வன்னியூர்:

<– சோழ நாடு (காவிரி தென்கரை)

(குறிப்பு: அப்பர் சுவாமிகளால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)

(அப்பர் தேவாரம்):

(1)
காடு கொண்டு ஆடரங்கா, கங்குல்வாய்க் கணம்
பாட, மாநடமாடும் பரமனார்
வாட மான் நிறம்கொள்வர், மணங்கமழ்
மாட மாமதில் சூழ் வன்னியூரரே
(2)
செங்கண் நாகம் அரையது தீத்திரள்
அங்கை ஏந்தி நின்றார், எரியாடுவர்
கங்கைவார் சடைமேல் இடம் கொண்டவர்
மங்கை பாகம் வைத்தார் வன்னியூரரே
(3)
ஞானம் காட்டுவர், நன்னெறி காட்டுவர்
தானம் காட்டுவர், தம்அடைந்தார்க்கெலாம்
தானம் காட்டித்தன் தாள் அடைந்தார்கட்கு
வானம் காட்டுவர் போல் வன்னியூரரே
(4)
இம்மை அம்மையென இரண்டும் இவை
மெய்ம்மை தான் அறியாது விளம்புவர்
மெய்ம்மையால் நினைவார்கள் தம் வல்வினை
வம்மின் தீர்ப்பர் கண்டீர் வன்னியூரரே
(5)
பிறைகொள் வாள்நுதல் பெய்வளைத் தோளியர்
நிறையைக் கொள்பவர், நீறணி மேனியர்
கறைகொள் கண்டத்தர், வெண்மழு வாளினர்
மறைகொள் வாய்மொழியார் வன்னியூரரே
(6)
திளைக்கும் வண்டொடு தேன்படு கொன்றையர்
துளைக்கை வேழத்தர் தோலர், சுடர்மதி
முளைக்கு மூரல் கதிர்கண்டு நாகம்நா
வளைக்கும் வார்சடையார் வன்னியூரரே
(7)
குணங்கொள் தோளெட்டு மூர்த்தி இணையடி
இணங்குவார்கட்கு இனியனுமாய் நின்றான்
வணங்கி மாமலர் கொண்டவர் வைகலும்
வணங்குவார் மனத்தார் வன்னியூரரே
(8)
இயலு மாலொடு நான்முகன் செய்தவம்
முயலில் காண்பரிதாய் நின்ற மூர்த்திதான்
அயலெலாம் அன்ன மேயும்அந் தாமரை
வயலெலாம் கயல்பாய் வன்னியூரரே
(9)
(10)
நலங்கொள் பாகனை நன்று முனிந்திடா
விலங்கல் கோத்தெடுத்தான், அது மிக்கிட
இலங்கை மன்னன் இருபது தோளினை
மலங்க ஊன்றி வைத்தார் வன்னியூரரே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page