ஸ்ரீவாஞ்சியம் – அப்பர் தேவாரம்:

<– ஸ்ரீவாஞ்சியம்

(1)
படையும் பூதமும் பாம்பும் புல்வாய்அதள்
உடையும் தாங்கிய உத்தமனார்க்கிடம்
புடை நிலாவிய பூம்பொழில் வாஞ்சியம்
அடைய வல்லவர்க்கல்லல் ஒன்றில்லையே
(2)
பறப்பையும் பசுவும் படுத்துப்பல
திறத்தவும் உடையோர் திகழும் பதி
கறைப் பிறைச்சடைக் கண்ணுதல் சேர்தரு
சிறப்புடைத் திருவாஞ்சியம் சேர்மினே
(3)
புற்றில் ஆடரவோடு புனல்மதி
தெற்று செஞ்சடைத் தேவர்பிரான் பதி
சுற்று மாடங்கள் சூழ்திரு வாஞ்சியம்
பற்றிப் பாடுவார்க்குப் பாவமில்லையே
(4)
அங்கம் ஆறும் அருமறை நான்குடன்
தங்கு வேள்வியர் தாம்பயிலும் நகர்
செங்கண் மால் இடமார் திருவாஞ்சியம்
தங்குவார் நம் அமரர்க்கமரரே
(5)
நீறுபூசி நிமிர்சடை மேல் பிறை
ஆறு சூடும் அடிகள் உறைபதி
மாறுதான் ஒருங்கும் வயல் வாஞ்சியம்
தேறி வாழ்பவர்க்குச் செல்வமாகுமே
(6)
அற்றுப் பற்றின்றி யாரையும் இல்லவர்க்கு
உற்ற நற்றுணையாவான் உறைபதி
தெற்று மாடங்கள் சூழ் திருவாஞ்சியம்
கற்றுச் சேர்பவர்க்குக் கருத்தாவதே
(7)
(8)
(9)
(10)
அருக்கன் அங்கி யமனொடு தேவர்கள்
திருத்தும் சேவடியான் திகழும் நகர்
ஒருத்தி பாகம் உகந்தவன் வாஞ்சியம்
அருத்தியால் அடைவார்க்கில்லை அல்லலே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page