திருவாலங்காடு – சம்பந்தர் தேவாரம்:

<– திருவாலங்காடு

(1)
துஞ்ச வருவாரும் தொழுவிப்பாரும் வழுவிப்போய்
நெஞ்சம் புகுந்தென்னை நினைவிப்பாரும், முனைநட்பாய்
வஞ்சப்படுத்தொருத்தி வாழ்நாள் கொள்ளும் வகைகேட்டு
அஞ்சும் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே
(2)
கேடும் பிறவியும் ஆக்கினாரும், கேடிலா
வீடு மாநெறி விளம்பினார் எம் விகிர்தனார்
காடும் சுடலையும் கைக்கொண்டெல்லிக் கணப்பேயோடு
ஆடும் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே
(3)
கந்தம் கமழ் கொன்றைக் கண்ணி சூடிக், கனலாடி
வெந்த பொடிநீற்றை விளங்கப் பூசும் விகிர்தனார்
கொந்தண் பொழிற்சோலை அரவில் தோன்றிக் கோடல்பூத்து
அந்தண் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே
(4)
பாலமதி சென்னி படரச் சூடி, பழிஓராக்
காலனுயிர் செற்ற காலனாய கருத்தனார்
கோலம் பொழிற்சோலைப் பெடையோடாடி மடமஞ்ஞை
ஆலும் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே
(5)
ஈர்க்கும் புனல்சூடி இளவெண் திங்கள் முதிரவே
பார்க்கும் அரவம் பூண்டாடி வேடம் பயின்றாரும்
கார்க்கொள் கொடிமுல்லை குருந்தமேறிக் கருந்தேன் மொய்த்து
ஆர்க்கும் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே
(6)
பறையும் சிறுகுழலும் யாழும்பூதம் பயிற்றவே
மறையும் பலபாடி மயானத்துறையும் மைந்தனார்
பிறையும் பெரும்புனல் சேர் சடையினாரும் பேடைவண்டு
அறையும் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே
(7)
நுணங்கு மறை பாடியாடி வேடம் பயின்றாரும்
இணங்கு மலைமகளோடு இருகூறொன்றாய் இசைந்தாரும்
வணங்கும் சிறுத்தொண்டர் வைகலேத்தும் வாழ்த்தும் கேட்டு
அணங்கும் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே
(8)
கணையும் வரிசிலையும் எரியும் கூடிக் கவர்ந்துண்ண
இணையில் எயில் மூன்றும் எரித்திட்டார் எம் இறைவனார்
பிணையும் சிறுமறியும் கலையும் எல்லாம் கங்குல்சேர்ந்து
அணையும் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே
(9)
கவிழ மலை தரளக் கடகக் கையால் எடுத்தான் தோள்
பவழ நுனைவிரலால் பையஊன்றிப் பரிந்தாரும்
தவழும் கொடிமுல்லை புறவம்சேர நறவம்பூத்து
அவிழும் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே
(10)
பகலும் இரவும்சேர் பண்பினாரும், நண்போராது
இகலும் இருவர்க்கும் எரியாய்த் தோன்றி நிமிர்ந்தாரும்
புகலும் வழிபாடு வல்லார்க்கென்றும் தீயபோய்
அகலும் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே
(11)
போழம் பலபேசிப் போது சாற்றித் திரிவாரும்
வேழம் வருமளவும் வெயிலே துற்றித் திரிவாரும்
கேழல் வினை போகக் கேட்பிப்பாரும், கேடிலா
ஆழ்வர் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page