(குறிப்பு: திருஞானசம்பந்தரால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)
(சம்பந்தர் தேவாரம்):
(1)
கோங்கமே குரவமே கொழுமலர்ப் புன்னையே கொகுடிமுல்லை
வேங்கையே ஞாழலே விம்மு பாதிரிகளே விரவியெங்கும்
ஓங்குமா காவிரி வடகரையடை குரங்காடுதுறை
வீங்குநீர்ச் சடைமுடி அடிகளார் இடமென விரும்பினாரே
(2)
மந்தமாய் இழிமதக் களிற்றிள மருப்பொடு பொருப்பின், நல்ல
சந்தமார் அகிலொடு சாதியின் பலங்களும் தகையமோதி
உந்துமா காவிரி வடகரையடை குரங்காடுதுறை
எந்தையார் இணையடி இமையவர் தொழுதெழும் இயல்பினாரே
(3)
முத்துமா மணியொடு முழைவளர் ஆரமும் உகந்து நுந்தி
எத்துமா காவிரி வடகரையடை குரங்காடுதுறை
மத்தமா மலரொடு மதிபொதி சடைமுடி அடிகள் தம்மேல்
சித்தமாம் அடியவர் சிவகதி பெறுவது திண்ணமன்றே
(4)
கறியுமா மிளகொடு கதலியின் பலங்களும் கலந்து நுந்தி
எறியுமா காவிரி வடகரையடை குரங்காடுதுறை
மறியுலாம் கையினர்; மலரடி தொழுதெழ மருவும்உள்ளக்
குறியினார் அவர்மிகக் கூடுவார் நீடுவான் உலகினூடே
(5)
கோடிடைச் சொரிந்த தேன்அதனொடும் கொண்டல்வாய் விண்ட முன்நீர்
காடுடைப் பீலியும் கடறுடைப் பண்டமும் கலந்து நுந்தி
ஓடுடைக் காவிரி வடகரையடை குரங்காடுதுறை
பீடுடைச் சடைமுடி அடிகளார் இடமெனப் பேணினாரே
(6)
கோலமா மலரொடு தூபமும் சாந்தமும் கொண்டு போற்றி
வாலியார் வழிபடப் பொருந்தினார், திருந்து மாங்கனிகள் உந்தி
ஆலுமா காவிரி வடகரையடை குரங்காடுதுறை
நீலமா மணிமிடற்றடிகளை நினைய வல்வினைகள் வீடே
(7)
….
(8)
நீலமா மணிநிறத்தரக்கனை இருபது கரத்தொடு ஒல்க
வாலினால் கட்டிய வாலியார் வழிபட மன்னுகோயில்
ஏலமோடு இலை இலவங்கமே இஞ்சியே மஞ்சள்உந்தி
ஆலியா வருபுனல் வடகரையடை குரங்காடுதுறையே
(9)
பொருந்திறல் பெருங்கைமா உரித்து, உமைஅஞ்சவே ஒருங்குநோக்கிப்
பெருந்திறத்தநங்கனை அநங்கமா விழித்ததும் பெருமைபோலும்
வருந்திறல் காவிரி வடகரையடை குரங்காடுதுறை
அருந்திறத்திருவரை அல்லல் கண்டோங்கிய அடிகளாரே
(10)
கட்டமண் தேரரும், கடுக்கடின் கழுக்களும், கசிவொன்றில்லாப்
பிட்டர்தம் அறவுரை கொள்ளலும், பெருவரைப் பண்டமுந்தி
எட்டுமா காவிரி வடகரையடை குரங்காடுதுறைச்
சிட்டனார் அடிதொழச் சிவகதி பெறுவது திண்ணமாமே
(11)
தாழிளம் காவிரி வடகரையடை குரங்காடுதுறைப்
போழிள மதிபொதி புரிதரு சடைமுடிப் புண்ணியனைக்
காழியான் அருமறை ஞானசம்பந்தன கருதுபாடல்
கோழையா அழைப்பினும் கூடுவார் நீடுவான் உலகினூடே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...