(குறிப்பு: சுந்தரரால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)
(சுந்தரர் தேவாரம்):
(1)
கொடுகு வெஞ்சிலை வடுக வேடுவர் விரவலாமை சொல்லித்
திடுகு மொட்டெனக் குத்திக் கூறைகொண்டாறலைக்கும் இடம்
முடுகு நாறிய வடுகர் வாழ் முருகன்பூண்டி மாநகர்வாய்
இடுகு நுண்ணிடை மங்கை தன்னொடும் எத்துக்கிங்கிருந்தீர் எம்பிரானீரே
(2)
வில்லைக் காட்டி வெருட்டி வேடுவர் விரவலாமை சொல்லிக்
கல்லினால் எறிந்திட்டும் மோதியும் கூறை கொள்ளுமிடம்
முல்லைத் தாது மணங்கமழ் முருகன்பூண்டி மாநகர்வாய்
எல்லைக் காப்பதொன்றில்லையாகில் நீர் எத்துக்கிங்கிருந்தீர் எம்பிரானீரே
(3)
பசுக்களே கொன்று தின்று பாவிகள் பாவம் ஒன்றறியார்
உசிர்க் கொலை பல நேர்ந்து நாள்தொறும் கூறை கொள்ளுமிடம்
முசுக்கள் போல்பல வேடர்வாழ் முருகன்பூண்டி மாநகர்வாய்
இசுக்கழியப் பயிக்கம் கொண்டுநீர் எத்துக்கிங்கிருந்தீர் எம்பிரானீரே
(4)
பீறல் கூறை உடுத்தொர் பத்திரம்கட்டி வெட்டினராய்ச்
சூறைப் பங்கியராகி நாள்தொறும் கூறை கொள்ளுமிடம்
மோறை வேடுவர் கூடி வாழ் முருகன்பூண்டி மாநகர்வாய்
ஏறுகால் இற்றதில்லையாய் விடில் எத்துக்கிங்கிருந்தீர் எம்பிரானீரே
(5)
தயங்கு தோலை உடுத்துச் சங்கர, சாம வேதமோதி
மயங்கி ஊரிடு பிச்சை கொண்டுணும் மார்க்கம் ஒன்றறியீர்
முயங்கு பூண்முலை மங்கையாளொடு முருகன்பூண்டி மாநகர்வாய்
இயங்கவும் மிடுக்குடையராய் விடில் எத்துக்கிங்கிருந்தீர் எம்பிரானீரே
(6)
விட்டிசைப்பன கொக்கரைகொடு கொட்டி தத்தளகம்
கொட்டிப் பாடும் இத்துந்துமியொடு குடமுழா நீர்மகிழ்வீர்
மொட்டலர்ந்து மணம்கமழ் முருகன்பூண்டி மாநகர்வாய்
இட்ட பிச்சை கொண்டு உண்பதாகில்நீர் எத்துக்கிங்கிருந்தீர் எம்பிரானீரே
(7)
வேதமோதி வெண்ணீறு பூசி, வெண்கோவணம் தற்றயலே
ஓதமேவிய ஒற்றியூரையும் உத்திர நீர்மகிழ்வீர்
மோதி வேடுவர் கூறை கொள்ளும் முருகன்பூண்டி மாநகர்வாய்
ஏதுகாரணம் ஏதுகாவல் கொண்டெத்துக்கிங்கிருந்தீர் எம்பிரானீரே
(8)
படஅரவு நுண்ணேர்இடைப் பணைத்தோள் வரிநெடுங்கண்
மடவரல் உமைநங்கை தன்னையொர் பாகம் வைத்துகந்தீர்
முடவர்அல்லீர், இடரிலீர், முருகன்பூண்டி மாநகர்வாய்
இடவமேறியும் போவதாகில் நீர் எத்துக்கிங்கிருந்தீர் எம்பிரானீரே
(9)
சாந்தமாக வெண்ணீறு பூசி, வெண்பல்தலை கலனா
வேய்ந்த வெண்பிறைக் கண்ணி தன்னையொர் பாகம் வைத்துகந்தீர்
மோந்தையோடு முழக்கறா முருகன்பூண்டி மாநகர்வாய்
ஏந்து பூண்முலை மங்கை தன்னொடும் எத்துக்கிங்கிருந்தீர் எம்பிரானீரே
(10)
முந்தி வானவர் தாந்தொழும் முருகன்பூண்டி மாநகர்வாய்ப்
பந்தணை விரல் பாவை தன்னையொர் பாகம் வைத்தவனைச்
சிந்தையில் சிவ தொண்டன் ஊரன் உரைத்தன பத்தும் கொண்டு
எந்தம் அடிகளை ஏத்துவார் இடரொன்றும் தாமிலரே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...