நாகைக்காரோணம் – சம்பந்தர் தேவாரம் (2):

<– நாகைக்காரோணம்

(1)
கூனல்திங்கள் குறுங்கண்ணி கான்ற, நெடு வெண்ணிலா
ஏனல் பூத்தம் மராங்கோதையோடும் விராவும் சடை
வானநாடன் அமரர் பெருமாற்கிடமாவது
கானல்வேலி கழிசூழ் கடல்நாகைக் காரோணமே
(2)
விலங்கலொன்று சிலையா மதில் மூன்றுடன் வீட்டினான்
இலங்கு கண்டத்து எழிலாமை பூண்டாற்கிடமாவது
மலங்கிஓங்கிவ் வருவெண்திரை மல்கிய மால்கடல்
கலங்கல்ஓதம் கழிசூழ் கடல்நாகைக் காரோணமே
(3)
வெறிகொளாரும் கடற் கைதை, நெய்தல் விரி பூம்பொழில்
முறிகொள் ஞாழல், முடப்புன்னை, முல்லை முகை வெண்மலர்
நறைகொள் கொன்றை நயந்தோங்கு நாதற்கிடமாவது
கறைகொள்ஓதம் கழிசூழ் கடல்நாகைக் காரோணமே
(4)
வண்டுபாட வளர்கொன்றை மாலை மதியோடுடன்
கொண்டகோலம் குளிர்கங்கை தங்கும் குருள் குஞ்சியுள்
உண்டுபோலும் என வைத்துகந்த ஒருவற்கிடம்
கண்டல்வேலி கழிசூழ் கடல்நாகைக் காரோணமே
(5)
வார்கொள் கோலம் முலைமங்கை நல்லார் மகிழ்ந்தேத்தவே
நீர்கொள் கோலச் சடைநெடு வெண்திங்கள் நிகழ்வெய்தவே
போர்கொள் சூலப் படைபுல்கு கையார்க்கிடமாவது
கார்கொள் ஓதம் கழிசூழ் கடல்நாகைக் காரோணமே
(6)
விடையதேறி விடஅரவசைத்த விகிர்தரவர்
படைகொள் பூதம் பலபாட ஆடும் பரமரவர்
உடைகொள் வேங்கை உரிதோல் உடையார்க்கிடமாவது
கடைகொள் செல்வம் கழிசூழ் கடல்நாகைக் காரோணமே
(7)
பொய்து வாழ்வார், மனம் பாழ்படுக்கும் மலர்ப் பூசனை
செய்து வாழ்வார், சிவன்சேவடிக்கே செலும் சிந்தையார்
எய்த வாழ்வார் எழில்நக்கர் எம்மாற்கிடமாவது
கைதல் வேலி கழிசூழ் கடல்நாகைக் காரோணமே
(8)
பத்திரட்டி திரள் தோளுடையான் முடிபத்திற
வத்திரட்டி விரலால் அடர்த்தார்க்கிடமாவது
மைத்திரட்டி வருவெண்திரை மல்கிய மால்கடல்
கத்திரட்டும் கழிசூழ் கடல்நாகைக் காரோணமே
(9)
நல்லபோதில் உறைவானும், மாலும் நடுக்கத்தினால்
அல்லராவர் என நின்ற பெம்மாற்கிடமாவது
மல்லலோங்கி வருவெண்திரை மல்கிய மால்கடல்
கல்லலோதம் கழிசூழ் கடல்நாகைக் காரோணமே
(10)
உயர்ந்த போதின் உருவத்துடை விட்டுழல்வார்களும்
பெயர்ந்த மண்டையிடு பிண்டமா உண்டுழல்வார்களும்
நயந்துகாணா வகைநின்ற நாதர்க்கிடமாவது
கயங்கொள் ஓதம் கழிசூழ் கடல்நாகைக் காரோணமே
(11)
மல்குதண் பூம்புனல் வாய்ந்தொழுகும் வயல் காழியான்
நல்லகேள்வித் தமிழ்ஞான சம்பந்தன், நல்லார்கள் முன்
வல்லவாறே புனைந்தேத்தும் காரோணத்து வண்தமிழ்
சொல்லுவார்க்கும் இவை கேட்பவர்க்கும் துயரில்லையே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page