(1)
ஒற்றி ஊரும் ஒளிமதி பாம்பினை
ஒற்றி ஊரும் அப்பாம்பும் அதனையே
ஒற்றி ஊர ஒருசடை வைத்தவன்
ஒற்றியூர் தொழ நம்வினை யோயுமே
(2)
வாட்டமொன்றுரைக்கும் மலையான் மகள்
ஈட்டவே இருளாடி இடுபிணக்
காட்டிலோரி கடிக்க எடுத்ததோர்
ஓட்டை வெண்தலைக்கை ஒற்றியூரரே
(3)
கூற்றுத் தண்டத்தை அஞ்சிக் குறிக்கொள்மின்
ஆற்றுத் தண்டத்தடக்கும் அரனடி
நீற்றுத் தண்டத்தராய் நினைவார்க்கெலாம்
ஊற்றுத் தண்டொப்பர் போல் ஒற்றியூரரே
(4)
சுற்றும் பேய்சுழலச் சுடுகாட்டெரி
பற்றியாடுவர், பாய்புலித் தோலினர்
மற்றையூர்கள் எல்லாம் பலி தேர்ந்துபோய்
ஒற்றியூர் புக்குறையும் ஒருவரே
(5)
புற்றில் வாளரவாட்டி உமையொடு
பெற்றம் ஏறுகந்தேறும் பெருமையான்
மற்றையாரொடு வானவரும் தொழ
ஒற்றியூருறை வானோர் கபாலியே
(6)
போது தாழ்ந்து புதுமலர் கொண்டுநீர்
மாது தாழ்சடை வைத்த மணாளனார்
ஓது வேதியனார் திருவொற்றியூர்
பாதம் ஏத்தப் பறையும் நம் பாவமே
(7)
பலவும் அன்னங்கள் பன்மலர் மேல்துஞ்சும்
கலவ மஞ்ஞைகள் காரென வெள்குறும்
உலவு பைம்பொழில் சூழ் திருவொற்றியூர்
நிலவினான் அடியே அடை நெஞ்சமே
(8)
ஒன்று போலும் உகந்தவர் ஏறிற்று
ஒன்று போலும் உதைத்துக் களைந்தது
ஒன்று போலொளி மாமதி சூடிற்று
ஒன்று போல் உகந்தார் ஒற்றியூரரே
(9)
படைகொள் பூதத்தர் வேதத்தர் கீதத்தர்
சடைகொள் வெள்ளத்தர், சாந்த வெண்நீற்றினர்
உடையும் தோலுகந்தார் உறை ஒற்றியூர்
அடையும் உள்ளத்தவர் வினை அல்குமே
(10)
வரையினால் உயர் தோளுடை மன்னனை
வரையினார் வலி செற்றவர் வாழ்விடம்
திரையினார் புடைசூழ் திருவொற்றியூர்
உரையினால் பொலிந்தார் உயர்ந்தார்களே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...