(1)
மாணிக்கு உயிர்பெறக் கூற்றை உதைத்தன; மாவலிபால்
காணிக்கிரந்தவன் காண்டற்கரியன; கண்ட தொண்டர்
பேணிக் கிடந்து பரவப் படுவன; பேர்த்தும் அஃதே
மாணிக்கமாவன மாற்பேறுடையான் மலரடியே
(2)
கருடத் தனிப்பாகன் காண்டற்கரியன; காதல் செய்யில்
குருடர்க்கு முன்னே குடிகொண்டிருப்பன; கோலமல்கு
செருடக் கடிமலர்ச் செல்வி தன் செங்கமலக் கரத்தால்
வருடச் சிவப்பன, மாற்பேறுடையான் மலரடியே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...