திருமுதுகுன்றம் – சுந்தரர் தேவாரம் (2):

<– திருமுதுகுன்றம்

(1)
மெய்யை முற்றப் பொடிப் பூசியொர் நம்பி
    வேதம் நான்கும் விரித்தோதியொர் நம்பி
கையில்ஓர் வெண்மழு ஏந்தியொர் நம்பி
    கண்ணும் மூன்றுடையான் ஒரு நம்பி
செய்ய நம்பி, சிறு செஞ்சடை நம்பி
    திரிபுரம் தீயெழச் செற்றதோர் வில்லால்
எய்த நம்பி, என்னை ஆளுடை நம்பி
    எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே
(2)
திங்கள் நம்பி முடிமேல், அடியார் பால்
    சிறந்த நம்பி, பிறந்த உயிர்க்கெல்லாம்
அங்கண் நம்பி, அருள் மால் விசும்பாளும்
    அமரர் நம்பி, குமரன் முதல் தேவர்
தங்கள் நம்பி, தவத்துக்கொரு நம்பி
    தாதை என்றுன் சரண் பணிந்தேத்தும்
எங்கள் நம்பி, என்னை ஆளுடை நம்பி
    எழுபிறப்பும் எங்கள் நம்பிகண்டாயே
(3)
வருந்த அன்றும் மதயானை உரித்த
    வழக்கு நம்பி, முழக்கும் கடல் நஞ்சம்
அருந்து நம்பி, அமரர்க்கமுதீந்த
    அருளின் நம்பி, பொருளால் அருநட்டம்
புரிந்த நம்பி, புரிநூலுடை நம்பி
    பொழுதும் விண்ணும் முழுதும் பலவாகி
இருந்த நம்பி, என்னை ஆளுடை நம்பி
    எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே
(4)
ஊறு நம்பி அமுதா, உயிர்க்கெல்லாம்
    உரிய நம்பி, தெரியம்மறை அங்கம்
கூறு நம்பி முனிவர்க்கு, அருங்கூற்றைக்
    குமைத்த நம்பி, குமையாப் புலன் ஐந்தும்
சீறு நம்பி, திருவெள்ளடை நம்பி
    செங்கண் வெள்ளைச் செழும்கோட்டு எருதென்றும்
ஏறு நம்பி, என்னை ஆளுடை நம்பி
    எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே
(5)
குற்ற நம்பி, குறுகார் எயில் மூன்றைக்
    குலைத்த நம்பி, சிலையா வரை கையில்
பற்று நம்பி, பரமானந்த வெள்ளம்
    பணிக்கும் நம்பி எனப் பாடுதல் அல்லால்
மற்று நம்பி உனக்கென் செய வல்லேன்
    மதியிலியேன் படு வெந்துயர் எல்லாம்
எற்று நம்பி, என்னை ஆளுடை நம்பி
    எழு பிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே
(6)
அரித்த நம்பி, அடி கைதொழுவார் நோய்
    ஆண்ட நம்பி, முன்னை ஈண்டுலகங்கள்
தெரித்த நம்பி, ஒரு சேவுடை நம்பி
    சில் பலிக்கென்றகந்தோறும் மெய் வேடம்
தரித்த நம்பி, சமயங்களின் நம்பி
    தக்கன்தன் வேள்விபுக்கு அன்றிமையோரை
இரித்த நம்பி, என்னை ஆளுடை நம்பி
    எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே
(7)
பின்னை நம்பும் புயத்தான் நெடுமாலும்
    பிரமனும் என்றிவர் நாடியும் காணா
உன்னை நம்பி, ஒருவர்க்கு எய்தலாமே
    உலகு நம்பி, உரை செய்யும் அதல்லால்
முன்னை நம்பி, பின்னும் வார்சடை நம்பி
    முழுதிவை இத்தனையும் தொகுத்தாண்டது
என்னை நம்பி, எம்பிரானாய நம்பி
    எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே
(8)
சொல்லை நம்பி, பொருளாய் நின்ற நம்பி
    தோற்றம் ஈறு முதலாகிய நம்பி
வல்லை நம்பி, அடியார்க்கருள் செய்ய
    வருந்தி நம்பி உனக்காட் செயகில்லார்
அல்லல் நம்பி படுகின்றதென், நாடி
    அணங்கொரு பாகம்வைத்து, எண்கணம் போற்ற
இல்ல நம்பி இடுபிச்சை கொள் நம்பி
    எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே
(9)
காண்டு நம்பி கழற் சேவடி, என்றும்
    கலந்துனைக் காதலித்து ஆட்செய்கிற்பாரை
ஆண்டுநம்பி, அவர் முன்கதி சேர
    அருளும் நம்பி, குருமாப்பிறை பாம்பைத்
தீண்டு நம்பி, சென்னியில் கன்னி தங்கத்
    திருத்து நம்பி, பொய்ச் சமண்பொருளாகி
ஈண்டு நம்பி, இமையோர் தொழு நம்பி
    எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே
(10)
கரக்கும் நம்பி கசியாதவர் தம்மைக்
கசிந்தவர்க்கிம்மையோடு அம்மையில் இன்பம்
பெருக்கு நம்பி
…..

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page