திருவையாறு – அப்பர் தேவாரம் (11):

<– திருவையாறு

(1)
அந்திவட்டத் திங்கள் கண்ணியன், ஐயாறமர்ந்து வந்தென்
புந்திவட்டத்திடைப் புக்கு நின்றானையும் பொய் என்பனோ
சிந்திவட்டச் சடைக்கற்றை அலம்பச் சிறிதலர்ந்த
நந்திவட்டத்தொடு கொன்றை வளாவிய நம்பனையே
(2)
பாடகக் கால், கழல் கால், பரிதிக் கதிருக்க அந்தி
நாடகக் கால், நங்கைமுன் செங்கண் ஏனத்தின் பின்நடந்த
காடகக் கால், கணம் கைதொழும் கால், எங்கணாய் நின்றகால்
ஆடகக் கால், அரிமால் தேர வல்லன் ஐயாற்றனவே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page