(1)
கரைந்து கைதொழுவாரையும் காதலன்
வரைந்து வைதெழுவாரையும் வாடலன்
நிரந்த பாரிடத்தோடவர் நித்தலும்
விரைந்து போவது வீழிமிழலைக்கே
(2)
ஏற்று வெல்கொடி ஈசன்தன் ஆதிரை
நாற்றன் சூடுவர் நன்னறும் திங்களார்
நீற்றுச் சந்தன வெள்ளை விரவலார்
வேற்றுக் கோலங்கொள் வீழிமிழலையே
(3)
புனைபொற் சூலத்தன், போர்விடை ஊர்தியான்
வினைவெல் நாகத்தன், வெண்மழு வாளினான்
நினைய நின்றவன் ஈசனையே எனா
வினையிலார் தொழும் வீழிமிழலையே
(4)
மாடத்தாடு மனத்துடன் வைத்தவர்
கோடத்தார், குருக்கேத்திரத்தார் பலர்
பாடத்தார், பழிப்பார் பழிப்பல்லதோர்
வேடத்தார் தொழும் வீழிமிழலையே
(5)
எடுத்த வெல்கொடி ஏறுடையான் தமர்
உடுப்பர் கோவணம், உண்பது பிச்சையே
கெடுப்பதாவது கீழ்நின்ற வல்வினை
விடுத்துப் போவது வீழிமிழலைக்கே
(6)
குழலை யாழ்மொழியார் இசை வேட்கையால்
உழலை யாக்கையை ஊணும் உணர்விலீர்
தழலை நீர்மடிக் கொள்ளல்மின், சாற்றினோம்
மிழலையான் அடிசார விண்ணாள்வரே
(7)
தீரன் தீத்திரளன், சடைத் தங்கிய
நீரன், ஆடிய நீற்றன், வண்டார் கொன்றைத்
தாரன் மாலையன், தண் நறுங்ண்ணியன்
வீரன் வீழிமிழலை விகிர்தனே
(8)
எரியினார், இறையார், இடு காட்டிடை
நரியினார் பரியா மகிழ்கின்றதோர்
பெரியனார், தம் பிறப்பொடு சாதலை
விரியினார் தொழும் வீழிமிழலையே
(9)
நீண்ட சூழ்சடை மேலொர் நிறைமதி
காண்டு சேவடி மேலொர் கனைகழல்
வேண்டுவார் அவர் வீதி புகுந்திலர்
மீண்டும் போவது வீழிமிழலைக்கே
(10)
பாலை யாழொடு செவ்வழி பண்கொள
மாலை வானவர் வந்து வழிபடும்
ஆலையார் அழல் அந்தணர் ஆகுதி
வேலையார் தொழும் வீழிமிழலையே
(11)
மழலையேற்று மணாளன் திருமலை
சுழல ஆர்த்தெடுத்தான் முடி தோளிறக்
கழல்கொள் காலின் திருவிரல் ஊன்றலும்
மிழலையான் அடி வாழ்கென விட்டதே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...