018 பூந்துருத்தி நம்பி காடநம்பி – திருவாரூர்

<– 9ஆம் திருமுறை

(1)
கைக்கு வால்முத்தின் சரிவளை பெய்து
கழுத்தில்ஓர் தனிவடங் கட்டி
முக்கண் நாயகராய்ப் பவனி போந்திங்ஙன்
முரிவதோர் முரி(வு) உமை அளவும்
தக்கசீர்க் கங்கையளவும் அன்(று), என்னோ
தம் ஒருப்பா(டு), உலகதன் மேல்
மிக்கசீர் ஆரூர் ஆதியாய் – வீதி
விடங்கராய் நடங் குலாவினரே

(2)
பத்தியாய் உணர்வோர் அருளை வாய்மடுத்துப்
பருகுதோறமுதம் ஒத்(து)அவர்க்கே
தித்தியா இருக்குந் – தேவர்காள் – இவர்தம்
திருவுரு இருந்தவா பாரீர்
சத்தியாய்ச் சிவமாய், உலகெலாம் படைத்த
தனிமுழு முதலுமாய், அதற்கோர்
வித்துமாய், ஆரூர் ஆதியாய், வீதி
விடங்கராய் நடங் குலாவினரே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page