயான் தன்னை
வேதியனைத் தன்னடியார்க்கெளியான் தன்னை
மெய்ஞ்ஞான விளக்கானை விரையே நாறும்
போதியலும் பொழிலாரூர் மூலட்டானம்
புற்றிடம் கொண்டிருந்தானைப் போற்றுவார்கள்
ஆதியனை, அரநெறியில் அப்பன் தன்னை
அடைந்தடியேன் அருவினைநோய் அறுத்தவாறே
(4)
நந்திபணி கொண்டருளும் நம்பன் தன்னை
நாகேச்சரம் இடமா நண்ணினானைச்
சந்திமலர் இட்டணிந்து வானோர் ஏத்தும்
தத்துவனைச், சக்கரம் மாற்கு ஈந்தான் தன்னை
இந்துநுழை பொழிலாரூர் மூலட்டானம்
இடங்கொண்ட பெருமானை, இமையோர் போற்றும்
அந்தணனை, அரநெறியில் அப்பன் தன்னை
அடைந்தடியேன் அருவினைநோய் அறுத்தவாறே
(5)
சுடர்ப்பவளத் திருமேனி வெண்ணீற்றானைச்
சோதிலிங்கத் தூங்கானை மாடத்தானை
விடக்கிடு காடிடமாக உடையான் தன்னை
மிக்கரணம் எரியூட்ட வல்லான் தன்னை
மடற்குலவு பொழிலாரூர் மூலட்டானம்
மன்னியஎம் பெருமானை, மதியார் வேள்வி
அடர்த்தவனை, அரநெறியில் அப்பன் தன்னை
அடைந்தடியேன் அருவினைநோய் அறுத்தவாறே
(6)
தாயவனை எவ்வுயிர்க்கும் தன்னொப்பில்லாத்
தகுதில்லை நடம்பயிலும் தலைவன் தன்னை
மாயவனும் மலரவனும் வானோர் ஏத்த
மறிகடல் நஞ்சுண்டுகந்த மைந்தன் தன்னை
மேயவனைப் பொழிலாரூர் மூலட் டானம்
விரும்பியஎம் பெருமானை எல்லாம் முன்னே
ஆயவனை அரநெறியில் அப்பன் தன்னை
அடைந்தடியேன் அருவினைநோய் அறுத்தவாறே
(7)
பொருளியல்நல் சொற்பதங்கள் ஆயினானைப்
புகலூரும் புறம்பயமும் மேயான் தன்னை
மருளியலும் சிந்தையர்க்கு மருந்து தன்னை
மறைக்காடும் சாய்க்காடும் மன்னினானை
இருளியல்நல் பொழிலாரூர் மூலட்டானத்து
இனிதமரும் பெருமானை இமையோர் ஏத்த
அருளியனை அரநெறியில் அப்பன் தன்னை
அடைந்தடியேன் அருவினைநோய் அறுத்தவாறே
(8)
காலனைக் காலால் காய்ந்த கடவுள் தன்னைக்
காரோணம் கழிப்பாலை மேயான் தன்னைப்
பாலனுக்குப் பாற்கடல் அன்றீந்தான் தன்னைப்
பணியுகந்த அடியார்கட்கினியான் தன்னைச்
சேலுகளும் வயலாரூர் மூலட்டானம்
சேர்ந்திருந்த பெருமானைப், பவளம் ஈன்ற
ஆலவனை, அரநெறியில் அப்பன் தன்னை
அடைந்தடியேன் அருவினைநோய் அறுத்தவாறே
(9)
ஒப்பொருவர் இல்லாத ஒருவன் தன்னை
ஓத்தூரும் உறையூரும் மேவினானை
வைப்பவனை மாணிக்கச் சோதியானை
மாருதமும் தீவெளிநீர் மண்ணானானைப்
…
(10)
பகலவன்தன் பல்லுகுத்த படிறன் தன்னைப்
பராய்த்துறை பைஞ்ஞீலியிடம் பாவித்தானை
இகலவனை இராவணனை இடர்செய் தானை
ஏத்தாதார் மனத்தகத்துள் இருள்ஆனானைப்
புகழ்நிலவு பொழிலாரூர் மூலட்டானம்
பொருந்தியஎம் பெருமானைப், போற்றார் சிந்தை
அகலவனை, அரநெறியில் அப்பன் தன்னை
அடைந்தடியேன் அருவினைநோய் அறுத்தவாறே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...