திருமுதுகுன்றம் – சம்பந்தர் தேவாரம் (6):

<– திருமுதுகுன்றம்

(1)
முரசதிர்ந்தெழு தரு முதுகுன்ற மேவிய
பரசமர் படையுடையீரே
பரசமர் படையுடையீர் உமைப் பரவுவார்
அரசர்கள் உலகில் ஆவாரே
(2)
மொய் குழலாளொடு முதுகுன்ற மேவிய
பையரவம் அசைத்தீரே
பையரவம் அசைத்தீர் உமைப் பாடுவார்
நைவிலர் நாள்தொறு நலமே
(3)
முழவமர் பொழிலணி முதுகுன்ற மேவிய
மழவிடை அதுவுடையீரே
மழவிடை அதுவுடையீர் உமை வாழ்த்துவார்
பழியொடு பகையிலர் தாமே
(4)
முருகமர் பொழிலணி முதுகுன்ற மேவிய
உருவமர் சடைமுடியீரே
உருவமர் சடைமுடியீர் உமை ஓதுவார்
திருவொடு தேசினர் தாமே
(5)
(6)
(7)
(8)
முத்தி தரும்உயர் முதுகுன்ற மேவிய
பத்து முடி அடர்த்தீரே
பத்து முடி அடர்த்தீர் உமைப் பாடுவார்
சித்த நல்லவ்வடியாரே
(9)
முயன்றவர் அருள்பெறு முதுகுன்ற மேவியன்று
இயன்றவர் அறிவரியீரே
இயன்றவர் அறிவரியீர் உமை ஏத்துவார்
பயன்தலை நிற்பவர் தாமே
(10)
மொட்டலர் பொழிலணி முதுகுன்ற மேவிய
கட்டமண் தேரைக் காய்ந்தீரே
கட்டமண் தேரைக் காய்ந்தீர் உமைக் கருதுவார்
சிட்டர்கள் சீர்பெறுவாரே
(11)
மூடிய சோலைசூழ் முதுகுன்றத்து ஈசனை
நாடிய ஞானசம்பந்தன்
நாடிய ஞானசம்பந்தன செந்தமிழ்
பாடிய அவர் பழியிலரே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page