(1)
ஏன எயிறு ஆடரவொடு, என்பு வரிஆமை இவை பூண்டு இளைஞராய்க்
கானவரி நீடுழுவை அதளுடைய படர்சடையர் காணிஎனலாம்
ஆனபுகழ் வேதியர்கள் ஆகுதியின் மீதுபுகை போகிஅழகார்
வானமுறு சோலைமிசை மாசுபட மூசு மயிலாடுதுறையே
(2)
அந்தண்மதி செஞ்சடையர் அங்கண்எழில் கொன்றையொடணிந்த அழகராம்
எந்தம் அடிகட்கினிய தானமது வேண்டில், எழிலார் பதியதாம்
கந்தமலி சந்தினொடு காரகிலும் வாரிவரு காவிரியுளால்
வந்ததிரை உந்திஎதிர் மந்திமலர் சிந்து மயிலாடுதுறையே
(3)
தோளின்மிசை வரிஅரவ நஞ்சழல வீக்கிமிகு நோக்கரியராய்
மூளைபடு வெண்தலையில் உண்டுமுது காடுறையும் முதல்வர் இடமாம்
பாளைபடு பைங்கமுகு செங்கனி உதிர்த்திட நிரந்து கமழ்பூ
வாளை குதிகொள்ள மடல்விரிய மணநாறு மயிலாடுதுறையே
(4)
ஏதமிலர் அரியமறை மலையர் மகளாகிய இலங்கு நுதலொண்
பேதை தடமார்பதிடமாக உறைகின்ற பெருமானது இடமாம்
காதல்மிகு கவ்வையொடு மவ்வலவை கூடிவரு காவிரியுளால்
மாதர்மறி திரைகள்புக வெறியவெறி கமழு மயிலாடுதுறையே
(5)
பூவிரி கதுப்பின் மடமங்கையர் அகந்தொறும் நடந்துபலிதேர்
பாவிரி இசைக்குரிய பாடல்பயிலும் பரமர் பழமைஎனலாம்
காவிரி நுரைத்திரு கரைக்கும் மணிசிந்த வரிவண்டு கவர
மாவிரி மதுக்கிழிய மந்தி குதிகொள்ளும் மயிலாடுதுறையே
(6)
கடந்திகழ் கருங்களிறு உரித்துமையும் அஞ்சமிக நோக்கரியராய்
விடந்திகழு மூவிலைநல் வேலுடைய வேதியர் விரும்பும்இடமாம்
தொடர்ந்தொளிர் கிடந்ததொரு சோதிமிகு தொண்டையெழில் கொண்ட துவர்வாய்
மடந்தையர் குடைந்தபுனல் வாசமிக நாறு மயிலாடுதுறையே
(7)
அவ்வதிசையாரும் அடியாரும் உளராக அருள் செய்தவர்கள் மேல்
எவ்வமற வைகலும் இரங்கி எரியாடும் எமதீசன் இடமாம்
கவ்வையொடு காவிரி கலந்துவரு தென்கரை நிரந்துகமழ்பூ
மவ்வலொடு மாதவி மயங்கி மணநாறு மயிலாடுதுறையே
(8)
இலங்கைநகர் மன்னன் முடியொரு பதினொடிருபது தொள்நெரிய விரலால்
விலங்கலில் அடர்த்தருள் புரிந்தவர் இருந்தஇடம் வினவுதிர்களேல்
கலங்கனுரை உந்தியெதிர் வந்தகய மூழ்கிமலர் கொண்டுமகிழா
மலங்கிவரு காவிரி நிரந்து பொழிகின்ற மயிலாடுதுறையே
(9)
ஒண்திறலி நான்முகனும் மாலும் மிகநேடி உணராத வகையால்
அண்டமுற அங்கியுருவாகி மிகநீண்ட அரனாரது இடமாம்
கெண்டையிரை கொண்டு கெளிறார் உடனிருந்துகிளர் வாயறுதல்சேர்
வண்டல்மணல் கெண்டிமட நாரை விளையாடு மயிலாடுதுறையே
(10)
மிண்டுதிறல் அமணரொடு சாக்கியரும் அலர்தூற்ற மிக்க திறலோன்
இண்டைகுடி கொண்டசடை எங்கள் பெருமானது இடமென்பர், எழிலார்
தெண்திரை பரந்தொழுகு காவிரிய தென்கரை நிரந்துகமழ்பூ
வண்டவை திளைக்க மது வந்தொழுகு சோலை மயிலாடுதுறையே
(11)
நிணந்தரு மயானநில வான மதியாததொரு சூலமொடுபேய்க்
கணந்தொழு கபாலி கழலேத்தி மிக வாய்த்ததொரு காதன்மையினால்
மணந்தண்மலி காழிமறை ஞானசம்பந்தன் மயிலாடுதுறையைப்
புணர்ந்ததமிழ் பத்தும் இசையாலுரை செய்வார் பெறுவர் பொன்னுலகமே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...