59. திருநல்லூர்ப்பெருமணம் – சம்பந்தர் தேவாரம் (1):

<– திருநல்லூர்ப்பெருமணம்

(1)
கல்லூர்ப் பெருமணம் வேண்டா கழுமலம்
பல்லூர்ப் பெருமணம் பாட்டு மெய்யாய்த்தில
சொல்லூர்ப் பெருமணம் சூடலரே தொண்டர்
நல்லூர்ப் பெருமணம் மேய நம்பானே
(2)
தருமணல் ஓதம்சேர் தண்கடல் நித்திலம்
பருமணலாக் கொண்டு பாவை நல்லார்கள்
வருமணம் கூட்டி மணம்செயும் நல்லூர்ப்
பெருமணத்தான் பெண்ணோர் பாகம் கொண்டானே
(3)
அன்புறு சிந்தையராகி அடியவர்
நன்புறு நல்லூர்ப் பெருமண மேவிநின்று
இன்புறும் எந்தை இணையடி ஏத்துவார்
துன்புறுவார் அல்லர் தொண்டு செய்வாரே
(4)
வல்லியம் தோலுடை ஆர்ப்பது, போர்ப்பது
கொல்லியல் வேழத்துரி, விரி கோவணம்
நல்லியலார் தொழு நல்லூர்ப் பெருமணம்
புல்கிய வாழ்க்கை எம் புண்ணியனார்க்கே
(5)
ஏறுகந்தீர், இடுகாட்டு எரியாடி, வெண்
நீறுகந்தீர், நிரையார் விரி தேன்கொன்றை
நாறுகந்தீர், திருநல்லூர்ப் பெருமணம்
வேறுகந்தீர் உமை கூறுகந்தீரே
(6)
சிட்டப் பட்டார்க்கெளியான், செங்கண் வேட்டுவப்
பட்டம் கட்டும் சென்னியான், பதியாவது
நட்டக் கொட்டாட்டறா நல்லூர்ப் பெருமணத்து
இட்டப்பட்டால் ஒத்திரால் எம்பிரானிரே
(7)
மேகத்த கண்டன், எண் தோளன், வெண்ணீற்றுமை
பாகத்தன், பாய்புலித் தோலொடு பந்தித்த
நாகத்தன்;, நல்லூர்ப் பெருமணத்தான், நல்ல
போகத்தன், யோகத்தையே புரிந்தானே
(8)
தக்கிருந்தீர் அன்று தாளால் அரக்கனை
உக்கிருந்தொல்க உயர்வரைக் கீழிட்டு
நக்கிருந்தீர் இன்று நல்லூர்ப் பெருமணம்
புக்கிருந்தீர் எமைப் போக்கருளீரே
(9)
ஏலும் தண் தாமரையானும்  இயல்புடை
மாலும் தம் மாண்பறிகின்றிலர், மாமறை
நாலும் தம் பாட்டென்பர், நல்லூர்ப் பெருமணம்
போலும் தங்கோயில் புரிசடையார்க்கே
(10)
ஆதர் அமணொடு சாக்கியர் தாம்சொல்லும்
பேதைமை கேட்டுப் பிணக்குறுவீர் வம்மின்
நாதனை, நல்லூர்ப் பெருமணம் மேவிய
வேதன தாள்தொழ வீடெளிதாமே
(11)
நறும்பொழில் காழியுண் ஞானசம்பந்தன்
பெறும்பத நல்லூர்ப் பெருமணத்தானை
உறும் பொருளால் சொன்ன ஒண்தமிழ் வல்லார்க்கு
அறும்பழி பாவம், அவலம் இலரே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page