திருவிடைமருதூர் – அப்பர் தேவாரம் (3):

<– திருவிடைமருதூர்

(1)
பறையின் ஓசையும் பாடலின் ஓசையும்
மறையின் ஓசையும் வைகும் அயலெலாம்
இறைவன் எங்கள் பிரான் இடைமருதினில்
உறையும் ஈசனை உள்குமென் உள்ளமே
(2)
மனத்துள் மாயனை மாசறு சோதியை
புனிற்றுப் பிள்ளை வெள்ளை மதிசூடியை
எனக்குத் தாயை, எம்மான் இடைமருதனை
நினைத்திட்டூறி நிறைந்ததென் உள்ளமே
(3)
வண்டணைந்தன வன்னியும் மத்தமும்
கொண்டணிந்த சடைமுடிக் கூத்தனை
எண்திசைக்கும் இடைமருதா என
விண்டு போயறும் மேலை வினைகளே
(4)
துணையிலாமையில் தூங்கிருள் பேய்களோடு
அணையலாவது எமக்கரிதே எனா
இணையிலா இடைமாமருதில் எழு
பணையில் ஆகமம் சொல்லும் தன் பாங்கிக்கே
(5)
மண்ணை உண்டமால் காணான் மலரடி
விண்ணை விண்டயன் காணான் வியன்முடி
மொண்ணை மாமருதா என்றென் மொய்குழல்
பண்ணையாயமும் தானும் பயிலுமே
(6)
மங்கை காணக் கொடார் மண மாலையை
கங்கை காணக் கொடார் முடிக் கண்ணியை
நங்கைமீர் இடைமருதர் இந் நங்கைக்கே
எங்கு வாங்கிக் கொடுத்தார் இதழியே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page