(1)
ஞானவாள் ஏந்தும்ஐயர் நாதப் பறையறைமின்
மானமா ஏறும்ஐயர் மதி வெண்குடை கவிமின்
ஆனநீற்றுக் கவசம் அடையப் புகுமின்கள்
வானஊர் கொள்வோம் நாம் மாயப் படை வாராமே
ஞானவாள் ஏந்தும்ஐயர் நாதப் பறையறைமின்
மானமா ஏறும்ஐயர் மதி வெண்குடை கவிமின்
ஆனநீற்றுக் கவசம் அடையப் புகுமின்கள்
வானஊர் கொள்வோம் நாம் மாயப் படை வாராமே
(2)
தொண்டர்காள் தூசிசெல்லீர், பத்தர்காள் சூழப்போகீர்
ஒண்திறல் யோகிகளே பேரணி உந்தீர்கள்
திண்திறல் சித்தர்களே கடைக்கூழை செல்மின்கள்
அண்டர் நாடாள்வோம் நாம் அல்லற்படை வாராமே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...
