(1)
செல்வப் புனற்கெடில வீரட்டமும்
சிற்றேமமும், பெருந்தண் குற்றாலமும்
தில்லைச் சிற்றம்பலமும், தென்கூடலும்
தென்ஆனைக்காவும், சிராப்பள்ளியும்
நல்லூரும், தேவன்குடி மருகலும்
நல்லவர்கள் தொழுதேத்து நாரையூரும்
கல்லலகு நெடும்புருவக் கபாலமேந்திக்
கட்டங்கத்தோடுறைவார் காப்புக்களே
(2)
தீர்த்தப் புனற்கெடில வீரட்டமும்
திருக்கோவல் வீரட்டம், வெண்ணெய் நல்லூர்
ஆர்த்தருவி வீழ்சுனை நீர் அண்ணாமலை
அறையணி நல்லூரும், அரநெறியும்
ஏத்துமின்கள், நீரேத்த நின்ற ஈசன்
இடைமருது, இன்னம்பர், ஏகம்பமும்
கார்த்தயங்கு சோலைக் கயிலாயமும்
கண்ணுதலான் தன்னுடைய காப்புக்களே
(3)
சிறையார் புனற்கெடில வீரட்டமும்
திருப்பாதிரிப்புலியூர், திருஆமாத்தூர்
துறையார் வன முனிகளேத்த நின்ற
சோற்றுத்துறை, துருத்தி, நெய்த்தானமும்
அறையார் புனலொழுகு காவிரி சூழ்
ஐயாற்றமுதர், பழனம், நல்ல
கறையார் பொழில்புடைசூழ் கானப்பேரும்
கழுக்குன்றும் தம்முடைய காப்புக்களே
(4)
திரையார் புனற்கெடில வீரட்டமும்
திருவாரூர், தேவூர், திருநெல்லிக்கா
உரையார் தொழநின்ற ஒற்றியூரும்
ஓத்தூரும், மாற்பேறும், மாந்துறையும்
வரையார் அருவிசூழ் மாநதியும்
மாகாளம், கேதாரம், மாமேருவும்
கரையார் புனலொழுகு காவிரிசூழ்
கடம்பந்துறை உறைவார் காப்புக்களே
(5)
செழுநீர்ப் புனற்கெடில வீரட்டமும்
திரிபுராந்தகம், தென்னார் தேவீச்சரம்
கொழுநீர் புடைசுழிக்கும் கோட்டுக்காவும்
குடமூக்கும், கோகரணம், கோலக்காவும்
பழிநீர்மை இல்லாப் பனங்காட்டூரும்
பனையூர், பயற்றூர், பராய்த்துறையும்
கழுநீர் மதுவிரியும் காளிங்கமும்
கணபதீச்சரத்தார் தம் காப்புக்களே
(6)
தெய்வப் புனற்கெடில வீரட்டமும்
செழுந்தண் பிடவூரும் சென்று நின்று
பவ்வம் திரியும் பருப்பதமும்
பறியலூர் வீரட்டம், பாவநாசம்
மவ்வம் திரையும் மணிமுத்தமும்
மறைக்காடும், வாய்மூர், வலஞ்சுழியும்
கவ்வை வரிவண்டு பண்ணே பாடும்
கழிப்பாலை தம்முடைய காப்புக்களே
(7)
தெண்ணீர்ப் புனற்கெடில வீரட்டமும்
சீர்காழி, வல்லம், திருவேட்டியும்
உண்ணீரார் ஏடகமும், ஊறல், அம்பர்
உறையூர், நறையூர், அரண நல்லூர்
விண்ணார் விடையார் விளமர், வெண்ணி
மீயச்சூர், வீழிமிழலை, மிக்க
கண்ணார் நுதலார் கரபுரமும்
காபாலியார் அவர்தம் காப்புக்களே
(8)
தெள்ளும் புனற்கெடில வீரட்டமும்
திண்டீச்சரமும், திருப்புகலூர்
எள்ளும் படையான் இடைத்தானமும்
ஏயீச்சுரமும், நல்லேமம், கூடல்
கொள்ளும் இலயத்தார் கோடிகாவும்
குரங்கணில் முட்டமும், குறும்பலாவும்
கள்ளருந்தத் தெள்ளியார் உள்கியேத்தும்
காரோணம் தம்முடைய காப்புக்களே
(9)
சீரார் புனற்கெடில வீரட்டமும்
திருக்காட்டுப்பள்ளி, திருவெண்காடும்
பாரார் பரவும் சீர்ப் பைஞ்ஞீலியும்
பந்தணை நல்லூரும், பாசூர், நல்லம்
நீரார் நிறைவயல் சூழ் நின்றியூரும்
நெடுங்களமும், நெல்வெண்ணெய், நெல்வாயிலும்
காரார் கமழ் கொன்றைத் தாரார்க்கென்றும்
கடவூரில் வீரட்டம் காப்புக்களே
(10)
சிந்தும் புனற்கெடில வீரட்டமும்
திருவாஞ்சியமும், திருநள்ளாறும்
அந்தண் பொழில்புடை சூழ் அயோகந்தியும்
ஆக்கூரும், ஆவூரும், ஆன்பட்டியும்
எந்தம் பெருமாற்கிடமாவதாம்
இடைச்சுரமும், எந்தை தலைச்சங்காடும்
கந்தம் கமழும் கரவீரமும்
கடம்பூர்க் கரக்கோயில் காப்புக்களே
(11)
தேனார் புனற்கெடில வீரட்டமும்
திருச்செம்பொன்பள்ளி, திருப்பூவணம்
வானோர் வணங்கும் மணஞ்சேரியும்
மதில்உஞ்சை மாகாளம், வாரணாசி
ஏனோர்கள் ஏத்தும் வெகுளீச்சரம்
இலங்கார் பருப்பதத்தோடு ஏணார் சோலைக்
கானார் மயிலார் கருமாரியும்
கறைமிடற்றார் தம்முடைய காப்புக்களே
(12)
திருநீர்ப் புனற்கெடில வீரட்டமும்
திருவளப்பூர், தெற்கேறு சித்தவடம்
வருநீர் வளம்பெருகு மாநிருபமும்
மயிலாப்பில் மன்னினார், மன்னியேத்தும்
பெருநீர் வளர் சடையான் பேணிநின்ற
பிரமபுரம், சுழியல், பெண்ணாகடம்
கருநீல வண்டரற்றும் காளத்தியும்
கயிலாயம் தம்முடைய காப்புக்களே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...