திருமுதுகுன்றம் – சம்பந்தர் தேவாரம் (7):

<– திருமுதுகுன்றம்

(1)
தேவராயும், அசுரராயும், சித்தர், செழுமறைசேர்
நாவராயும், நண்ணு பாரும் விண்ணெரிகால் நீரும்
மேவராய, விரைமலரோன் செங்கண்மால் ஈசனென்னும்
மூவராய முதலொருவன் மேயது முதுகுன்றே
(2)
பற்றுமாகி வானுளோர்க்குப், பல்கதிரோன், மதி,பார்
எற்றுநீர், தீக்காலும், மேலை விண், இயமானனோடு
மற்றுமாதோர் பல்லுயிராய் மாலயனும் மறைகள்
முற்றுமாகி வேறுமானான் மேயது முதுகுன்றே
(3)
வாரி, மாகம்வைகு திங்கள், வாளரவம் சூடி
நாரிபாகம் நயந்து, பூமேல் நான்முகன் தன்தலையில்
சீரிதாகப் பலிகொள் செல்வன், செற்றலும் தோன்றியதோர்
மூரிநாகத்துரிவை போர்த்தான் மேயது முதுகுன்றே
(4)
பாடுவாருக்கருளும் எந்தை, பனிமுது பௌவ முந்நீர்
நீடுபாரும் முழுதும்ஓடி, அண்டர்நிலை கெடலும்
நாடுதானும் மூடும்ஒடி, ஞாலமும் நான்முகனும்
ஊடுகாண மூடும் வெள்ளத்துயர்ந்தது முதுகுன்றே
(5)
வழங்கு திங்கள், வன்னிமத்த, மாசுண மீசணவிச்
செழுங்கல் வேந்தன் செல்வி காணத், தேவர் திசை வணங்கத்
தழங்கு மொந்தை தக்கைமிக்க பேய்க்கணம் பூதம்சூழ
முழங்கு செந்தீ ஏந்தியாடி மேயது முதுகுன்றே
(6)
சுழிந்த கங்கை, தோய்ந்த திங்கள், தொல்லரா நல்லிதழி
சழிந்த சென்னிச் சைவவேடம் தான்நினைந்து, ஐம்புலனும்
அழிந்தசிந்தை அந்தணாளர்க்கறம் பொருள் இன்பம்வீடு
மொழிந்த வாயான் முக்கண்ஆதி மேயது முதுகுன்றே
(7)
(8)
மயங்கு மாயம் வல்லராகி, வானினொடு நீரும்
இயங்குவோருக்கிறைவனாய இராவணன் தோள் நெரித்த
புயங்கராக மாநடத்தன், புணர்முலை மாதுமையாள்
முயங்கு மார்பன், முனிவர்ஏத்த மேயது முதுகுன்றே
(9)
ஞாலமுண்ட மாலும், மற்றை நான்முகனும் அறியாக்
கோலம் அண்டர் சிந்தை கொள்ளார்,  ஆயினும் கொய் மலரால்
ஏலஇண்டை கட்டி, நாமம் இசைய எப்போதும் ஏத்தும்
மூலமுண்ட நீற்றர் வாயால் மேயது முதுகுன்றே
(10)
உறிகொள் கையர், சீவரத்தர், உண்டுழல்  மிண்டர் சொல்லை
நெறிகளென்ன நினைவுறாதே, நித்தலும்கை தொழுமின்
மறிகொள் கையன், வங்க முந்நீர்ப் பொங்கு விடத்தையுண்ட
முறிகொள் மேனி மங்கைபங்கன் மேயது முதுகுன்றே
(11)
மொய்த்து வானோர் பல்கணங்கள் வணங்கும் முதுகுன்றைப்
பித்தர் வேடம் பெருமை என்னும் பிரமபுரத் தலைவன்
…..

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page