(1)
தோடொர் காதினன் பாடு மறையினன்
காடு பேணி நின்றாடு மருதனே
(2)
கருதார் புரமெய்வர் எருதே இனிதூர்வர்
மருதே இடமாகும் விருதாம் வினைதீர்ப்பே
(3)
எண்ணும் அடியார்கள் அண்ணல் மருதரைப்
பண்ணின் மொழிசொல்ல விண்ணும் தமதாமே
(4)
விரியார் சடைமேனி எரியார் மருதரைத்
தரியாதேத்துவார் பெரியார் உலகிலே
(5)
பந்த விடையேறும் எந்தை மருதரைச்
சிந்தை செய்பவர் புந்தி நல்லரே
(6)
கழலும் சிலம்பார்க்கும் எழிலார் மருதரைத்
தொழலே பேணுவார்க்குழலும் வினைபோமே
(7)
பிறையார் சடைஅண்ணல் மறையார் மருதரை
நிறையால் நினைபவர் குறையார் இன்பமே
(8)
எடுத்தான் புயந்தன்னை அடுத்தார் மருதரைத்
தொடுத்தார் மலர்சூட்ட விடுத்தார் வேட்கையே
(9)
இருவர்க்கெரியாய உருவ மருதரைப்
பரவி ஏத்துவார் மருவி வாழ்வரே
(10)
நின்றுண் சமண்தேரர் என்று மருதரை
அன்றி உரைசொல்ல நன்று மொழியாரே
(11)
கருது சம்பந்தன் மருதர் அடிபாடிப்
பெரிதும் தமிழ்சொல்லப் பொருத வினைபோமே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...