திருவதிகை – அப்பர் தேவாரம் (10):

<– திருவதிகை

(1)
மாசிலொள் வாள்போல் மறியும் மணிநீர்த் திரைத்தொகுதி
ஊசலை ஆடியங்கொண் சிறை அன்னம் உறங்கலுற்றால்
பாசறை நீலம் பருகிய வண்டுபண் பாடல் கண்டு
வீசும் கெடில வடகரைத்தே எந்தை வீரட்டமே
(2)
பைங்கால் தவளை பறைகொட்டப் பாசிலை நீர்ப்படுகர்
அங்கால் குவளைமேல் ஆவி உயிர்ப்ப அருகுலவும்
செங்கால் குருகிவை சேரும் செறிகெடிலக் கரைத்தே
வெங்கால் குருசிலை வீரன் அருள் வைத்த வீரட்டமே
(3)
அம்மலர்க் கண்ணியர் அஞ்சனம் செந்துவர்வாய் இளையார்
வெம்முலைச் சாந்தம் விலைபெறு மாலை எடுத்தவர்கள்
தம் மருங்குற்கிரங்கார் தடந்தோள் மெலியக் குடைவார்
விம்மு புனல் கெடிலக் கரைத்தே எந்தை வீரட்டமே
(4)
மீனுடைத் தண்புனல் வீரட்டரே, நும்மை வேண்டுகின்றது
யானுடைச் சில்குறை ஒன்றுள, தானறும் தண்ணெருக்கின்
தேனுடைக் கொன்றைச் சடையுடைக் கங்கைத் திரைதவழும்
கூனுடைத் திங்கள் குழவி எப்போதும் குறிக்கொள்மினே
(5)
ஆரட்டதேனும் இரந்துண்டு அகமகவன் திரிந்து
வேரட்ட நிற்பித்திடுகின்றதால், விரிநீர் பரவைச்
சூரட்ட வேலவன் தாதையைச், சூழ்வயலார் அதிகை
வீரட்டத்தானை விரும்பா வரும் பாவ வேதனையே
(6)
படர்பொன் சடையும், பகுவாய் அரவும், பனிமதியும்
சுடலைப் பொடியும் எல்லாம் உளவே, அவர் தூயதெண்ணீர்க்
கெடிலக் கரைத் திருவீரட்டர் ஆவர், கெட்டேன், அடைந்தார்
நடலைக்கு நற்றுணையாகும் கண்டீர் அவர் நாமங்களே
(7)
காளம் கடந்ததொர் கண்டத்தராகிக் கண்ணார் கெடில
நாளம் கடிக்கொர் நகரமும், மாதிற்கு நன்கிசைந்த
தாளங்கள் கொண்டும் குழல்கொண்டும் யாழ்கொண்டும் தாம்அங்ஙனே
வேளங்கள் கொண்டும் விசும்பு செல்வார் அவர் வீரட்டரே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page