(1)
வேம்பினைப் பேசி, விடக்கினை ஓம்பி, வினைபெருக்கித்
தூம்பினைத் தூர்த்தங்கோர், சுற்றம் துணையென்று இருத்திர் தொண்டீர்
ஆம்பலம் பூம்பொய்கை ஆரூர் அமர்ந்தான் அடிநிழற்கீழ்ச்
சாம்பலைப் பூசிச் சலமின்றித் தொண்டுபட்டு உய்ம்மின்களே
(2)
ஆராய்ந்தடித்தொண்டர் ஆணிப்பொன் ஆரூர் அகத்தடக்கிப்
பாரூர் பரிப்பத்தம் பங்குனி உத்திரம் பாற்படுத்தான்
நாரூர் நறுமலர் நாதன் அடித்தொண்டன் நம்பிநந்தி
நீரால் திருவிளக்கிட்டமை நீள்நாடு அறியுமன்றே
(3)
பூம் படிமக்கலம் பொன் படிமக்கலம் என்றிவற்றால்
ஆம் படிமக்கலமாகிலும் ஆரூர் இனிதமர்ந்தார்
தாம் படிமக்கலம் வேண்டுவரேல் தமிழ் மாலைகளால்
நாம் படிமக்கலம் செய்து தொழுதும் மடநெஞ்சமே
(4)
துடிக்கின்ற பாம்பரை ஆர்த்துத், துளங்கா மதியணிந்து
முடித்தொண்டராகி முனிவர் பணிசெய்வதேயும் அன்றிப்
பொடிக்கொண்டு பூசிப்புகும் தொண்டர் பாதம் பொறுத்த பொற்பால்
அடித்தொண்டன் நந்தி என்பான்உளன் ஆரூர் அமுதினுக்கே
(5)
கரும்பு பிடித்தவர் காயப்பட்டார், அங்கொர் கோடலியால்
இரும்பு பிடித்தவர் இன்புறப் பட்டார் இவர்கள் நிற்க
அரும்பவிழ் தண்பொழில் சூழ் அணியாரூர் அமர்ந்தபெம்மான்
விரும்பு மனத்தினை யாதென்று நானுன்னை வேண்டுவதே
(6)
கொடிகொள் விதானம் கவரி பறைசங்கம் கைவிளக்கோடு
இடிவில் பெருஞ்செல்வம் எய்துவர் எய்தியும், ஊனமில்லா
அடிகளும் ஆரூர் அகத்தினராயினும், அந்தவளப்
பொடிகொண்டு அணிவார்க்கு இருளொக்கும் நந்தி புறப்படிலே
(7)
…
(8)
…
(9)
…
(10)
சங்கு ஒலிப்பித்திடுமின், சிறு காலைத் தடவழலில்
குங்குலியப் புகைக் கூட்டென்றும் காட்டி, இருபதுதோள்
அங்குலம் வைத்தவன் செங்குருதிப் புனலோட அஞ்ஞான்று
அங்குலி வைத்தான் அடித்தாமரை என்னை ஆண்டனவே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...