014 கருவூர்த் தேவர் – திருப்பூவணம்

<– 9ஆம் திருமுறை

(1)
திருவருள் புரிந்(து)ஆள் ஆண்டு கொண்டிங்ஙன்
சிறியனுக்கினியது காட்டிப்
பெரிதருள் புரிந்(து) ஆனந்தமே தரும்நின்
பெருமையிற் பெரியதொன்றுளதே
மருதர(சு)இருங் கோங்ககில் மரஞ் சாடி
வரைவளங் கவர்ந்திழி வையைப்
பொருதிரை மருங்கோங்(கு) ஆவண வீதிப்
பூவணங் கோயில் கொண்டாயே

(2)
பாம்பணைத் துயின்றோன் அயன்முதல் தேவர்
பன்னெடுங் காலம்நிற் காண்பான்
ஏம்பலித்திருக்க என்னுளம் புகுந்த
எளிமையை என்றும்நான் மறக்கேன்
தேம்புனற் பொய்கை வாளைவாய் மடுப்பத்
தெளிதரு தேறல் பாய்ந்தொழுகும்
பூம்பணைச் சோலை ஆவண வீதிப்
பூவணங் கோயில் கொண்டாயே

(3)
கரைகடல் ஒலியின் தமருகத்தரையிற்
கையினிற் கட்டிய கயிற்றால்
இருதலை ஒருநா இயங்க வந்தொருநாள்
இருந்திடாய் எங்கள்கண் முகப்பே
விரிதிகழ் விழவின் பின்செல்வோர் பாடல்
வேட்கையின் வீழ்ந்த போதவிழ்ந்த
புரிசடை துகுக்கும் ஆவண வீதிப்
பூவணங் கோயில் கொண்டாயே

(4)
கண்ணியல் மணியின் சூழல் புக்கங்கே
கலந்து புக்கொடுங்கினேற்(கு)அங்ஙன்
நுண்ணியை எனினும் நம்ப நின் பெருமை
நுண்ணிமை இறந்தமை அறிவன்
மண்ணியல் மரபின் தங்கிருள் மொழுப்பின்
வண்டினம் பாட நின்றாடும்
புண்ணிய மகளிர் ஆவண வீதிப்
பூவணங் கோயில் கொண்டாயே

(5)
கடுவினைப் பாசக்கடல் கடந்தைவர்
கள்ளரை மெள்ளவே துரந்துன்
அடியிணை இரண்டும் அடையுமாறடைந்தேன்
அருள்செய்வாய் – அருள் செயாதொழிவாய்
நெடுநிலை மாடத்திரவிருள் கிழிக்க
நிலை விளக்கலகில் சாலேகப்
புடை கிடந்திலங்கும் ஆவண வீதிப்
பூவணங் கோயில் கொண்டாயே

(6)
செம்மனக் கிழவோர் அன்பு தா என்றுன்
சேவடி பார்த்திருந்தலச
எம்மனங் குடிகொண்டிருப்பதற்(கு) யான்ஆர்?
என்னுடை அடிமைதான் யாதே?
அம்மனங்குளிர் நாட்பலிக்கெழுந்தருள
அரிவையர் அவிழ்குழற் சுரும்பு
பொம்மென முரலும் ஆவண வீதிப்
பூவணங் கோயில் கொண்டாயே

(7)
சொன்னவில்முறை நான் காரணம் உணராச்
சூழல் புக்கொளித்த நீயின்று
கன்னவில் மனத்தென் கண்வலைப்படும் இக்
கருணையிற் பெரியதொன்றுளதே
மின்னவில் கனக மாளிகை வாய்தல்
விளங்கிளம் பிறைதவழ் மாடம்
பொன்னவில் புரிசை ஆவண வீதிப்
பூவணங் கோயில் கொண்டாயே

(8)…

(9)…

(10)
பூவணங் கோயில் கொண்டெனை ஆண்ட
புனிதனை, வனிதை பாகனை, வெண்
கோவணங் கொண்டு வெண்தலை ஏந்தும்
குழகனை, அழகெலாம் நிறைந்த
தீவணன் தன்னைச், செழுமறை தெரியுந்
திகழ் கருவூரனேன் உரைத்த
பாவணத் தமிழ்கள் பத்தும் வல்லார்கள்
பரமனதுருவமாகுவரே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page