(1)
கரவின்றி நன்மாமலர் கொண்டு
இரவும் பகலுந் தொழுவார்கள்
சிரமொன்றிய செஞ்சடையான் வாழ்
வரமா மயிலாடுதுறையே
(2)
உர வெங்கரியின் உரிபோர்த்த
பரமன் உறையும் பதியென்பர்
குரவஞ் சுர புன்னையும் வன்னி
மருவும் மயிலாடுதுறையே
(3)
ஊனத்திருள் நீங்கிட வேண்டில்
ஞானப் பொருள் கொண்டு அடிபேணும்
தேனொத்த இனியான் அமருஞ்சேர்
வானம் மயிலாடுதுறையே
(4)
அஞ்சொண் புலனும் அவைசெற்ற
மஞ்சன் மயிலாடுதுறையை
நெஞ்சொன்றி நினைந்தெழுவார் மேல்
துஞ்சும் பிணியாயின தானே
(5)
தணியார் மதி செஞ்சடையான் தன்
அணியார்ந்தவருக்கருளென்றும்
பிணியாயின தீர்த்தருள் செய்யும்
மணியான் மயிலாடுதுறையே
(6)
தொண்டர் இசைபாடியும் கூடிக்
கண்டு துதிசெய்பவன் ஊராம்
பண்டும் பல வேதியர் ஓத
வண்டார் மயிலாடுதுறையே
(7)
அணங்கோடு ஒருபாகம் அமர்ந்து
இணங்கி அருள் செய்தவன் ஊராம்
நுணங்கும் புரிநூலர்கள் கூடி
வணங்கும் மயிலாடுதுறையே
(8)
சிரங்கையினில் ஏந்தியிரந்த
பரங்கொள் பரமேட்டி, வரையால்
அரங்க அரக்கன் வலிசெற்ற
வரங்கொள் மயிலாடுதுறையே
(9)
ஞாலத்தை நுகர்ந்தவன் தானும்
கோலத்தயனும் அறியாத
சீலத்தவன் ஊர், சிலர்கூடி
மாலைத் தீர் மயிலாடுதுறையே
(10)
நின்றுண் சமணும் நெடுந்தேரர்
ஒன்றும் அறியாமை உயர்ந்த
வென்றி அருளானவன் ஊராம்
மன்றன் மயிலாடுதுறையே
(11)
நயர் காழியுண் ஞானசம்பந்தன்
மயல்தீர் மயிலாடுதுறை மேல்
செயலால் உரைசெய்தன பத்தும்
உயர்வாம் இவை உற்றுணர்வார்க்கே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...
