பிணக்கிலாத பெருந்துறைப் பெருமான் உன் நாமங்கள் பேசுவார்க்(கு)
இணக்கிலாததோர் இன்பமே வருந், துன்பமே துடைத்தெம்பிரான்
உணக்கிலாததோர் வித்து மேல்விளையாமல் – என்வினை ஒத்தபின்
கணக்கிலாத் திருக்கோலம் நீவந்து காட்டினாய் கழுக்குன்றிலே
(2)
பிட்டு நேர்பட மண் சுமந்த
பெருந்துறைப் பெரும் பித்தனே
சட்ட நேர்பட வந்திலாத
சழக்கனேன் – உனைச் சார்ந்திலேன்
சிட்டனே, சிவலோகனே, சிறு
நாயினுங் கடையாய வெங்
கட்டனேனையும் ஆட்கொள்வான் வந்து
காட்டினாய் கழுக்குன்றிலே
(3)
மலங்கினேன் கண்ணின் நீரை மாற்றி
மலங்கெடுத்த பெருந்துறை
விலங்கினேன் – வினைக் கேடனேன் – இனி
மேல் விளைவதறிந்திலேன்
இலங்குகின்ற நின் சேவடிகள்
இரண்டும் வைப்பிடம் இன்றியே
கலங்கினேன், கலங்காமலே வந்து
காட்டினாய் கழுக்குன்றிலே
(4)
பூணொணாததொர் அன்பு பூண்டு
பொருந்தி நாள்தொறும் போற்றவும்
நாணொணாததொர் நாணம் எய்தி
நடுக்கடலுள் அழுந்தி நான்
பேணொணாத பெருந்துறைப் பெருந்
தோணி பற்றி உகைத்தலுங்
காணொணாத் திருக்கோலம் நீவந்து
காட்டினாய்க் கழுக்குன்றிலே
(5)
கோலமேனி வராகமே, குணமாம் பெருந்துறைக் கொண்டலே
சீலமேதும் அறிந்திலாத என் சிந்தை வைத்த சிகாமணி
ஞாலமே கரியாக நான்உனை நச்சி, நச்சிட வந்திடும்
காலமே – உனை ஓத – நீ வந்து காட்டினாய் கழுக்குன்றிலே
(6)
பேதம் இல்லதொர் கற்பளித்த
பெருந்துறைப் பெருவெள்ளமே
ஏதமே பலபேச நீஎனை
ஏதிலார் முனம் என்செய்தாய்?
சாதல் சாதல் பொல்லாமையற்ற
தனிச்சரண் சரணாம்எனக்
காதலால் உனைஓத – நீவந்து
காட்டினாய் கழுக்குன்றிலே
(7)
இயக்கிமார் அறுபத்து நால்வரை
எண்குணம் செய்த ஈசனே
மயக்கமாயதோர் மும்மலப் !பழ
வல்வினைக்குள் அழுந்தவும்
துயக்கறுத்தெனை ஆண்டு கொண்டுநின்
தூய்மலர்க்கழல் தந்தெனைக்
கயக்க வைத்தடியார் முனேவந்து
காட்டினாய் கழுக்குன்றிலே
