(1)
பூங்கமலத்தயனொடு மால் அறியாத நெறியானே
கோங்கலர் சேர் குவிமுலையாள் கூறா – வெண்ணீறாடீ
ஓங்கெயில்சூழ் திருவாரூர் உடையானே, அடியேன்நின்
பூங்கழல்கள் அவையல்லாதெவையாதும் புகழேனே
பூங்கமலத்தயனொடு மால் அறியாத நெறியானே
கோங்கலர் சேர் குவிமுலையாள் கூறா – வெண்ணீறாடீ
ஓங்கெயில்சூழ் திருவாரூர் உடையானே, அடியேன்நின்
பூங்கழல்கள் அவையல்லாதெவையாதும் புகழேனே
(2)
சடையானே, தழலாடீ, தயங்கு மூவிலைச்சூலப்
படையானே, பரஞ்சோதீ, பசுபதீ, மழவெள்ளை
விடையானே, விரிபொழில்சூழ் பெருந்துறையாய் – அடியேன்நான்
உடையானே, உனையல்லாதுறுதுணை மற்றறியேனே
(3)
உற்றாரை யான்வேண்டேன், ஊர்வேண்டேன், பேர்வேண்டேன்
கற்றாரை யான்வேண்டேன், கற்பனவும் இனியமையும்
குற்றாலத்தமர்ந்துறையுங் கூத்தா உன்குரைகழற்கே
கற்றாவின் மனம்போலக் கசிந்துருக வேண்டுவனே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...
