திருவொற்றியூர் – அப்பர் தேவாரம் (3):

<– திருவொற்றியூர்

 

(1)
ஓம்பினேன் கூட்டை வாளா உள்ளத்தோர் கொடுமை வைத்துக்
காம்பிலா மூழை போலக் கருதிற்றே முகக்க மாட்டேன்
பாம்பின்வாய்த் தேரை போலப் பலபல நினைக்கின்றேனை
ஓம்பிநீ உய்யக் கொள்ளாய் ஒற்றியூர் உடைய கோவே
(2)
மனமெனும் தோணி பற்றி மதியெனும் கோலை ஊன்றிச்
சினமெனும் சரக்கை ஏற்றிச் செறிகடல் ஓடும் போது
மனனெனும் பாறை தாக்கி மறியும் போதறியவொண்ணா
துனையுனும் உணர்வை நல்காய் ஒற்றியூர் உடைய கோவே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page